#On This Day 'காட் ஆஃப் கிரிக்கெட்' தன்னுடைய முதல் சதமடித்த நாள் இன்று!

Updated: 14 August 2019 13:13 IST

Sachin Ramesh Tendulkar: சச்சின் டெண்டுல்கர் மொத்தமாக 51 டெஸ்ட் சதம் மற்றும் 49 ஒருநாள் சதம் குவித்துள்ளார்.

Sachin Tendulkar, 17, Scored His Maiden International Century On This Day
God of Cricket: 2013ம் ஆண்டு ஓய்வு பெறுவதற்கு முன்பு வரை அவர் சர்வதேச போட்டிகளில் 34,000 ரன்கள் குவித்தார். © Twitter/BCCI

Sachin Tendulkar's First International Century: ஒரு கிரிக்கெட் வீரராக சச்சின் டெண்டுல்கரின் சாதனை பல ஆண்டுகளாக அவரது 100 சர்வதேச சதங்கள் உட்பட பல சாதனைகள் ஒப்பிடமுடியாமல் உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar) தன்னுடைய 16வது வயத்தில் 1989ம் ஆண்டு நுழைந்தார். 2013ம் ஆண்டு ஓய்வு பெறுவதற்கு முன்பு வரை அவர் சர்வதேச போட்டிகளில் 34,000 ரன்கள் குவித்தார். பிசிசிஐ இன்று, சச்சின் டெண்டுல்கரின் முதல் சதம் குறித்து நினைவுப்படுத்தும் விதமாக பதிவிட்டது. இங்கிலாந்தில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட்டில் இதே நாள், ஆகஸ்ட் 14, 1990ம் ஆண்டு சச்சின் தன்னுடைய முதல் சதமடித்தார்.

பிசிசிஐ (BCCI), சச்சின் முதல் சதம் அடித்த புகைப்படத்தை ட்விட்டரில்  பகிர்ந்து," #ThisThatDayYear: 1990ம் ஆண்டுக்கு சென்றால், உலகம் @sachin_rt's முதல் சர்வதேச சதத்தை கண்டிருக்கும். தன்னுடைய 17வது லிட்டில் மாஸ்டர் ஓல்ட் டிராஃபோர்ட்டில் முதல் சதமடித்தார். என்ன ஒரு அற்புதமான நேரம்!"

இங்கிலாந்து கேப்டன் க்ராஹாம் கூச் மற்றும் அவருடைய தொடக்க வீரர் மைக் அதெர்டன் ஆகியோர் தங்களுடைய சதத்தை மிகப்பெரிய ஸ்கோரான 519 ரன்கள் குவித்த போது அடித்தனர். பேட்டிங்கை தேர்வு செய்த அவர்கள், முதல் இன்னிங்ஸில் இதை செய்தனர்.

முதல் இன்னிங்சில் இந்தியா 432 ரன்கள் எடுத்தது, சச்சின் (Sachin) 68 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் இங்கிலாந்து அணியை 87 ரன்கள் முன்னிலை பெற செய்தது, இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து 320/4 எடுத்தது. இந்திய அணிக்கு இலக்கு 408 ரன்கள்.

குறைந்த ரன்களுக்கு இந்திய அணி டாப் ஆர்டரை இழந்தது. ஆனால், 17 வயதான சச்சின் இந்திய அணியை (Team India) காப்பாற்ற 119 ரன்கள் குவித்து அசத்தினார். 189 பந்துகளில் 17 பவுண்டரிகள் எடுத்தார். அப்போது அவர் அணியிடரிடமும், ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றார்.

சச்சின் டெண்டுல்கர் மொத்தமாக 51 டெஸ்ட் சதம் மற்றும் 49 ஒருநாள் சதம் குவித்துள்ளார்.

Comments
ஹைலைட்ஸ்
  • சச்சின் டெண்டுல்கர் 51 டெஸ்ட் சதம் மற்றும் 49 ஒருநாள் சதம் குவித்துள்ளார்
  • அவரது 100 சர்வதேச சதங்கள் உட்பட பல சாதனைகள் ஒப்பிடமுடியாமல் உள்ளது
  • சச்சின் தன்னுடைய 16வது வயத்தில் 1989ம் ஆண்டு கிரிக்கெட்டில் நுழைந்தார்
தொடர்புடைய கட்டுரைகள்
"டெண்டுல்கரின் ஒரு சாதனையை கோலியாலும் முறியடிக்க முடியாது" - சேவாக்!
"டெண்டுல்கரின் ஒரு சாதனையை கோலியாலும் முறியடிக்க முடியாது" - சேவாக்!
சச்சினின் டெஸ்ட் சாதனையை சமன் செய்த நியூசிலாந்து பவுலர்!
சச்சினின் டெஸ்ட் சாதனையை சமன் செய்த நியூசிலாந்து பவுலர்!
#On This Day
#On This Day 'காட் ஆஃப் கிரிக்கெட்' தன்னுடைய முதல் சதமடித்த நாள் இன்று!
ஹஷிம் ஆம்லாவின் ஓய்வுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்!
ஹஷிம் ஆம்லாவின் ஓய்வுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்!
"2003 உலகக் கோப்பையில் தோற்க வாக்கார் யூனிஸ்தான் காரணம்" - சோயிப்அக்தர்
"2003 உலகக் கோப்பையில் தோற்க வாக்கார் யூனிஸ்தான் காரணம்" - சோயிப்அக்தர்
Advertisement