'கேப்டன் கூல்' தோனியின் சாகச வீடியோ!

Updated: 01 August 2018 15:10 IST

விளையாட்டு பிரியரான மகேந்திர சிங் தோனி, கிரிக்கெட், கால்பந்து, பாட்மிண்டன் போன்றவற்றில் ஆர்வம் உடையவர்

MS Dhoni Tries New Stunt, Asks Fans To Follow Suit
© Instagram (Screengrab)

கிரிக்கெட், கால்பந்தில் விளையாட்டுகளில் அதிரடி காட்டும் கேப்டன் ‘கூல்’ தோனி, சைக்கிளில் சாகசம் செய்யும் வீடியோ காட்சியை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

பொதுவாகவே, விளையாட்டு பிரியரான மகேந்திர சிங் தோனி, கிரிக்கெட், கால்பந்து, பாட்மிண்டன் போன்றவற்றில் ஆர்வம் உடையவர். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்தும் கேப்டன் ‘கூல்’ தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருகிறார்.
 

 

Just for fun, plz try it at home.

A post shared by M S Dhoni (@mahi7781) on

சமீபத்தில் சைக்கிளில் சாகசம் செய்யும் வீடியோ காட்சியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார், “வேடிக்கையாக செய்தது, வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்” என்ற கேப்ஷனுடன் தோனி பதிவிட்டிருந்தார். சமூக வலைத்தளத்தில் வைரலான இந்த வீடியோ, தோனி ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ளது. எனினும், இது போன்ற சாகசங்களை உரிய பயிற்சி இன்றி முயற்சி செய்வது ஆபத்தானது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது

இந்திய ரசிகர்களின் விருப்பமான கிரிக்கெட் வீரராக தோனி உள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு, தோனி தலைமையிலான இந்திய அணி 27 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று, டெஸ்ட் தர வரிசை பட்டியலில் முதல் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது

சமீபத்தில், இங்கிலாந்திற்கு எதிரான ஒரு நாள் போட்டியில் விளையாடும் போது, 10,000 ரன்களை கடந்து சாதனை படைத்தார். 1-2 என்ற கணக்கில் இங்கிலாந்திற்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணி தொடரை நழுவவிட்டது.

தோனியின் ஓய்வு குறித்து ஒரு பக்கம் கருத்துக்கள் தொடர்ந்து வந்தாலும், ஒரு நாள், இருபது ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து தோனி இன்னும் சிந்திக்கவில்லை என்பது உறுதியாக தெரிகிறது. தொடர்ந்து சிறப்பாக விளையாடுவதே தோனியின் அடுத்தக்கட்ட திட்டமாக உள்ளது.
 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ராஞ்சியில் வாக்களித்த தோனி... புகைப்படம் பகிரும் ரசிகர்கள்!
ராஞ்சியில் வாக்களித்த தோனி... புகைப்படம் பகிரும் ரசிகர்கள்!
"இந்திய அணியில் தோனி தன்னை திணித்துகொள்ள மாட்டார்" - ரவி சாஸ்திரி!
"இந்திய அணியில் தோனி தன்னை திணித்துகொள்ள மாட்டார்" - ரவி சாஸ்திரி!
ராணுவ வீரர்கள் பற்றி டிவி தொடரை தயாரிக்கவுள்ளார் தோனி!
ராணுவ வீரர்கள் பற்றி டிவி தொடரை தயாரிக்கவுள்ளார் தோனி!
பழைய இந்தி பாடலைப் பாடிய எம்.எஸ்.தோனி! Viral Video
பழைய இந்தி பாடலைப் பாடிய எம்.எஸ்.தோனி! Viral Video
"மறக்க முடியாத பயணம்" - சாக்‌ஷி தோனிக்கு நன்றி தெரிவித்த பாடகி ஜாஸ்ஸி கில்
"மறக்க முடியாத பயணம்" - சாக்‌ஷி தோனிக்கு நன்றி தெரிவித்த பாடகி ஜாஸ்ஸி கில்
Advertisement