பிசிசிஐ செய்த தோனி புரொஃபைல் குளறுபடி ட்விட்டரில் சிரிப்பலைகளை கிளப்பியுள்ளது

Updated: 22 July 2018 13:00 IST

பிசிசிஐ தன்னுடைய வீரர்களின் புரொஃபைல் பக்கத்தில் தவறுதலாக தோனியை இன்றும் இந்திய கேப்டன் என குறிப்பிட்டிருந்தது

MS Dhoni

இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் எம்.எஸ். தோனி சரிவர விளையாடாததை அடுத்து அவரின் எதிர்காலத்தைப் பற்றி மீண்டும் செய்திகளில் விவாதம் கிளம்பியுள்ளது. அத்தனை வதந்திகளையும் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மறுத்து, முன்னாள் இந்திய கேப்டன் "எங்கும் செல்லப்போவதில்லை" எனத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் முடிவதற்குள்ளாக, தோனியை பற்றிய மற்றுமொரு சம்பவம் ட்விட்டரின் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிசிசிஐ தன்னுடைய வீரர்களின் புரொஃபைல் பக்கத்தில் தவறுதலாக தோனியை இன்றும் இந்திய கேப்டன் என குறிப்பிட்டிருந்தது.

இந்த தவறு ட்விட்டரில் காட்டுத்தீ போல பரவி சமூக வலைதளத்தின் சிரிப்பலைகளை கிளப்பியுள்ளது.

இங்கிலாந்துடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 58 பந்துகளுக்கு 37 ரன்கள் என மந்தமான ஆட்டத்தையடுத்து, முன்னாள் இந்திய கேப்டன் தோனி கடும் விமர்சனத்திற்கு உள்ளானார்.

லிமிடெட் ஓவர் கிரிக்கெட்டின் தலை சிறந்த ஃபினிஷர் என புகழப்பட்ட தோனி கடந்த சில வருடங்களாக அதிக அழுத்தம் வாய்ந்த ஆட்டங்களை முடிப்பதற்கு திணறியுள்ளார்.

ஆனால் தற்போதைய கேப்டன் தோனிக்கு ஆதரவாக பேசியுள்ளார்: "அவர் விளையாடுவது போன்று சகஜமான முறையில் விளையாட முடியாத போதெல்லாம் இது மீண்டும், மீண்டும் வருகிறது".

"மக்கள் மிகவும் விரைவாக முடிவிற்கு வந்துவிடுவது துர்திஷ்டவசமானது".

மேலும் கோலி: "அவர் சிறப்பாக விளையாடுகிற மக்கள் அவரை சிறந்த ஃபினிஷர் என அழைக்கின்றனர், ஆட்டம் சிறப்பாக இல்லாத தருனத்தில் அனைவரும் தாக்குகின்றனர்"

"கிரிக்கெட்டில் நம் அனைவருக்கும் மோசமான நாட்கள் இருக்கும், அதிலும் இன்று அனைவருக்கும் மோசமானது அவருக்கு மட்டுமல்ல".

2014ம் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்த தோனி 321 ஒருநாள் போட்டிகள் மற்றும் 93 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 

321 ஒருநாள் போட்டிகளில், தோனி 10,046 ரன்கள் 51.25 சராசரியில் எடுத்துள்ளார். அவர் 19 சதங்கள், 67 அரை சதங்கள் அடித்துள்ளார்.

தோனி 93 டி20 போட்டிகளில் 37.17 சராசரியில் இரண்டு அரை சதங்கள் உட்பட 1,487 ரன்கள் எடுத்துள்ளார்.

தோனி செப்டம்பர் 2017ல் முதல் டி20 உலககோப்பைக்கு முன்பாக இந்திய கேப்டனாக அறிவிக்கப்பட்டார். பின்னர் ஒரு மாத காலத்திற்குள்ளாக ஒருநாள் போட்டியிலும் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கும்ப்ளேவின் ஓய்விற்கு பிறகு 2008ம் ஆண்டில் டெஸ்ட் அணிக்கும் கேப்டனாக அறிவிக்கப்பட்டார் தோனி.

தோனியின் தலைமையின் கீழ் இந்தியா 2011ல் 50 ஓவர் உலககோப்பை மற்றும் 2007ல் டி20 உலககோப்பை ஆகியவற்றையும் வென்றுள்ளார். தோனி 2013ல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி சேம்பியன்ஸ் ட்ராஃப்பியிலும் வெற்றி பெற இந்திய அணியையும் வழி நடத்தியிருந்தார்.

Comments
ஹைலைட்ஸ்
  • பிசிசிஐ புரொஃபைல் பக்கத்தில் தோனியை இந்திய கேப்டன் என குறிப்பிட்டுள்ளது
  • பிசிசிஐ-யின் தவறு கவனிக்கப்படாமல் இல்லை
  • பிசிசிஐ-யின் இந்த தவறை ரசிகர்கள் ட்விட்டரில் கலாய்த்து தள்ளிவிட்டனர்
தொடர்புடைய கட்டுரைகள்
இந்தியா vs பங்களாதேஷ்: MS Dhoni-யின் சாதனையை முறியடித்த Virat Kohli....!
இந்தியா vs பங்களாதேஷ்: MS Dhoni-யின் சாதனையை முறியடித்த Virat Kohli....!
"அணியில் இணைகிறாரா தோனி?" - வைரலாகும் பயிற்சி வீடியோ
"அணியில் இணைகிறாரா தோனி?" - வைரலாகும் பயிற்சி வீடியோ
"தோனியின் அறிவுரை தான் எனக்கு இப்போதும் உதவுகிறது" - தீபக் சஹார்
"தோனியின் அறிவுரை தான் எனக்கு இப்போதும் உதவுகிறது" - தீபக் சஹார்
நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் தோனி: தகவல்!
நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் தோனி: தகவல்!
தோனியை குறித்து சிஎஸ்கே வெளியிட்ட பதிவு !!
தோனியை குறித்து சிஎஸ்கே வெளியிட்ட பதிவு !!
Advertisement