Listen to the latest songs, only on JioSaavn.com
 

இந்தியா vs நியூசிலாந்து 3வது ஒருநாள்: நேரலையை எங்கு, எப்போது காணலாம்?

Updated: 10 February 2020 21:59 IST

இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையேயான மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டி வரும் செவ்வாய்க்கிழமை மவுண்ட் மவுங்கனுவில் உள்ள பே ஓவலில் நடைபெறவுள்ளது.

NZ vs IND, 3rd ODI: When and Where To Watch Live Telecast, Live Streaming
பே ஓவலில் நியூசிலாந்து vs இந்தியா 3 வது ஒருநாள் போட்டி செவ்வாய்க்கிழமை காலை 7:30 மணிக்கு நடக்கும். © AFP

இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையேயான மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டி வரும் செவ்வாய்க்கிழமை மவுண்ட் மவுங்கனுவில் உள்ள பே ஓவலில் நடைபெறவுள்ளது. இரு அணிகளுக்கு இடையே நடந்த டி20 தொடருக்கு எதிர்மறையாக ஒருநாள் தொடர் மாறியுள்ளது. டி20 தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று நியூசிலாந்து முத்திரையிட்டுள்ளது. காயத்திலிருந்து மீண்டு வரவிருக்கும் நியூசிலாந்து வீரர்கள் சிலர், மூன்றாவது போட்டியையும் வென்று விராட் கோலியின் அணியை வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது போட்டியின் போது நியூசிலாந்து வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதால், துணை பயிற்சியாளர் லூக் ரோன்சி ஃபீல்டிங் செய்ய வேண்டிருந்தது. முதல் இரண்டு போட்டிகளை தவறவிட்ட கேப்டன் கேன் வில்லியம்சன் இந்தப் போட்டிக்கு திரும்பவுள்ளார்.

இந்தியா vs நியூசிலாந்து மூன்றாவது ஒருநாள் போட்டி எப்போது?

இந்தியா vs நியூசிலாந்து மூன்றாவது ஒருநாள் போட்டி பிப்ரவரி 11, 2020 (செவ்வாய்கிழமை).

இந்தியா vs நியூசிலாந்து மூன்றாவது ஒருநாள் போட்டி எங்கே நடக்கிறது?

இந்தியா vs நியூசிலாந்து மூன்றாவது ஒருநாள் போட்டி மவுண்ட் மவுங்கனுவில் உள்ள பே ஓவலில் நடக்கிறது.

இந்தியா vs நியூசிலாந்து மூன்றாவது ஒருநாள் போட்டி எப்போது தொடங்கும்?

இந்தியா vs நியூசிலாந்து மூன்றாவது ஒருநாள் போட்டி காலை 7.30 மணிக்கு தொடங்கும்.

இந்தியா vs நியூசிலாந்து மூன்றாவது ஒருநாள் போட்டி எந்த டி.வி சேனலில் ஒளிப்பரப்பாகும்?

இந்தியா vs நியூசிலாந்து மூன்றாவது ஒருநாள் போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் ஒளிப்பரப்பாகும்.

இந்தியா vs நியூசிலாந்து மூன்றாவது ஒருநாள் போட்டியின் லைவ் எங்கு காணலாம்?

இந்தியா vs நியூசிலாந்து மூன்றாவது ஒருநாள் போட்டியை ஹாட்ஸ்டார் காணலாம். மேலும், sports.ndtv.com தளத்திலும் பார்க்கலாம்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
New Zealand vs India: 31 ஆண்டுகளுக்கு பிறகு ஒயிட்வாஷ் செய்யப்பட்டது இந்தியா!
New Zealand vs India: 31 ஆண்டுகளுக்கு பிறகு ஒயிட்வாஷ் செய்யப்பட்டது இந்தியா!
இந்தியா vs நியூசிலாந்து 3வது ஒருநாள்: நேரலையை எங்கு, எப்போது காணலாம்?
இந்தியா vs நியூசிலாந்து 3வது ஒருநாள்: நேரலையை எங்கு, எப்போது காணலாம்?
NZ vs IND: 3வது ஒருநாளில் இணைந்த இஷ் சோதி மற்றும் பிளேர் டிக்னர்!
NZ vs IND: 3வது ஒருநாளில் இணைந்த இஷ் சோதி மற்றும் பிளேர் டிக்னர்!
Advertisement