"நான் சுயநலவாதியல்ல" - சதமடிக்காதது குறித்து ரஹானே!

Updated: 23 August 2019 13:47 IST

இந்திய அணி இக்கட்டான சூழலில் ரஹானே 81 ரன்கள் குவித்தார். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கோலி 9 ரன்களுக்கும், புஜாரா 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

Ajinkya Rahane Not Concerned About Missing Out On Hundred, Says Was "Thinking About My Team"
அஜின்க்யா ரஹானே, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 81 ரன்கள் குவித்தார். © AFP

அஜின்க்யா ரஹானே, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 81 ரன்கள் குவித்தார். முதல் டெஸ் போட்டி ஆண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. இந்திய அணி இக்கட்டான சூழலில் ரஹானே 81 ரன்கள் குவித்தார். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கோலி 9 ரன்களுக்கும், புஜாரா 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 2017ம் ஆண்டு தான் கடைசியாக ரஹானே சதமடித்தார். இந்தப் போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் சதத்தை தவர  விட்டார். மூன்று இலக்கு ரன்களை எடுக்காதது நான் சுயநலாமாக இல்லாமல், அணியை குறித்து யோசித்தேன் என்றார்.

இலங்கைக்கு எதிராக ஆகஸ்ட் 2017ம் ஆண்டு ரஹானே கடைசியாக சதமடித்தார்.

"கிரீஸில் நிற்கும் நேரத்தில் நான் அணியை குறித்து மட்டுமே நினைப்பேன். நான் சுயநலவாதியல்ல. அணி இக்கட்டான சூழலில் இருக்கும்போது, சதம் அடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. 81 ரன்களில் ஆட்டமிழந்தாலும், அணிக்கு அது உதவியாக இருக்கும் பட்சத்தில் செய்வது சரிதான்," முதல் நாளில் ரஹானே 81 ரன்களுடன் இந்திய அணி 203 ரன்கள் எடுத்துள்ளது.

"என் அணிக்காக நான் விளையாடினால், எனக்கு அது மட்டுமே முக்கியம். நான் சதத்தை பற்றி யோசித்தேன் ஆனால், அணி அப்போது 25 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் இழந்திருந்தது. அதனால், அணிக்கு என்னுடைய பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று நினைத்தேன். என் சதம் குறித்து பெரிதும் கவலைப்படவில்லை. அது தானாக வரும்," என்றார் ரஹானே.

"இங்கிலாந்தின் வானிலை நிலவரம் அனைவரும் அறிந்ததே. மேகமூட்டமாக இருந்தால், நிலைமையை புரிந்துகொள்ள வேண்டும், வெயில் அடித்தால், விளையாட சிறந்த நேரமாக அமையும். இந்தப் போட்டியில் சிறப்பான சில பந்துகள் அடித்தேன்," என்றார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
கேரள ரசிகருடனான சிறப்பான நேரம் குறித்து பேசிய சச்சின் டெண்டுல்கர்!
கேரள ரசிகருடனான சிறப்பான நேரம் குறித்து பேசிய சச்சின் டெண்டுல்கர்!
"நான் சுயநலவாதியல்ல" - சதமடிக்காதது குறித்து ரஹானே!
"நான் சுயநலவாதியல்ல" - சதமடிக்காதது குறித்து ரஹானே!
பெயர், நம்பர் பொருத்தப்பட்ட ஜெர்ஸி... டீம் இந்தியா பதிவிட்ட புகைப்படம்!
பெயர், நம்பர் பொருத்தப்பட்ட ஜெர்ஸி... டீம் இந்தியா பதிவிட்ட புகைப்படம்!
"சுப்மன் கில், ரஹானே ஏன் ஒருநாள் போட்டிகளில் இடம்பெறவில்லை" - கேள்வி எழுப்பும் கங்குலி!
"சுப்மன் கில், ரஹானே ஏன் ஒருநாள் போட்டிகளில் இடம்பெறவில்லை" - கேள்வி எழுப்பும் கங்குலி!
கேப்டன் சுமை குறைந்து சதமடித்து அசத்திய ரஹானே!
கேப்டன் சுமை குறைந்து சதமடித்து அசத்திய ரஹானே!
Advertisement