டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்ட முரளி விஜய், கவுன்டி கிரிக்கெட்டில் சதம் விளாசல்!

Updated: 14 September 2018 12:29 IST

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடிய விஜய் 20, 6, 0 மற்றும் 0 என்ற ரன்களை மட்டுமே எடுத்தார்

Murali Vijay Responds To His Test Omission With Century In County Cricket
எஸ்ஸக்ஸ் அணிக்காக விளையாடிய விஜய், 2வது இன்னிங்ஸில் சதம் விளாசினார் © Twitter

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக தான் விளையாடி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினார் முரளி விஜய். இதனால், அடுத்தடுத்து வந்த போட்டிகளில் அவர் அணியில் இடம் பெறவில்லை. இந்நிலையில் இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட்டில் எஸ்ஸக்ஸ் அணிக்காக விளையாடிய அவர், சதம் விளாசியுள்ளார்.

முதன்முறையாக இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடிய விஜய், எஸ்ஸக்ஸ் அணிக்காக களமிறங்கினார். நாட்டிங்ஹாம்ஷைர் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியின் முதல் இன்னிங்ஸில் விஜய், அரை சதம் விளாசினார். தொடர்ந்து அவர் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் விளாசினார். இதனால் எஸ்ஸக்ஸ் அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடிய விஜய் 20, 6, 0 மற்றும் 0 என்ற ரன்களை மட்டுமே எடுத்தார். ஆனால், எஸ்ஸக்ஸ் அணிக்கு எதிராக அவர் பந்துகளை நாலா புறமும் சிதறடித்து, தனது ஃபார்மை நிலைநாட்டியுள்ளார்.

எஸ்ஸக்ஸ் அணியிலிருந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் பீட்டர் சிடில், விலகியதைத் தொடர்ந்து விஜய் அணியில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஒரே ஓவரில் 74 ரன்னிலிருந்து 100க்கு தாவிய தமிழக வீரர் விஜய்!
ஒரே ஓவரில் 74 ரன்னிலிருந்து 100க்கு தாவிய தமிழக வீரர் விஜய்!
டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்ட முரளி விஜய், கவுன்டி கிரிக்கெட்டில் சதம் விளாசல்!
டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்ட முரளி விஜய், கவுன்டி கிரிக்கெட்டில் சதம் விளாசல்!
2வது டெஸ்ட்டில் படுதோல்வி… பேட்டிஙை நொந்துகொள்ளும் கோலி!
2வது டெஸ்ட்டில் படுதோல்வி… பேட்டிஙை நொந்துகொள்ளும் கோலி!
Advertisement