விளாசித் தள்ளிய வீராங்கனைகள்: உலக சாதனை படைத்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி!

Updated: 09 June 2018 16:48 IST

நியூசிலாந்து அணியே தங்களது சாதனையை 21 ஆண்டுகளுக்குப் பின்னர் முறியடித்துள்ளது

New Zealand Women Shatter World Record, Register Highest ODI Total Of All Time
Suzie Bates and Maddy Green both slammed tons against Ireland © Twitter

கிரிக்கெட் உலகின் புதிய சாதனையாக ஒரு நாள் போட்டித் தொடர் ஒன்றில் நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி 490 ரன்கள் எடுத்து 21 ஆண்டுகளுக்கு முந்தைய தங்கள் அணி சாதனையையே முறித்துள்ளனர்.

டப்லின் நகரில் அயர்லாந்துக்கு எதிராக நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியினரும் மோதிய ஒரு நாள் போட்டித் தொடரில் நியூசிலாந்து அணி வரலாற்றுச் சாதனையாக 490 ரன்கள் எடுத்தது. பெண்களுக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இதற்கு முன்னதாக இதே நியூசிலாந்து அணி தான் கடந்த 1997-ம் ஆண்டு கிரிஸ்ட் சர்ச் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக ஐந்து விக்கெட் இழப்புக்கு 455 ரன்கள் எடுத்திருந்தது சாதனையாக் இருந்தது.
 

 

தற்போது அதே நியூசிலாந்து அணியே தங்களது சாதனையை 21 ஆண்டுகளுக்குப் பின்னர் முறியடித்துள்ளது. டப்லின் மைதானத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியினர் பேட்டிங் செய்வதாகத் தேர்ந்தெடுத்தனர். தொடக்கத்தில் இருந்தே விளாசித் தள்ளிய நியூசிலாந்து வீராங்கனைகள், எதிரணியரான அயர்லாந்து வீராங்கனைகளுக்கு 490 ரன்களை மைல்கல்லாக நிச்சயித்தது.

ஆனால், நியூசிலாந்து வீராங்கனைகளின் பந்துவீச்சில் துவண்ட அயர்லாந்து வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டத்தை இழந்தனர். இதனால் உலக சாதனையுடன் போட்டியை நியூசிலாந்து வென்றது. அணியின் கேப்டன் சூசி பேட்ஸ் 94 பந்துகளுக்கு 151 ரன்கள் விளாசியது அதிகப்படியானதாக உள்ளது.

இந்த கிரிக்கெட்டில் ஆண்களுக்கான ஒரு நாள் போட்டியில் அதிகப்பட்சமாக இங்கிலாந்து அணி 444 ரன்கள் எடுத்ததே இதுவரை சாதனை எல்லையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments
ஹைலைட்ஸ்
  • டப்லின் நகரில் பெண்கள் கிரிக்கெட்டின் ஒருநாள் போட்டித் தொடர் நடக்கிறது
  • அயர்லாந்து - நியூசிலாந்து இடையே போட்டி நடந்தது
  • இதில் 490 ரன்கள் எடுத்து வென்றது நியூசிலாந்து அணி
தொடர்புடைய கட்டுரைகள்
நியூசிலாந்து நாட்டின் கிரிக்கெட் ஓரின தம்பதி கர்ப்பம்!
நியூசிலாந்து நாட்டின் கிரிக்கெட் ஓரின தம்பதி கர்ப்பம்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனையை திருமணம் செய்த நியூசிலாந்து கிரிக்கெட் வீராங்கனை!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனையை திருமணம் செய்த நியூசிலாந்து கிரிக்கெட் வீராங்கனை!
கிரிக்கெட்டில் இப்படி ஒரு அவுட்டை பார்த்திருக்க மாட்டீர்கள்...!!!
கிரிக்கெட்டில் இப்படி ஒரு அவுட்டை பார்த்திருக்க மாட்டீர்கள்...!!!
''இன்னொரு சரிவை சந்திக்காமல் இருக்க‌ நான் 20வது ஓவர் வரை ஆடவேண்டும்'' ஸ்மிருதி மந்தனா!
அதிவேக டி20 அரைசதம் அடித்த இந்திய வீராங்கனை - ஸ்மிருதி மந்தனா சாதனை!
அதிவேக டி20 அரைசதம் அடித்த இந்திய வீராங்கனை - ஸ்மிருதி மந்தனா சாதனை!
Advertisement