15 பந்தில் 6 விக்கெட்: இலங்கையை ஓடவிட்ட ட்ரெண்ட் போல்ட்

Updated: 28 December 2018 11:00 IST

6/30 என்ற தனது டெஸ்ட் போட்டிகளின் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார் ட்ரெண்ட் போல்ட்.

Trent Boult Takes 6 Wickets In 15 Balls To Crush Sri Lanka - Watch
ட்ரெண்ட் போல்ட், 230 விக்கெட்டுகளுடம் அதிக விக்கெட் வீழ்த்திய நியூஸிலாந்து வீரர்களில் 5ம் இடத்தில் உள்ளார். © AFP

இலங்கை அணி நியூஸிலாந்தில் பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் ஆடிவருகிறது. கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ட்ரெண்ட் போல்ட்டின் அபார பந்துவீச்சால் இலங்கை அணி மோசமான சரிவை சந்தித்தது. 88 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்த இலங்கை அடுத்த 15 ரன்களுக்கு மீதமிருந்த 6 விக்கெட்டுகளையும் இழந்து 104 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் நியூஸிலாந்து 74 ரன்கள் முன்னிலை பெற்றது. 

ட்ரெண்ட் போல்ட் இரண்டாம் நாள் ஆட்டம் 40 நிமிடத்துக்குள் இலங்கையின் அனைத்து விக்கெட்டுகளையும் விழ செய்தார். கடைசி 5 விக்கெட்டுகளை வெறும் 4 ரன்களுக்குள் இழந்தது இலங்கை. கடைசி 4 பேரை எல்பிடபள்யூ முறையில் ஆட்டமிழக்க செய்தார் போல்ட். அதனை எதிர்முனையில் இருந்த மேத்யூஸால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. 

முதல் நாளில் போல்ட் வீசிய 10 ஓவர்களில் விக்கெட் விழவே இல்லை. இரண்டாம் நாளில் 5 ஓவர்கள் வீசி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 6/30 என்ற தனது டெஸ்ட் போட்டிகளின் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார்.

இதன் மூலம் 230 விக்கெட்டுகளுடம் அதிக விக்கெட் வீழ்த்திய நியூஸிலாந்து வீரர்களில் 5ம் இடத்தில் உள்ளார். இவருக்கு முன் ரிச்சர்ட் ஹாட்வி (431), வெட்டோரி(361), சவுத்தி(235), மார்ட்டின்(233) விக்கெட்டுகளுடன் முதல் 4 இடத்தில் உள்ளனர். 

இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியின் கடைசிநாளில் மழை வந்து முடிவில்லாமல் போனது. தொடர் தற்போது 0-0 என்று சமநிலையில் உள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
IPL 2020: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறிய ட்ரென்ட் போல்ட்
IPL 2020: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறிய ட்ரென்ட் போல்ட்
"தோனி, ஜடேஜா க்ரீஸில் இருந்தால் எதுவும் நடக்கலாம்" - ட்ரெண்ட் போல்ட்
"தோனி, ஜடேஜா க்ரீஸில் இருந்தால் எதுவும் நடக்கலாம்" - ட்ரெண்ட் போல்ட்
நியூசிலாந்து கிரிக்கெட் விருதுகள்: வில்லியம்சனுக்கு மூன்று விருதுகள்!
நியூசிலாந்து கிரிக்கெட் விருதுகள்: வில்லியம்சனுக்கு மூன்று விருதுகள்!
"இந்த இரண்டிலும் நியூசிலாந்து அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது" - போல்ட்
"இந்த இரண்டிலும் நியூசிலாந்து அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது" - போல்ட்
விநோதமாக ஷாட் ஆடிய போல்ட்.. விழுந்து விழுந்து சிரித்த ரோஹித்!
விநோதமாக ஷாட் ஆடிய போல்ட்.. விழுந்து விழுந்து சிரித்த ரோஹித்!
Advertisement