"அணியில் இணைகிறாரா தோனி?" - வைரலாகும் பயிற்சி வீடியோ

Updated: 15 November 2019 18:15 IST

ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதான வளாகத்தில் 38 வயதான முன்னாள் இந்திய கேப்டன் நிகர பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதை இந்த வைரல் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

MS Dhoni
ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதான வளாகத்தில் தோனி பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளார். © AFP

உலகக் கோப்பை 2019க்கு பிறகு இரண்டு மாத ஓய்வு அவர் எடுப்பார் என்பது தெரியவந்ததிலிருந்தே இந்திய அணியுடன் எம்.எஸ்.தோனியின் எதிர்காலம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பேசுப்பொருளாக மாறியுள்ளது. அவரது இடைவெளி முடிந்த பிறகும் அவர் தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷுக்கு எதிரான டி20 தொடரில் சேர்க்கப்படவில்லை, இது அவரது ஓய்வு குறித்து மேலும் ஊகங்களுக்கு வழிவகுத்தது. இருப்பினும், சமீபத்தில் இணையத்தில் சுற்றிவரும் ஒரு வீடியோ, அவரை மீண்டும் அணியில் காண விரும்பும் அனைத்து தோனி ரசிகர்களுக்கும் ஒரு நிம்மதியான விஷயமாக இருக்கும். ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதான வளாகத்தில் 38 வயதான முன்னாள் இந்திய கேப்டன் நிகர பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதை இந்த வைரல் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

இருப்பினும், தோனி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பயிற்சியைத் தொடங்கினாலும், இந்தியாவின் அடுத்த வரையறுக்கப்பட்ட ஓவர்கள் அணியில் இடம்பெறவில்லை.

"அவர் மேற்கிந்திய தீவுகள் எதிரான தொடரில் இடம்பெறவில்லை" என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை பிடிஐயிடம் தெரிவித்தார்.

உலகக் கோப்பை 2019ல் இருந்து இந்தியா வெளியேறிய பிறகு, தோனி ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. அவர் ஆரம்பத்தில் காஷ்மீரில் தனது பிராந்திய இராணுவப் பிரிவுக்கு சேவை செய்ய இரண்டு மாத ஓய்வை அறிவித்தார். இது அவரை மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரிலிருந்து வெளியேற வழிவகுத்தது.

இருப்பினும், தோனியின் இடைவேளை முடிந்ததும் தலைமை தேர்வாளர் எம்.எஸ்.கே.பிரசாத் "கட்ந்து வருகிறோம்" என்றும், ரிஷப் பன்ட் முதல் தேர்வு விக்கெட் கீப்பராக வருங்காலத்தில் வருவார் என்றும் கூறினார்.

இளம் விக்கெட் கீப்பரை தோனியும் ஆதரித்ததாக பிரசாத் தெரிவித்தார்.

இருப்பினும், பிசிசிஐயின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சவுரவ் கங்குலி, இந்திய கிரிக்கெட்டில் தோனியின் பங்களிப்பை ஒப்புக் கொண்டார்.

தோனியில் தலைமைக்கு கீழ் சர்வதேச அளவில் அறிமுகமான கங்குலி, "சாம்பியன்கள் மிக விரைவாக முடித்து கொள்வதில்லை" என்று கூறியிருந்தார்.

இந்தியாவின் அடுத்த வரையறுக்கப்பட்ட ஓவர்கள் தொடர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரானது. அவர்கள் மூன்று டி20 போட்டிகள், பல ஒருநாள் போட்டிகளும் ஆடவுள்ளனர்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"பதட்டமடையாமல் திறமைகளை நம்ப வேண்டும் என்று தோனி கற்றுகொடுத்தார்" - பிராவோ
"பதட்டமடையாமல் திறமைகளை நம்ப வேண்டும் என்று தோனி கற்றுகொடுத்தார்" - பிராவோ
ராஞ்சியில் வாக்களித்த தோனி... புகைப்படம் பகிரும் ரசிகர்கள்!
ராஞ்சியில் வாக்களித்த தோனி... புகைப்படம் பகிரும் ரசிகர்கள்!
"இந்திய அணியில் தோனி தன்னை திணித்துகொள்ள மாட்டார்" - ரவி சாஸ்திரி!
"இந்திய அணியில் தோனி தன்னை திணித்துகொள்ள மாட்டார்" - ரவி சாஸ்திரி!
ராணுவ வீரர்கள் பற்றி டிவி தொடரை தயாரிக்கவுள்ளார் தோனி!
ராணுவ வீரர்கள் பற்றி டிவி தொடரை தயாரிக்கவுள்ளார் தோனி!
பழைய இந்தி பாடலைப் பாடிய எம்.எஸ்.தோனி! Viral Video
பழைய இந்தி பாடலைப் பாடிய எம்.எஸ்.தோனி! Viral Video
Advertisement