"டெண்டுல்கரை யாரும் நெருங்க மாட்டார்கள் என்று நினைத்தேன்" - கோலியை பாராட்டிய கபில் தேவ்

Updated: 13 September 2019 17:52 IST

சச்சின் டெண்டுல்கர் நிர்ணயித்த தரத்திற்கு யாராவது நெருங்கி வருவார்கள் என்று தான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்று கூறி விராட் கோலியை பாராட்டினார் கபில் தேவ்.

Never Expected Somebody Could Come Close To Sachin Tendulkar: Kapil Dev Lauds Virat Kohli
ஒருநாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கரை விட 6 சதங்கள் மட்டுமே பின் தங்கியுள்ளார் விராட் கோலி. © AFP

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர் நிர்ணயித்த தரத்திற்கு யாராவது நெருங்கி வருவார்கள் என்று தான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்று கூறி விராட் கோலியை பாராட்டினார். "கோலி இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. வேலையின் பாதியில் இருக்கும் போது, அவரை குறித்து பேசுவது சரியல்ல. ஆனால் இப்போது அவர் நமக்குக் கொடுத்திருப்பது இணையற்றது. சச்சின் டெண்டுல்கருக்கு அருகில் யாராவது நெருங்கி வருவார்கள் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் கோலி விளையாட்டை வேறு நிலைக்கு கொண்டு சென்றுள்ளார்," என்று கூறியுள்ளார் கபில் தேவ்.

டெல்லி  மற்றும் மாவட்ட கிரிக்கெட் வாரியம் ஃபெரோஷா கோட்லா மைதானத்தின் பெயரை அருண் ஜெட்லி என மாற்றியமைத்துள்ளது. 

கபில் தேவ், அருண் ஜெட்லி 1999 முதல் 2013 வரை டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தவர், கிரிக்கெட்டுக்காக அவர் நிறைய செய்துள்ளார் என்றார்.

"அவர்கள் என்ன செய்தாலும் அது போதுமானதாக இருக்காது. அவர் கிரிக்கெட்டுக்காக நிறைய செய்துள்ளார். நான் தனிப்பட்ட முறையில் அவர்கள் என்ன செய்கிறார்களோ அது குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால் அவருக்கு விளையாட்டு பற்றி அவ்வளவு தெரியும். டெல்லி கிரிக்கெட் அசோஷியேஷனுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்," என்றார்.

நிகழ்ச்சிக்கு வந்த முன்னாள் வீரர் நிகில் சோப்ரா: "அவர் (ஜெட்லி) கிரிக்கெட்டை திறந்த மனதுடன் ஊக்குவித்துள்ளார். அவருக்கு எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் வந்து ரஞ்சி ட்ராஃபியில் எங்கள் போட்டியை பார்ப்பார். ஸ்டேடியத்துக்கு அவரின் பெயரிடப்பட்டது என்பது ஒரு நல்ல விஷயம் என்று நான் நினைக்கிறேன். அவர் உண்மையிலேயே இதற்கு தகுதியானவர்," என்றார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
விராட் கோலியின் வினோத ரியாக்‌ஷன்...
விராட் கோலியின் வினோத ரியாக்‌ஷன்... 'கல்லி பாய்'உடன் ஒப்பிட்ட ரசிகர்கள்!
டாஸின் போது தென்னாப்பிரிக்காவின் Proxy கேப்டன்... கோலியின் வினோத ரியாக்‌ஷன்!
டாஸின் போது தென்னாப்பிரிக்காவின் Proxy கேப்டன்... கோலியின் வினோத ரியாக்‌ஷன்!
3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் போட டு பிளெசிஸ் வர மாட்டார்... ஏன்?
3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் போட டு பிளெசிஸ் வர மாட்டார்... ஏன்?
இந்தியா vs தென்னாப்பிரிக்கா மூன்றாவது டெஸ்ட்: எங்கு, எப்போது பார்க்கலாம்?
இந்தியா vs தென்னாப்பிரிக்கா மூன்றாவது டெஸ்ட்: எங்கு, எப்போது பார்க்கலாம்?
"கோலி எல்லாவற்றையும் மாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது" - சவுரவ் கங்குலி!
"கோலி எல்லாவற்றையும் மாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது" - சவுரவ் கங்குலி!
Advertisement