"மன்னித்துக் கொண்டே இருக்க முடியாது" தோல்விக்கு மனம் வருந்திய கோலி!

Updated: 08 April 2019 13:47 IST

கோலி, ஆர்சிபி அணியை கடந்த ஆறு ஆண்டுகளாக தலைமை தாங்கி வருகிறார். ஆனால், வெற்றி இன்னும் அடையவில்லை.

Virat Kohli Says No Excuses Left After RCB
கோலி, ஐபிஎல் தொடரில் 5,151 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.  © BCCI/IPL

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, தொடர்ந்து ஆறாவது முறையாக இந்த சீசனில் தோற்றுள்ளது. "இதை மன்னிக்கவே முடியாது" என ஆர்சிபி கேப்டன் கோலி கூறியுள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆர்சிபி அணி இதுவரை ஒரு சீசனிலும் கோப்பையை வென்றதில்லை. இந்த சீசனிலும் ஒரு போட்டியையும் இதுவரை வெல்லவில்லை. விராட் கோலி அணியினரின் செயல்பாடு சரியாக இல்லை என்று வருத்தத்தில் உள்ளார். "நமக்கு வரும் வாய்ப்புகளை நாம் தான் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் மன்னித்துக் கொண்டே இருக்க முடியாது. இந்த சீசனில் இதுதான் ஆர்சிபியின் நிலையாக உள்ளது" என்று ஆறாவது தோல்விக்கு பிறகு கோலி கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் மிக மோசமாக ஆடிய அணிகளில் ஆர்சிபி இணைந்துள்ளது. இதற்கு முன்பு டெல்லி கேப்பிட்டல்ஸ் (டெல்லி டேர் டெவில்ஸ்) 2013ம் ஆண்டு ஆறு போட்டிகளை தொடர்ந்து தோல்வியுற்றிருந்தது.

"தெளிவான எண்ணம் இல்லாமல் போனால், நமக்கு வரும் வாய்ப்புகள் மீது கவனம் செலுத்துவது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும். போட்டியை வெற்றியாக மாற்ற தெளிவு மிகவும் முக்கியம்" என்றார் கோலி.

"ஷ்ரேயாஸ் ஐயர் 67 ரன்கள் எடுத்தார். ஆட்டத்தின் பாதியில் அவர் வெளியேறியும் மீண்டும் ஆட்டத்தை தொடர்ந்தார். நமக்கு வாய்ப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம்" என்றார்.

பார்திவ் பட்டேல் அவுட் செய்தும், ஷ்ரேயாஸுக்கு இன்னொரு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இதுவரை ஆர்சிபி அணி 15 கேட்ச்களை தவறவிட்டுள்ளது. ஒரு கட்டத்துக்கு பிறகு யாரையும் கன்ட்ரோல் செய்வது கடினமென கோலி நினைத்துள்ளார்.

"அணியினரிடம் இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை. போதுமான அளவிற்கு சொல்லி, பொறுப்புணர்ந்து நடக்கும்படி கூறியும் இதுவரை ஒன்றும் நடக்கவில்லை" என்று கூறினார். கோலி, ஐபிஎல் தொடரில் 5,151 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார். 

"தனிப்பட்ட முறையில் யாரையும் கட்டுப்படுத்த நினைக்கவில்லை. கடைசியில் எல்லாம் ஒருவருடைய திறமைதான் காரணமாக இருக்க முடியும். எது நடந்தாலும், ஒரு அணியாக அதை கொண்டாட வேண்டும், இல்லையென்றால் ஒரு நல்ல விளையாட்டை விளையாட முடியாது" என்றார்.

கோலி, ஆர்சிபி அணியை கடந்த ஆறு ஆண்டுகளாக தலைமை தாங்கி வருகிறார். ஆனால், வெற்றி இன்னும் அடையவில்லை. கடந்த இரண்டு ஐபிஎல் சீசனில் ஆறு மற்றும் எட்டாவது இடத்தில் இருந்தது ஆர்சிபி.

Comments
ஹைலைட்ஸ்
  • ஆர்சிபி அணி ஆறாவது முறையாக இந்த சீசனில் தோற்றுள்ளது
  • ஐபிஎல் தொடரில் மிக மோசமாக ஆடிய அணிகளில் ஆர்சிபி இணைந்துள்ளது
  • இதுவரை ஆர்சிபி அணி 15 கேட்ச்களை தவறவிட்டுள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
"ஸ்மித் மிக மோசமாக சதமடிக்கக் கூடியவர்" - கோலியுடன் ஒப்பிட்ட ஜாண்டி ரோட்ஸ்
"ஸ்மித் மிக மோசமாக சதமடிக்கக் கூடியவர்" - கோலியுடன் ஒப்பிட்ட ஜாண்டி ரோட்ஸ்
"விராட் கோலியைப் போலவே ஷிகர் தவானின் ஆட்டமும் முக்கியமானது" - ஹர்பஜன் சிங்
"விராட் கோலியைப் போலவே ஷிகர் தவானின் ஆட்டமும் முக்கியமானது" - ஹர்பஜன் சிங்
Narendra Modi Birthday: வாழ்த்து தெரிவித்த கிரிக்கெட் வீரர்கள்!
Narendra Modi Birthday: வாழ்த்து தெரிவித்த கிரிக்கெட் வீரர்கள்!
"தோனியின் ஓய்வு குறித்து தேர்வுக்குழு, கோலி முடிவெடுக்க வேண்டும்": கங்குலி!
"தோனியின் ஓய்வு குறித்து தேர்வுக்குழு, கோலி முடிவெடுக்க வேண்டும்": கங்குலி!
"
"'A' ஃபார் அனுஷ்கா" - கோலி வெளியிட்ட புகைப்படத்தை ஆராய்ந்த ரசிகர்கள்!
Advertisement