Listen to the latest songs, only on JioSaavn.com
 

New Zealand vs India: 31 ஆண்டுகளுக்கு பிறகு ஒயிட்வாஷ் செய்யப்பட்டது இந்தியா!

Updated: 11 February 2020 15:34 IST

Live Score, NZ vs IND 3rd ODI:17 பந்துகள் மீதமிருக்கையில் 297 என்ற இலக்கை எட்டு, தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது நியூசிலாந்து அணி.

New Zealand vs India 3rd ODI Live Score, NZ vs IND Live Match Today: New Zealand Opt To Bowl With Eyes On Clean Sweep vs India
NZ vs IND ODI Live Cricket Score:இந்தப் போட்டியில் ஹென்றி நிக்கோலஸ் 80 ரன்கள் குவித்தார். © AFP

இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையேயான ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி மூன்று போட்டிகளையும் வென்று தொடரை கைப்பற்றியது. தொடரின் மூன்றாவது போட்டி இன்று மவுண்ட் மவுகானுவில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 296 ரன்கள் குவித்தது. விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் 112 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர் (62) மற்றும் மணீஷ் பாண்டே(42) சிறப்பாக ஆடினர். முதல் ஏழு ஓவர்களிலேயே கேப்டன் விராட் கோலி மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோரை இழந்தது இந்தியா. பிரித்வி ஷா 40 ரன்கள் குவித்தார். நியூசிலாந்து அணியை பொருத்த வரை ஹமிஷ் பென்னெட் மணீஷ் பாண்டே மற்றும் கே.எல்.ராகுல் உட்பட 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தன்னுடைய 10 ஓவரில் 64 ரன்கள் மட்டுமே கொடுத்தார். ஆனால், ஹாட்ரிக் விக்கெட் எடுக்க முடியவில்லை. கையில் ஜேமிசன் மற்றும் ஜிம்மி நீஸம் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இலக்கை துரத்திய நியூசிலாந்து, ஹென்றி நிக்கோலஸ் 80 ரன்களும், மார்ட்டின் கப்தில் 66 ரன்களும் குவித்த்தால் இந்தியா நிர்ணயித்த 297 ரன்களை இலக்கை 17 பந்துகள் மீதமிருக்கையில் எளிதாக எட்ட முடிந்தது. ஒருநாள் தொடருக்கு முன்னதாக இரு அணிகளும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதின. இதில் இந்தியா ஐந்து போட்டிகளை வென்றது. ஆனால், அதற்கு எதிர்மறையாக ஒருநாள் தொடரை இழந்துள்ளது. அடுத்து இரு அணிகளும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மோதவுள்ளன. (ஸ்கோர்கார்ட்)

இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி மவுங்கனுவில் உள்ள பே ஓவலில் நடைபெற்றது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
New Zealand vs India: 31 ஆண்டுகளுக்கு பிறகு ஒயிட்வாஷ் செய்யப்பட்டது இந்தியா!
New Zealand vs India: 31 ஆண்டுகளுக்கு பிறகு ஒயிட்வாஷ் செய்யப்பட்டது இந்தியா!
இந்தியா vs நியூசிலாந்து 3வது ஒருநாள்: நேரலையை எங்கு, எப்போது காணலாம்?
இந்தியா vs நியூசிலாந்து 3வது ஒருநாள்: நேரலையை எங்கு, எப்போது காணலாம்?
NZ vs IND: 3வது ஒருநாளில் இணைந்த இஷ் சோதி மற்றும் பிளேர் டிக்னர்!
NZ vs IND: 3வது ஒருநாளில் இணைந்த இஷ் சோதி மற்றும் பிளேர் டிக்னர்!
Advertisement