“லக்‌ஷ்மணுக்கு பவுன்சர் போடும் சச்சின்… உற்று கவனிக்கும் தோனி!”- வைரல் வீடியோ

Updated: 18 May 2019 09:23 IST

அந்த வீடியோவில் மாஸ்டர் ப்ளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், விவிஎஸ் லக்‌ஷ்மணுக்கு சென்னை ட்ரெஸ்ஸிங் அறை உள்ளே பவுன்சர் போட்டு பயிற்சி கொடுப்பதைப் பார்க்க முடிகிறது.

MS Dhoni Watches On As Sachin Tendulkar Bowls Bouncers To VVS Laxman In Throwback Video. Watch
சச்சினும், லக்‌ஷ்மணும் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும்போது, அதை தோனி ஒரு ஓரமாக உட்கார்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறார் © Twitter

மகேந்திர சிங் தோனி, என்னும் கிரிக்கெட் வீரர், ஒரே நாளில் ஸ்டாராக உருவெடுக்கவில்லை. தன் முனைப்பு, விடா முயற்சி, தொடர்ந்து கற்றல் என பல விஷயங்கள் ஒன்று கூடியவையே தோனியின் வெற்றி ரகசியம். அப்படிபட்ட தோனி, 2008 ஆம் ஆண்டு, களத்துக்கு வெளியே நடந்த ஒரு சம்பவத்தில் தன்னையும் அறியாமல் பங்கெடுத்த ஒரு வீடியோ தற்போது லீக் செய்யப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக இருந்த பேடி அப்டன், ஒரு த்ரோ-பேக் வீடியோவை வெளியிட்டுள்ளார். 

வீடியோவைப் பார்க்க:

அந்த வீடியோவில் மாஸ்டர் ப்ளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், விவிஎஸ் லக்‌ஷ்மணுக்கு சென்னை ட்ரெஸ்ஸிங் அறை உள்ளே பவுன்சர் போட்டு பயிற்சி கொடுப்பதைப் பார்க்க முடிகிறது. சச்சினும், லக்‌ஷ்மணும் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும்போது, அதை தோனி ஒரு ஓரமாக உட்கார்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறார். 

2008 ஆம் ஆண்டு, டெஸ்ட் தொடரின் போது இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அப்போது தொடரை இந்திய அணி 1-0 என கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. ஃபார்முக்காக திணறி வந்த லக்‌ஷ்மண், தொடரில் 37, 26, 0, 15 ஆகிய சொற்ப ரன்களை மட்டுமே ஸ்கோர் செய்தார். 

இந்தியாவில், இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய 7 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா, 5-0 என ஒயிட்-வாஷ் செய்ததைத் தொடர்ந்து இந்த டெஸ்ட் தொடர் நடந்தது. 

134 டெஸ்ட் போட்டிகளை விளையாடியுள்ள லக்‌ஷ்மண், 46 சராசரியில் 8,781 ரட்களை குவித்தார். 2012 ஆம் ஆண்டு அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடினார். 

கிரிக்கெட்டின் பிதாமகன் சச்சின் டெண்டுல்கர், மொத்தமாக 200 டெஸ்ட் போட்டிகளை விளையாடினார். அவர் 53.78 சராசரியில் 15,921 ரன்களை குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


 
 

Comments
ஹைலைட்ஸ்
  • டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் லக்‌ஷ்மண், இந்த வீடியோவில் பயிற்சி எடுக்கிறார்
  • சச்சின், லக்‌ஷ்மணுக்காக பவுலராக மாறியுள்ளார்
  • சென்னையில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
IPL 2020: "காட்டின் ராணி" சாக்‌ஷி தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சிஎஸ்கே!
IPL 2020: "காட்டின் ராணி" சாக்‌ஷி தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சிஎஸ்கே!
இந்தியா vs பங்களாதேஷ்: MS Dhoni-யின் சாதனையை முறியடித்த Virat Kohli....!
இந்தியா vs பங்களாதேஷ்: MS Dhoni-யின் சாதனையை முறியடித்த Virat Kohli....!
"அணியில் இணைகிறாரா தோனி?" - வைரலாகும் பயிற்சி வீடியோ
"அணியில் இணைகிறாரா தோனி?" - வைரலாகும் பயிற்சி வீடியோ
"தோனியின் அறிவுரை தான் எனக்கு இப்போதும் உதவுகிறது" - தீபக் சஹார்
"தோனியின் அறிவுரை தான் எனக்கு இப்போதும் உதவுகிறது" - தீபக் சஹார்
நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் தோனி: தகவல்!
நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் தோனி: தகவல்!
Advertisement