"ஐசிசியின் புதிய மாற்றம் காமெடியாக உள்ளது" - பிரெட் லீ!

Updated: 03 August 2019 15:02 IST

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் இந்த புது மாற்றத்தை கடுமையாக விமர்சித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதன்பின்னரே பிரெட் லீ இந்த பதிவை பதிவிட்டுள்ளார்.

Numbers And Names On Test Jerseys "Ridiculous", Says Brett Lee
ஐசிசி டெஸ்ட் விளையாடும் நாடுகள் அவர்களுடைய பெயர் மற்றும் நம்பர்களை ஜெர்ஸியில் பதிவிடும் படி கேட்டுக்கொண்டது. © AFP

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிரெட் லீ, ஐசிசியின் புதிய ஐடியாவை விமர்சித்துள்ளார். ஐசிசி புதிய விதியாக, வீரரகளின் ஜெர்ஸிக்கு பின்னால் நம்பருடன் பெயரும் பதிவிட வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த புது மாற்றத்தை பிரெட் லீ கேலிக்குரியதாக உள்ளது என்று கூறியுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் இந்த புது மாற்றத்தை கடுமையாக விமர்சித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதன்பின்னரே பிரெட் லீ இந்த பதிவை பதிவிட்டுள்ளார். இருந்தாலும் பிரெட் லீ ஐசிசி கொண்டு வந்திருக்கும் மற்ற மாற்றங்களை விரும்புவதாக கூறியுள்ளார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில், ஐசிசி டெஸ்ட் விளையாடும் நாடுகள் அவர்களுடைய பெயர் மற்றும் நம்பர்களை ஜெர்ஸியில் பதிவிடும் படி கேட்டுக்கொண்டது. இதை சிலர் ஆதரித்தனர், இன்னும் சிலருக்கு இந்த மாற்றம் பிடிக்கவில்லை.

"இந்த மாற்றம் எதற்கு பயன்படும். பெயரும், நம்பரும் வீரர் அணியும் ஜெர்ஸியின் பின்னால் இருப்பதை எதிர்கிறேன். இது மிகவும் காமெடியாக உள்ளது. @ICC ஐசிசி கொண்டு வந்திருக்கும் மற்ற மாற்றங்கள் பிடித்துள்ளது. ஆனால், இந்த நிலையில் நீங்கள் செய்தது சரியல்ல," என்று பிரெட் லீ ட்விட்டரில் தெரிவித்தார்.

"என்னுடைய மன்னிப்பை நான் திரும்ப பெறுகிறேன். பெயர் மற்றும் நம்பர் இருப்பது குப்பை போல் உள்ளது. எல்லோரும் தொடரை கண்டு மகிழுங்கள்," கில்கிறிஸ்ட் ஆஷஸ் தொடரில் ஆடும் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் போது கூறினார்.

இன்னொரு ட்விட்டில், கில்கிறிஸ்ட், "சிறப்பு. நாங்கள் நடந்து கொண்டிருக்கிறோம். பழைய பாணியில் ஒலித்ததற்கு மன்னிக்கவும். ஆனால், பெயர்கள் மற்றும் நம்பர்களை விரும்பவில்லை." என்றார்.

இந்திய அணியின் ஸ்பின்னர் அஸ்வின், "ஸ்வெட்டர்களிலும் நம்பர்கள் இருக்க  வேண்டுமா என்ன??#ashes2019," என்று ட்விட் செய்திருந்தார்.

இங்கிலீஷ் நாட்டவரும், ஆஸ்திரேலிய நாட்டவரும் ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டிகள் விளையாடும் போது, வெள்ளை நிற ஜெர்ஸி அணிந்து அதில் பெயர் மற்றும் நம்பருடன் ஆடியுள்ளனர். ஆனால், இந்திய அணிக்கு மட்டும் இது புதிய மாற்றமாக இருக்கும். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டியில் ஆடும் போது இந்திய அணியின் வீரரகள் பெயர் மற்றும் நம்பருடன் ஆடவுள்ளனர்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
பிரட் லீக்கு சிறப்பான கிரிக்கெட் பந்தை பரிசளித்தார் வாசிம் அக்ரம்!
பிரட் லீக்கு சிறப்பான கிரிக்கெட் பந்தை பரிசளித்தார் வாசிம் அக்ரம்!
"ஐசிசியின் புதிய மாற்றம் காமெடியாக உள்ளது" - பிரெட் லீ!
"ஐசிசியின் புதிய மாற்றம் காமெடியாக உள்ளது" - பிரெட் லீ!
"என்ன ஸ்வீட் கண்டுபிடிங்க" ப்ரெட் லீக்கு டெஸ்ட் வைக்கும் சச்சின்
"என்ன ஸ்வீட் கண்டுபிடிங்க" ப்ரெட் லீக்கு டெஸ்ட் வைக்கும் சச்சின்
Advertisement