Listen to the latest songs, only on JioSaavn.com
 

ஹர்திக் பாண்ட்யாவுடன் நடாசா பதிவிட்ட காதல் நிறைந்த புகைப்படம்!

Updated: 26 March 2020 11:15 IST

ஹர்திக் பாண்ட்யா மற்றும் அவருடைய வருங்கால மனைவி நடாசா இருவரும், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க வீட்டிலேயே இருக்குமாறு தங்களுடைய ரசிகர்களைக் கேட்டுக்கொண்டனர்.

Natasa Stankovic Posts Loved-Up Picture With Hardik Pandya, Urges Fans To "Stay Home, Stay Safe"
ஹர்திக் பாண்ட்யா ஜனவரி 1 ஆம் தேதி நடாசா ஸ்டான்கோவிக் உடனான நிச்சயதார்த்தத்தை அறிவித்திருந்தார். © Instagram

ஹர்திக் பாண்ட்யா மற்றும் அவருடைய வருங்கால மனைவி நடாசா இருவரும், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க வீட்டிலேயே இருக்குமாறு தங்களுடைய ரசிகர்களைக் கேட்டுக்கொண்டனர். நடிகை நடாசா, ஹர்திக் பாண்ட்யாவுடன் காதல் பொங்கும் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, “வீட்டில் இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்” என்று தன்னுடைய ரசிகர்களை வலியுறுத்தினார். இந்தப் பதிவுக்கு ஹர்திக் பாண்ட்யா சிவப்பு இதய எமோஜிவுடன் பதிலளித்தார். இந்திய அணியின் கே.எல்.ராகுலும் சிவப்பு எமோஜியுடன் கமெண்ட் பிரிவில் பதிலளித்தார்.

#stayhomestaysafe #quarantine @hardikpandya93

A post shared by Nataa Stankovi (@natasastankovic__) on

புத்தாண்டு தினத்தன்று, பாண்ட்யா செர்பிய நடிகை ஸ்டான்கோவிக் உடனான நிச்சயதார்த்தத்தை சமூக ஊடகங்களில் அறிவித்திருந்தார்.

இன்ஸ்டாகிராமில் ஒரு சில படங்கள் மற்றும் வீடியோவுடன், "மை தேரா, து மேரி ஜானே, சாரா இந்துஸ்தான. 01.01.2020 # enenaged." என்று ஹிந்தி பாடல் வரிகளுடன் பதிவிட்டார்.

கிரிக்கெட் வீரர்-நடிகர் ஜோடி ஒருபோதும் தங்கள் ரசிகர்களை அன்பான படங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் மூலம் வசீகரிக்கத் தவறவில்லை.

கொடிய கோவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்கான தடுப்பு நடவடிக்கையைப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததை அடுத்து, புதன்கிழமை தொடங்கி 21 நாட்களுக்கு நாடு ஒரு முழுமையான லாக் டவுனில் உள்ளது.

கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் தங்கள் ரசிகர்கள் வீட்டிலேயே இருக்குமாறு வலியுறுத்தி, நாடு முழுவதும் இருந்து பல கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிற விளையாட்டு வீரர்கள் லாக் டவுனுக்கு தங்கள் ஆதரவை வழங்கினர்.

புதன்கிழமை, டீம் இந்தியா கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா ஆகியோர் ட்விட்டரில் ஒரு வீடியோ செய்தியில் லாக்டவுனின் போது தங்கள் ரசிகர்களை வீட்டில் தங்குமாறு கேட்டுக்கொண்டனர்.

“இவை சோதனை நேரங்கள் மற்றும் இந்த சூழ்நிலையின் தீவிரத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நமக்குச் சொல்லப்பட்டிருப்பதைப் பின்பற்றுவோம். இது எல்லோருக்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோள்,” என்று விராட் கோலி 51 விநாடி கொண்ட வீடியோவுக்குத் தலைப்பிட்டார். 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான ஒருநாள் தொடர் ரத்து செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து, ஐபிஎல் தொடரும் ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Comments
ஹைலைட்ஸ்
  • ஹர்திக், நடாசா ஆகியோர் ரசிகர்களை வீட்டில் தங்குமாறு கேட்டுக்கொண்டனர்
  • நடாசா தனிமைப்படுத்தலுக்கு மத்தியில் ஹர்திக் உடன் ஒரு படத்தை பதிவிட்டார்
  • ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா சிவப்பு இதய ஈமோஜியுடன் பதிலளித்தார்
தொடர்புடைய கட்டுரைகள்
லாக்டவுனில் தன்னுடைய உடலை ஃபிட்டாக வைத்திருக்கப் பயிற்சி செய்யும் ஹர்திக் பாண்ட்யா!
லாக்டவுனில் தன்னுடைய உடலை ஃபிட்டாக வைத்திருக்கப் பயிற்சி செய்யும் ஹர்திக் பாண்ட்யா!
“வீட்டிலேயே வேடிக்கையாக நேரத்தைக் கழிக்கலாம்” - பாண்ட்யா சகோதரர்கள் வெளியிட்ட வீடியோ!
“வீட்டிலேயே வேடிக்கையாக நேரத்தைக் கழிக்கலாம்” - பாண்ட்யா சகோதரர்கள் வெளியிட்ட வீடியோ!
ஹர்திக் பாண்ட்யாவுடன் நடாசா பதிவிட்ட காதல் நிறைந்த புகைப்படம்!
ஹர்திக் பாண்ட்யாவுடன் நடாசா பதிவிட்ட காதல் நிறைந்த புகைப்படம்!
“ஹர்திக் பாண்ட்யா ஆல்-ரவுண்டராக பென் ஸ்டோக்ஸுக்கு சவால் விட முடியாது” - பிராட் ஹாக்
“ஹர்திக் பாண்ட்யா ஆல்-ரவுண்டராக பென் ஸ்டோக்ஸுக்கு சவால் விட முடியாது” - பிராட் ஹாக்
“ஒருவரை ஒருவர் கவனித்துக்கொள்வதே தனிமைப்படுதல்” - க்ருணால் பிறந்தநாளுக்கு வாழ்த்திய ஹர்திக்!
“ஒருவரை ஒருவர் கவனித்துக்கொள்வதே தனிமைப்படுதல்” - க்ருணால் பிறந்தநாளுக்கு வாழ்த்திய ஹர்திக்!
Advertisement