ஸ்லெட்ஜிங் சர்ச்சை : 'மிஸ்டர் கூலாக' இதயங்களை வென்ற ஜோ ரூட்

Updated: 13 February 2019 12:07 IST

ரூட் ஸ்டெம்ப் மைக்கில் " இதனை கிண்டல் செய்யாதீர்கள். ஓரின சேர்க்கையாளர்களாக இருப்பதில் தவறு ஒன்றும் இல்லை" என தெரிவித்தார் ஜோ ரூட்.

Joe Root Reacts To Shannon Gabriel
இந்த வாக்குவாதம் இங்கிலாந்து கேப்டனை சிறிதும் பாதிக்கவில்லை. 209 பந்துகளை சந்தித்து 111 ரன்களை குவித்தார். © AFP

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ஸ்டெம்ப் மைக்கில் பேசிய விஷயம் உலகையே வியக்க வைத்துள்ளது. முன்னதாக இங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வீரர் கேப்ரியல், ரூட்டை நோக்கி ஓரினச் சேர்க்கை தொடர்பான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். அதற்கு ரூட் ஸ்டெம்ப் மைக்கில் " இதனை கிண்டல் செய்யாதீர்கள். ஓரின சேர்க்கையாளர்களாக இருப்பதில் தவறு ஒன்றும் இல்லை" என தெரிவித்தார் ஜோ ரூட்.

கேப்ரியலை கள நடுவர்கள் தர்மசேனா மற்றும் ரோட் டாக்கர் ஆகியோர் எச்சரித்தனர்.

கேப்ரியலின் கருத்துகள் ஸ்டெம்ப் மைக்கில் பதிவாகவில்லை. ரூட்டும் கேப்ரியல் என்ன கூறினார் என்பதை கூற மறுத்துவிட்டார். "அதனை அவர் உணர்ந்தாலே போதும்" என்றார்.

இது டெஸ்ட் கிரிக்கெட். மேலும் அவர் எமோஷனலானவர் அணியின் வெற்றிக்காக கடுமையாக போராடக்கூடியவர். இது போன்ற விஷயங்கள் தவிர அவர் நல்ல மனிதர் என்றார் ரூட்.

இந்த வாக்குவாதம் இங்கிலாந்து கேப்டனை சிறிதும் பாதிக்கவில்லை. 209 பந்துகளை சந்தித்து 111 ரன்களை குவித்தார். மேலும் இரண்டு நாள் ஆட்டம் மீதமுள்ள நிலையில் இங்கிலாந்து 448 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

ஜோ டென்லியுடம் 3வது விக்கெட்டுக்கு 74 ரன்களும், பட்லருடன் 4வது விக்கெட்டுக்கு 107 ரன்களும், பென் ஸ்டோக்ஸுடன் 5வது விக்கெட்டுக்கு 71 ரன்களும் பார்ட்னர்ஷிப் அமைத்தார் ஜோ ரூட்.

Comments
ஹைலைட்ஸ்
  • ஜோ ரூட் "ஓரின சேர்க்கை தவறு ஒன்றும் இல்லை" என கேப்ரியலிடம் கூறினார்
  • ஜோ ரூட் மற்றும் கேப்ரியல் மைதானத்தில் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்
  • 3வது டெஸ்ட் 3ம் நாளில் ரூட் 209 பந்துகளில் 111 ரன்கள் குவித்தார்
தொடர்புடைய கட்டுரைகள்
பென் ஸ்டோக்ஸுக்கு ஆதரவு தெரிவித்த ஜோ ரூட் மற்றும் மைக்கெல் வாகன்!
பென் ஸ்டோக்ஸுக்கு ஆதரவு தெரிவித்த ஜோ ரூட் மற்றும் மைக்கெல் வாகன்!
முதலிடத்தை தக்கவைத்து கொண்ட விராத் கோலி...!
முதலிடத்தை தக்கவைத்து கொண்ட விராத் கோலி...!
உலகக்கோப்பை கிரிக்கெட்: 31 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் இந்தியா தோல்வி!!
உலகக்கோப்பை கிரிக்கெட்: 31 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் இந்தியா தோல்வி!!
ஜோ ரூட்டுடன் ஸ்லெட்ஜிங்: கேப்ரியலுக்கு நான்கு ஒருநாள் போட்டியில் ஆட தடை!
ஜோ ரூட்டுடன் ஸ்லெட்ஜிங்: கேப்ரியலுக்கு நான்கு ஒருநாள் போட்டியில் ஆட தடை!
ஸ்டம்ப் மைக் விவகாரம்: சர்ச்சைக்குள்ளான சஞ்சய் மஞ்ரேக்கர் ட்விட்!
ஸ்டம்ப் மைக் விவகாரம்: சர்ச்சைக்குள்ளான சஞ்சய் மஞ்ரேக்கர் ட்விட்!
Advertisement