சூப்பர் லீக்கிலிருந்து வெளியேறிய ரிலையன்ஸுக்கு பாகிஸ்தான் வாரியம் பதில்!

Updated: 18 February 2019 18:32 IST

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் தயாரிப்பு பணிகளிலிருந்து விலகுவதாக ஐஎம்ஜி ரிலையன்ஸ் விலகுவதாக அறிவித்துள்ளது. இதனை முறைப்படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளது.

Pakistan Cricket Board Reacts After IMG-Reliance Pulls Out Of Their Twenty20 League
இந்தியாவில் பிஎஸ்எல் போட்டிகள் டிஸ்போர்ட் எனும் சேனலில் ஒளிபரப்பாகின்றன. © Twitter: @thePSLt20

புல்வாமா பகுதியில் இந்திய மத்திய துணை ராணுவப்படையினர் மீது தாக்குதல் நடத்தியதில் 40 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் தயாரிப்பு பணிகளிலிருந்து விலகுவதாக ஐஎம்ஜி ரிலையன்ஸ் விலகுவதாக அறிவித்துள்ளது. இதனை முறைப்படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளது. ஐஎம்ஜி ரிலையன்ஸ் நிறுவனம் கிரிக்கெட் போட்டிகளின் நேரடி ஒளிபரப்பை வெவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு சேனல்களுக்கு ஒளிபரப்ப உதவும் நிறுவனமாகும். 

இந்தியாவில் பிஎஸ்எல் போட்டிகள் டிஸ்போர்ட் எனும் சேனலில் ஒளிபரப்பாகின்றன. இது டிஸ்கவரி ஆசியா பசிபிக் சேனலாகும். புல்வாமா தாக்குதல் போன்ற சம்பவங்களுக்கு துணை போகும் நாட்டில் நாங்கள் பணி புரிய மாட்டோம் என்று கூறி ஐஎம்ஜி ரிலையன்ஸ் வெளியேறியுள்ளது. 

இந்த சம்பவத்துக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பதிலளித்துள்ளது. இந்த விஷயத்தில் ஐஎம்ஜியின் நடவடிக்கை மிகவும் ஏமாற்றகரமானதாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதற்கு அதிக அளவிலான பார்வையாளர்கள் இருப்பதாகவும், இதனை இப்போது இழப்பதாகவும் கூறியுள்ளது. விளையாட்டும் , அரசியலும் வேறு. விளையாட்டின் மூலம் இணைப்பை ஏற்படுத்த பல முயற்சிகளை மேற்கொள்கிறோம். இந்த விஷயத்தில் இப்போது பெரிய ஏமாற்றம் நிகழ்ந்துள்ளதாக கூறியுள்ளது. 

மேலும் புல்வாமா தாக்குதலையடுத்து பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் ஐ.எஸ்.பிந்த்ரா மைதானத்தில் இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்கள் நீக்கப்பட்டுள்ளன. மைதானத்தின் வளாகம், பெவிலியன்  மற்றும் கேலரியில் உள்ள இந்த புகைப்படங்களை பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் நீக்கியுள்ளது.  மத்திய துணை ராணுவப்படையினருக்கு நாங்கள் செலுத்தும் மரியாதை இது என்றும், பாகிஸ்தான் மீதான கோபம் தணியவில்லை என்றும் கூறியுள்ளனர்.

இதனடிப்படையில் மைதானத்துக்குள் இருந்த முன்னாள் பாகிஸ்தான் கேப்டனும், தற்போதைய பிரதமருமான இம்ரான்கான், வீரர்கள் மியான்தத், அப்ரிதி ஆகியோரின் புகைப்படங்கள் சேர்த்து 15 படங்கள் நீக்கப்பட்டுள்ளன

ஆறு அணிகளுடன் நடக்கும் டி20 தொடரான பாகிஸ்தான் சூப்பர் லீக் 2015ம் ஆண்டு செப்டம்பர் 9 அன்று லாகூரில் துவங்கப்பட்டது.

ஸ்ரீநகர் ஜம்மு நெடுங்சாலையில் 78 பேருந்துகளில் 2500க்கும் அதிகமான மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது 350 கிலோ வெடி பொருள்கள் நிரம்பிய கார் தாக்கி 40க்கும் அதிகமான வீரர்கள் உயிரிழந்தனர்

Comments
ஹைலைட்ஸ்
  • இந்தியாவில் பிஎஸ்எல் போட்டிகள் டிஸ்போர்ட் எனும் சேனலில் ஒளிபரப்பாகின்றன
  • ஐ.எஸ்.பிந்த்ரா மைதானத்தில் இருந்து இம்ரான்கான் புகைப்படம் நீக்கப்பட்டது
  • பாகிஸ்தான் வீரர்களின் 15 புகைப்படங்கள் நீக்கப்பட்டுள்ளன
தொடர்புடைய கட்டுரைகள்
“தீவிரவாதிகளின் மையமாக செயல்பட்ற நாடு உங்களது…”- Pak பிரதமரை வறுத்தெடுத்த இந்திய கிரிக்கெட் வீரர்!
“தீவிரவாதிகளின் மையமாக செயல்பட்ற நாடு உங்களது…”- Pak பிரதமரை வறுத்தெடுத்த இந்திய கிரிக்கெட் வீரர்!
ஐ.நாவில் பேசிய இம்ரான் கானை வறுத்தெடுக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!
ஐ.நாவில் பேசிய இம்ரான் கானை வறுத்தெடுக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!
''அடுத்த உலகக்கோப்பையில் பாகிஸ்தான் பெஸ்ட் அணியாக இருக்கும்'' : இம்ரான் கான்
சின்னசாமி மைதானத்திலும் அகற்றப்படும் பாகிஸ்தான் வீரர்களின் புகைப்படம்
சின்னசாமி மைதானத்திலும் அகற்றப்படும் பாகிஸ்தான் வீரர்களின் புகைப்படம்
சூப்பர் லீக்கிலிருந்து வெளியேறிய ரிலையன்ஸுக்கு பாகிஸ்தான் வாரியம் பதில்!
சூப்பர் லீக்கிலிருந்து வெளியேறிய ரிலையன்ஸுக்கு பாகிஸ்தான் வாரியம் பதில்!
Advertisement