பாபர் அசாமின் புகழால் முடங்கிய சமர்செட் இணையதளம்!

Updated: 07 August 2019 18:16 IST

சமர்செட்டின் முதல் டி20 ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் பற்றி ரசிகர்கள் அதிகம் தேடியதே இதற்கு காரணமாக கூறப்பட்டுள்ளது.

Pakistan Cricketer Babar Azams Popularity Crashes Somerset Website
விடாலிடி டி20 லீக்கில் 6 போட்டிகளில் 267 ரன்களை குவித்துள்ளார் பாபர் அசாம். © Image tweeted by @SomersetCCC

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் தற்போது சமர்செட் அணிக்காக விடாலிடி டி20 லீக்கில் ஆடி வருகிறார். அவரது புகழ் காரணமாக அவரைப்பற்றி அதிகமாக இணையத்தில் தேடியுள்ளனர்.  இதனால் சமர்செட்டின் இணையதளம் சிறிது நேரம் முடங்கியது. சமர்செட்டின் முதல் டி20 ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் பற்றி ரசிகர்கள் அதிகம் தேடியதே இதற்கு காரணமாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய சமர்செட் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் பென் வாரன் க்ளப்பின் இணையதளத்தை இன்னும் மேம்படுத்தவுள்ளதாக தெரிவித்தார். இந்த போட்டியில் 83 ரன்கள் குவித்தார். இதனை 15 லட்சம் பேர் பார்த்தனர். 

24 வயதான அவர் பாகிஸ்தான் அணிக்காக உலகக் கோப்பையில் 474 ரன்களை குவித்தார். தற்போது உலகின் நம்பர் 1 டி20 வீரராகவும் உள்ளார்.

விடாலிடி டி20 லீக்கில் 6 போட்டிகளில் 267 ரன்களை குவித்துள்ளார் பாபர் அசாம்.

பாபர் அசாம் சமர்செட்டுக்கு கவுண்டி போட்டிகளிலும் ஆடவுள்ளார். .

4 நாள் போட்டிகளிலும் பாபர் ஆட சம்மதித்தார். அது இந்த டி20 தொடருக்கு நடுவே அமைந்துவிட்டது என்றார் சமர்செட் பயிற்சியாளர்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"கோலி மற்றும் கேன் வில்லியம்சன் இருவரையும் பின்பற்றுவேன்" - பாபர் அசாம்!
"கோலி மற்றும் கேன் வில்லியம்சன் இருவரையும் பின்பற்றுவேன்" - பாபர் அசாம்!
கேப்டன் பதவியிலிருந்து சர்பராஸ் அகமது நீக்கம்... பிசிபியை விமர்சித்த ரசிகர்கள்!
கேப்டன் பதவியிலிருந்து சர்பராஸ் அகமது நீக்கம்... பிசிபியை விமர்சித்த ரசிகர்கள்!
பாகிஸ்தான் கேப்டன் பதவியிலிருந்து சர்பராஸ் அகமது அதிரடி நீக்கம்!
பாகிஸ்தான் கேப்டன் பதவியிலிருந்து சர்பராஸ் அகமது அதிரடி நீக்கம்!
பாகிஸ்தான் vs இலங்கை: பாபர் அஸாம் 1000 ரன்கள் எடுத்த வேகமான வீரரானார்!
பாகிஸ்தான் vs இலங்கை: பாபர் அஸாம் 1000 ரன்கள் எடுத்த வேகமான வீரரானார்!
பாபர் அசாமின் புகழால் முடங்கிய சமர்செட் இணையதளம்!
பாபர் அசாமின் புகழால் முடங்கிய சமர்செட் இணையதளம்!
Advertisement