‘கோலி இருப்பதால் உலக கோப்பையில் இந்தியா கெத்து காட்டும்!’- வக்கார் யூனிஸ்

Updated: 03 October 2018 14:01 IST

விராட் கோலி இருப்பதால், அந்த அணி அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலக கோப்பைப் போட்டியில், வலுவானதாக இருக்கும் என்று வக்கார் யூனிஸ் கருத்து தெரிவித்துள்ளார்

With Virat Kohli, India A Force In 2019 ICC World Cup, Says Waqar Younis
ஓய்வுக்குப் பின்னர் கோலி, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் விளையாட உள்ளார் © AFP

இந்திய கேப்டன் விராட் கோலி இருப்பதால், அந்த அணி அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலக கோப்பைப் போட்டியில், வலுவானதாக இருக்கும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வக்கார் யூனிஸ் கருத்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘இந்தியா, எப்போது உலக கோப்பையில் விளையாடினாலும் ஒரு வலுவான அணியாகவே இருக்கும். அதே நேரத்தில் ஓய்விலிருந்த கோலி, மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளதால் அது மிக வலுவாக மாறியுள்ளது. எனவே, இந்த முறை உலக கோப்பையில் இந்தியா, மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்’ என்று இந்திய அணிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். 

சமீபத்தில் பாகிஸ்தானில் நடந்த ஆசிய கோப்பைத் தொடரில், இந்தியா சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. அது குறித்தும் ரோகித் ஷர்மாவின் தலைமைப் பண்பு குறித்தும் பேசிய வக்கார், ‘விராட் கோலி, அணியில் மூன்றாவதாக களமிறங்குவது மிகப் பெரிய தாக்கத்தை உண்டாக்கும். அதே நேரத்தில் ஆசியக் கோப்பையில் அவர் இல்லாமல் ரோகித் ஷர்மா, கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார். அவரின் தலைமைப் பண்பு, நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. அவர் ஒரு சிறந்த கேப்டன்’ என்று புகழ்ந்துள்ளார். 
 

Comments
ஹைலைட்ஸ்
  • இந்திய அணி, உலக கோப்பையில் சிறப்பாக செயல்படும், வக்கார்
  • ரோகித் ஷர்மா சிறந்த கேப்டன், வக்கார் யூனிஸ்
  • 2018 ஆசிய கோப்பையில் இந்தியா சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது
தொடர்புடைய கட்டுரைகள்
டெஸ்ட் போட்டிகளுக்கு முன்பு பீச்சில் நேரம் கழிக்கும் இந்திய வீரர்கள்!
டெஸ்ட் போட்டிகளுக்கு முன்பு பீச்சில் நேரம் கழிக்கும் இந்திய வீரர்கள்!
பெயர், நம்பர் பொருத்தப்பட்ட ஜெர்ஸி... டீம் இந்தியா பதிவிட்ட புகைப்படம்!
பெயர், நம்பர் பொருத்தப்பட்ட ஜெர்ஸி... டீம் இந்தியா பதிவிட்ட புகைப்படம்!
ரிக்கி பாண்டிங்கின் சத சாதனையை சமன் செய்வாரா கோலி?
ரிக்கி பாண்டிங்கின் சத சாதனையை சமன் செய்வாரா கோலி?
‘சபாஷ், சரியான போட்டி…’- கோலிக்கு செக் வைக்கும் ஸ்மித்!
‘சபாஷ், சரியான போட்டி…’- கோலிக்கு செக் வைக்கும் ஸ்மித்!
11 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை- ‘எமோஷனல்’ கிங் கோலி!
11 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை- ‘எமோஷனல்’ கிங் கோலி!
Advertisement