Listen to the latest songs, only on JioSaavn.com
 

NZ vs IND, 1st Test: 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-0 முன்னிலை பெற்றது நியூசிலாந்து!

Updated: 24 February 2020 11:40 IST

உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியான இந்தியாவை நியூசிலாந்து அணி வீழ்த்தி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

NZ vs IND, 1st Test: New Zealand Outclass India By 10 Wickets To Take 1-0 Lead In Series
முதல் டெஸ்டில் நியூசிலாந்து இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் விழ்த்தியது. © AFP

உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியான இந்தியாவை நியூசிலாந்து அணி வீழ்த்தி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. டாம் லாதம் மற்றும் டாம் ப்ளெண்டல் இருவரும் 9 ரன்கள் இலக்கை வெறும் 10 ரன்கள் எடுத்து, நியூலாந்து அணியின் 100வது டெஸ்ட் வெற்றியை பெற்றனர். நான்காவது நாளில், இந்திய அணி வெறும் 47 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஜஸ்பிரித் பும்ராவை டக் அவுட் செய்த பின், டிம் சவுதி தன்னுடைய 10வது 5 விக்கெட்டை நீண்ட வடிவ கிரிக்கெட்டில் பெற்றார். ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இது இந்தியாவின் முதல் தோல்வியாகும்,

இந்தப் போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய டிம் சவுதி ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

முன்னதாக, நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தார்.

இந்தியா முதல் நாளில் மழைக்கு முன்னதாக 5 விக்கெட்டுகள் இழந்தது.

முதல் இன்னிங்ஸில் 46 ரன்கள் எடுத்த அஜின்கியா ரஹானே இந்தியாவுக்காக அதிக ரன்கள் பெற்றார்.

கைல் ஜேமீசன் மற்றும் சவுதி தலா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினர், ட்ரெண்ட் போல்ட் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

நியூசிலாந்தைப் பொறுத்தவரை, கேன் வில்லியம்சன் 89 ரன்கள் எடுத்தார். ஆனால் கடைசி மூன்று விக்கெட்டுகள்தான் இரு தரப்பினருக்கும் இடையே பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது.

நியூசிலாந்து ஒரு கட்டத்தில் ஏழு விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது. ஆனால் கடைசி மூன்று விக்கெட்டுகள் 123 ரன்களைச் சேர்க்க முடிந்தது. இது இந்திய அணியின் ரன்களை விட 183 ரன்களில் முன்னிலை பெற உதவியது.

இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் மோசமான தொடக்கத்தை ஏற்படுத்தியது. பிரித்வி ஷா, எளிதாக கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

இந்தப் போட்டியில் மொத்தமாக இந்திய கேப்டன் விராட் கோலி 21 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இரு அணிகளும் சனிக்கிழமை தொடங்கவுள்ள இரண்டாவது டெஸ்ட் தொடருக்காக கிறிஸ்ட்சர்ச்-க்கு பயணம் செய்யவுள்ளன.

Comments
ஹைலைட்ஸ்
  • நியூசிலாந்து இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது
  • டிம் சவுதி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்
  • ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா முதல் தோல்வியை கண்டுள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
NZ vs IND, 1st Test: 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-0 முன்னிலை பெற்றது நியூசிலாந்து!
NZ vs IND, 1st Test: 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-0 முன்னிலை பெற்றது நியூசிலாந்து!
ட்ரெண்ட் போல்ட்டின் பேட்டிங் ஸ்டைல் வேற லெவல்! - இங்கிலாந்து வீரர் புகழாரம்! 
ட்ரெண்ட் போல்ட்டின் பேட்டிங் ஸ்டைல் வேற லெவல்! - இங்கிலாந்து வீரர் புகழாரம்! 
New Zealand vs India: முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 51 ரன்கள் முன்னிலை!
New Zealand vs India: முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 51 ரன்கள் முன்னிலை!
1st Test Day 1: மழை காரணமாக இன்றைய ஆட்டம் கைவிடப்பட்டது... இந்தியா 122/5
1st Test Day 1: மழை காரணமாக இன்றைய ஆட்டம் கைவிடப்பட்டது... இந்தியா 122/5
IND vs NZ 1st Test: நேரலையை எங்கு, எப்போது காணலாம்?
IND vs NZ 1st Test: நேரலையை எங்கு, எப்போது காணலாம்?
Advertisement