இதுதாங்க இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்ஸி!

Updated: 02 March 2019 11:26 IST

புதிய ஜெர்ஸியை அணிந்து இந்திய துணை கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் விக்கெட் கீப்பர் தோனி ஆகியோர் போஸ் கொடுத்துள்ளனர். 

Team India New Jersey Launched Ahead Of Australia ODI Series, World Cup 2019
வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோரும் ஜெர்ஸி அணிந்து போஸ் கொடுத்துள்ளனர். © BCCI

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இன்று விளையாட ஆரம்பிக்க உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் புதிய ஜெர்ஸி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஜெர்ஸியை அணிந்து இந்திய துணை கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் விக்கெட் கீப்பர் தோனி ஆகியோர் போஸ் கொடுத்துள்ளனர். 

இந்த இருவருடன், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோரும் ஜெர்ஸி அணிந்து போஸ் கொடுத்துள்ளனர். இந்த புதிய ஜெர்ஸியில், இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் மற்றும் டி20 உலகக் கோப்பைகளை வென்ற தேதிகள் அச்சிடப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும். 

இது குறித்து ரோகித் ஷர்மா, ‘ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து, இந்த புதிய ஜெர்ஸியைத்தான் நாங்கள் அணிய உள்ளோம். இந்த ஜெர்ஸியின் கூடுதல் சிறப்பு, இந்தியா சார்பில் உலகக் கோப்பை வென்ற தேதிகள் அச்சிடப்பட்டுள்ளன. இந்த புதிய ஜெர்ஸி பார்ப்பதற்கும் சிறப்பானதாக இருக்கிறது' என்றுள்ளார். 

வரும் மே 30 ஆம் தேதி முதல் இங்கிலாந்தில், ஒருநாள் உலகக் கோப்பை ஆரம்பமாக உள்ளது. இந்த உலகக் கோப்பைக்கு முன்னர் இந்திய அணி விளையாடும் கடைசி ஒருநாள் தொடர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும் தொடரே ஆகும். எனவே, இந்தத் தொடரில் இந்திய அணி, தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும். ஐதராபாத்தில் இன்று பகல் இரவு ஆட்டமாக முதல் ஒருநாள் போட்டி ஆரம்பமாகும். 

சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு டி20 போட்டிகள் தொடரில் இந்தியா தோல்வியடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Comments
ஹைலைட்ஸ்
  • புதிய ஜெர்ஸியில் சில சுவாரஸ்யங்களும் உள்ளன
  • தோனி, ரோகித் ஆகியோர் புதிய ஜெர்ஸியுடன் போஸ் கொடுத்துள்ளனர்
  • பும்ரா, ராகுலும் ஜெர்ஸியை அணிந்து போஸ் கொடுத்துள்ளனர்
தொடர்புடைய கட்டுரைகள்
“பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரதர்” - ஏபிடிக்கு வாழ்த்து தெரிவித்த விராட் கோலி!
“பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரதர்” - ஏபிடிக்கு வாழ்த்து தெரிவித்த விராட் கோலி!
“விட்டுவிலகுவது அவ்வளவு எளிதான விஷயமல்ல” - அனுஷ்கா ஷர்மா பகிர்ந்த செய்தி!
“விட்டுவிலகுவது அவ்வளவு எளிதான விஷயமல்ல” - அனுஷ்கா ஷர்மா பகிர்ந்த செய்தி!
IND vs NZ: மீம் மெட்டீரியலாக மாறிய கோலி பதிவிட்ட புகைப்படம்!
IND vs NZ: மீம் மெட்டீரியலாக மாறிய கோலி பதிவிட்ட புகைப்படம்!
அனுஷ்கா ஷர்மாவுடன் விராட் கோலி: இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்! 
அனுஷ்கா ஷர்மாவுடன் விராட் கோலி: இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்! 
“புதிய லோகோவை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது” - ஆர்சிபி கேப்டன் விராட் கோலி!
“புதிய லோகோவை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது” - ஆர்சிபி கேப்டன் விராட் கோலி!
Advertisement