சர்பராஸ் அகமது நீக்கத்துக்கு பிறகு பிசிபி வெளியிட்ட வீடியோவால் எழுந்த சர்ச்சை!

Updated: 21 October 2019 09:57 IST

ஒரு பத்திரிகையாளர் அந்த வீடியோவை மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இது பிசிபியின் அதிகாரப்பூர்வ கணக்கிலிருந்து மன்னிப்பு கேட்க வழிவகுத்தது.

Pakistan Cricket Board Trolled For "Untimely" Tweet After Sarfaraz Ahmed Sacking
டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்த சர்பராஸ் அகமதுவை அந்தப் பதவியில் இருந்து நீக்கியது பிசிபி. © AFP

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) வெள்ளிக்கிழமை டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்த சர்பராஸ் அகமதுவை அந்தப் பதவியில் இருந்து நீக்கியது. சர்பராஸ் அகமதுக்கு பதிலாக, மூத்த பேட்ஸ்மேன் அசார் அலி டெஸ்ட் கேப்டனாகவும், பாபர் அசாம் டி20 அணியையும் வழிநடத்தவுள்ளனர். புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்ட உடனேயே, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றொரு ட்வீட்டிற்கு விடையிறுக்கும் வகையில் ஒரு வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டது. அதில் ஒரு பயிற்சியின்போது பாகிஸ்தான் வீரர்கள் நடனமாடுவதைக் காணலாம். ஆனால் அது விரைவில் நீக்கப்பட்டது.

இருப்பினும், ஒரு பத்திரிகையாளர் அந்த வீடியோவை மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இது பிசிபியின் அதிகாரப்பூர்வ கணக்கிலிருந்து மன்னிப்பு கேட்க வழிவகுத்தது.

"சர்ஃபராஸ் நீக்கப்பட்ட பின்னர் @TheRealPCB ட்விட் தருணங்கள் இங்கே உள்ளன. கிளாசி" என்று அவர் ட்விட் செய்துள்ளார்.

"இந்தப் பதிவுக்கு பிசிபி மன்னிப்பு கோருகிறது மற்றும் அது பதிவிடப்பட்ட நேரம் தவறானது என்று ஏற்றுகொள்கிறது. #T20WorldCup விளம்பர பிரசாரத்தின் ஒரு வருடத்தின் ஒரு பகுதியாக இது முன் திட்டமிடப்பட்ட பதிவாகும். இது பதிவிடப்பட்ட நேரம் கேப்டன்சி அறிவிப்புடன் மோதியது, பிசிபி தனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறது," என்று பிசிபி ட்விட் செய்தது.

பிசிபியின் விளக்கத்தில் ரசிகர்கள் மகிழ்ச்சியடையவில்லை, மன்னிப்பு கேட்டது "பரிதாபகரமானது" மற்றும் "அவமரியாதை" என்று அழைக்கப்படுகிறது.

பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், புதிய கேப்டன்களுக்கு சர்பராஸ் அகமது தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

"அசார் அலி, பாபர் அசாம் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆகியோருக்கு எனது நல்வாழ்த்துக்கள். அவர்கள் தொடர்ந்து வலுவாகவும் வளருவார்கள் என்று நான் நம்புகிறேன், "என்று சர்பராஸ் கூறினார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐஎம்ஜி-ரிலையன்ஸ் மீது சேதக் கோரிக்கை: தகவல்
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐஎம்ஜி-ரிலையன்ஸ் மீது சேதக் கோரிக்கை: தகவல்
சர்பராஸ் அகமது நீக்கத்துக்கு பிறகு பிசிபி வெளியிட்ட வீடியோவால் எழுந்த சர்ச்சை!
சர்பராஸ் அகமது நீக்கத்துக்கு பிறகு பிசிபி வெளியிட்ட வீடியோவால் எழுந்த சர்ச்சை!
கேப்டன் பதவியிலிருந்து சர்பராஸ் அகமது நீக்கம்... பிசிபியை விமர்சித்த ரசிகர்கள்!
கேப்டன் பதவியிலிருந்து சர்பராஸ் அகமது நீக்கம்... பிசிபியை விமர்சித்த ரசிகர்கள்!
பாகிஸ்தான் கேப்டன் பதவியிலிருந்து சர்பராஸ் அகமது அதிரடி நீக்கம்!
பாகிஸ்தான் கேப்டன் பதவியிலிருந்து சர்பராஸ் அகமது அதிரடி நீக்கம்!
அக்ரம், மிஸ்பா மீது அதிருப்தியை வெளிப்படுத்திய மிக்கி ஆர்தர்!
அக்ரம், மிஸ்பா மீது அதிருப்தியை வெளிப்படுத்திய மிக்கி ஆர்தர்!
Advertisement