இனவெறியை தூண்டிய பேச்சு : 4 போட்டிகளில் பங்கேற்க பாக். கேப்டன் சர்ப்ராஸுக்கு தடை

Updated: 27 January 2019 18:25 IST

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் அந்நாட்டின் ஆல்ரவுண்டர் ஆண்டில் பெலுக்வாயோவை விமர்சித்து இனவெறியை தூண்டும் வகையில் சர்ப்ராஸ் பேசினார்.

Sarfraz Ahmed, Pakistan Captain, Given 4-Match Suspension For Racist Remark
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது. © AFC

இனவெறியை தூண்டிய பேச்சு தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் சர்ப்ராஸ் அகமதுவை 4 போட்டிகளில் சஸ்பெண்ட் செய்து ஐ.சி.சி. நடவடிக்கை எடுத்துள்ளது. 

பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.  இதில் 2-வது ஒருநாள் போட்டி டர்பன் நகரில் கடந்த செவ்வாயன்று நடைபெற்றது. அப்போது தென்னாப்பிரிக்க வீரர்கள் 204 ரன்னை சேஸ் செய்து விளையாடிக் கொண்டிருந்தன. 

37-வது ஓவரின்போது ஆல்ரவுண்டர் பெலுக்வாயோ மற்றும் ஓப்பனர் வான்டர் டசன் ஆகியோர் களத்தில் நின்றனர். அப்போது தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் பெலுக்வாயோவை, ''ஏய் கருப்பா! உங்க அம்மா இப்போது எங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்? உனக்காக எதை பிரார்த்திக்க போகிறார்?'' என்று பேசியுள்ளார். 

தான் பேசியது யாருக்கும் கேட்டிருக்காது என்று சர்ப்ராஸ் எண்ணிய நிலையில், அவரது பேச்சு ஸ்டெம்பில் இருந்த மைக்கில் கேட்டு ஆட்டத்தின் நடுவர் வரைக்கும் சென்றது. பிரச்னை பெரிதானதால் ட்விட்டரில் சர்ப்ராஸ் மன்னிப்பு கேட்டிருந்தார். 

தவறிழைத்ததை சர்ப்ராஸ் ஒப்புக் கொண்டதை தொடர்ந்து அவரை 4 போட்டிகளில் விளையாட தடை விதித்து ஐ.சி.சி. நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் அவர் அடுத்து வரும் 2 ஒருநாள் போட்டிகளிலும், அதைத் தொடர்ந்து வரும் 2 டி20 போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார். 

களத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கற்றுத் தரும் வகுப்பும் சர்ப்ராஸுக்கு ஐ.சி.சி. நடத்தவுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் பேசிவிட்டு ஒழுங்குமுறை நடத்தும் தேதி சர்ப்ராஸுக்கு அறிவிக்கப்படும். 

Comments
ஹைலைட்ஸ்
  • 4 போட்டிகளில் விளையாட சர்ப்ராஸுக்கு தடை விதிப்பு
  • இனவெறி பேச்சுக்காக மன்னிப்பு கேட்டிருந்தார் சர்ப்ராஸ்
  • அடுத்து வரும் 2 ஒருநாள் 2 டி20 போட்டிகளில் பங்கேற்க மாட்டார்
தொடர்புடைய கட்டுரைகள்
சர்பராஸ் அகமதுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அறிவுரை!
சர்பராஸ் அகமதுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அறிவுரை!
"தோனி ஓய்வு பெற்றுவிட்டாரா?" - சர்பராஸ் அகமதுவின் மனைவி குஷ்பாத்!
"தோனி ஓய்வு பெற்றுவிட்டாரா?" - சர்பராஸ் அகமதுவின் மனைவி குஷ்பாத்!
சர்பராஸ் அகமது நீக்கத்துக்கு பிறகு பிசிபி வெளியிட்ட வீடியோவால் எழுந்த சர்ச்சை!
சர்பராஸ் அகமது நீக்கத்துக்கு பிறகு பிசிபி வெளியிட்ட வீடியோவால் எழுந்த சர்ச்சை!
கேப்டன் பதவியிலிருந்து சர்பராஸ் அகமது நீக்கம்... பிசிபியை விமர்சித்த ரசிகர்கள்!
கேப்டன் பதவியிலிருந்து சர்பராஸ் அகமது நீக்கம்... பிசிபியை விமர்சித்த ரசிகர்கள்!
பாகிஸ்தான் கேப்டன் பதவியிலிருந்து சர்பராஸ் அகமது அதிரடி நீக்கம்!
பாகிஸ்தான் கேப்டன் பதவியிலிருந்து சர்பராஸ் அகமது அதிரடி நீக்கம்!
Advertisement