"உங்களுக்கு ஏற்ற போட்டிகளை தேர்வு செய்யாதீர்கள்" - தோனி மீது கோபப்பட்ட கம்பீர்

Updated: 27 September 2019 13:43 IST

"என்னை பொருத்தவரையில், நீங்கள் இந்தியாவுக்காக விளையாடுகிறீர்கள், போட்டிகளை நீங்கள் தேர்வு செய்யக் கூடாது," என்றார் கம்பீர்.

MS Dhoni "Should Not Be Picking And Choosing Series": Gautam Gambhir
உலகக் கோப்பை முடிந்ததிலிருந்தே தோனியின் ஓய்வு குறித்த யூகங்கள் தொடங்கின. © AFP

முன்னாள் இந்திய கேப்டன் தோனி, கடந்த இரண்டு மாதங்களாக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். உலகக் கோப்பையில் இருந்து இந்திய அணி வெளியேறிய பிறகு தோனி இரண்டு மாதங்கள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று, இந்திய ராணுவத்தில் பணியாற்ற சென்றார். உலகக் கோப்பை முடிந்ததிலிருந்தே தோனியின் ஓய்வு குறித்த யூகங்கள் தொடங்கின. பின்னர் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் அதற்கு இல்லை என்று விளக்கமளித்தார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரை தோனி விலகியிள்ள நிலையில், முன்னாள் தொடக்க வீரர் கவுதம் கம்பீர் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். தோனியின் எதிர்காலத் திட்டம் குறித்து இந்திய கிரிக்கெட் அணியிடம், தேர்வுக்குழுவினரை பேசும்படி கம்பீர் கூறியுள்ளார்.

"நான் இந்த ஒரு விஷயத்தை பராமரித்து வந்துள்ளேன். ஓய்வு பெறுவதென்பது ஒருவரின் தனிப்பட்ட முடிவு, தேர்வுக் குழுவினர் தோனியிடம் அவருடைய எதிர்காலத் திட்டம் குறித்து பேச வேண்டும். என்னை பொருத்தவரையில், நீங்கள் இந்தியாவுக்காக விளையாடுகிறீர்கள், போட்டிகளை நீங்கள் தேர்வு செய்யக் கூடாது," என்றார் கம்பீர்.

உலகக் கோப்பையின் போது, குறைந்த ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்த தோனியை பெரிதும் விமர்சித்தனர். தொடரின் எட்டு இன்னிங்ஸ்களில் ஆடி 87.78 ஸ்ட்ரைக் வீதத்தில் 273 ரன்கள் எடுத்தார்.

தோனி இல்லாத நிலையில் ரிஷப் பன்ட்டுக்கு விக்கெட்டு கீப்பிங் வாய்ப்பு அளிக்க அணி நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் இந்த வாய்ப்பைப் பெற பன்ட் இதுவரை தவறிவிட்டார். 21 வயதான இவர், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு டி20 சர்வதேச போட்டிகளில் 23 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

ரிஷப் பன்ட்டின் மோசமான ஃபோர்மிற்கு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பண்டிட்ஸ் விமர்சித்து வருகின்றனர். பன்ட்டுக்கு இன்னும் நிறைய காலம் உள்ளது என கம்பீர் கூறினார்.

"ஒரு புதிய வீரருக்கு அதிக கவனம் செலுத்தப்படுகிறது. அவருக்கு வெறும் 21 வயது தான், கடந்த இரண்டரை ஆண்டுகளாக தான் அவர் விளையாடுகிறார். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு சதங்கள் குவித்துள்ளார். அவரை யாருடனும் ஒப்பிடக் கூடாது. அணி நிர்வாகம் அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். அவருக்கு வயது குறைவு, இன்னும் எதிர்காலம் அதிகம் உள்ளது." என்றார் கம்பீர்.

"அணி நிர்வாகம் பன்ட்டிடம் பேச வேண்டும். விராட் கோலி மட்டுமல்ல, ரவி சாஸ்திரியும் அவரிடம் பேச வேண்டும். பன்ட்டுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும், அவருக்கு அழுத்தம் கொடுத்தால், அவர் தன்னுடைய திறமையை வெளிக்காட்ட மாட்டார். பன்ட் எப்போதும் தனது ஷாட் தேர்வை சரியாகப் பெற மாட்டார் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவருக்கான நாளில், அவர் நிச்சயம் போட்டியை வெற்றிக்கு அழைத்து செல்வார்," என்று முடித்தார் கம்பீர்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
IPL 2020: "காட்டின் ராணி" சாக்‌ஷி தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சிஎஸ்கே!
IPL 2020: "காட்டின் ராணி" சாக்‌ஷி தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சிஎஸ்கே!
இந்தியா vs பங்களாதேஷ்: MS Dhoni-யின் சாதனையை முறியடித்த Virat Kohli....!
இந்தியா vs பங்களாதேஷ்: MS Dhoni-யின் சாதனையை முறியடித்த Virat Kohli....!
"அணியில் இணைகிறாரா தோனி?" - வைரலாகும் பயிற்சி வீடியோ
"அணியில் இணைகிறாரா தோனி?" - வைரலாகும் பயிற்சி வீடியோ
"தோனியின் அறிவுரை தான் எனக்கு இப்போதும் உதவுகிறது" - தீபக் சஹார்
"தோனியின் அறிவுரை தான் எனக்கு இப்போதும் உதவுகிறது" - தீபக் சஹார்
நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் தோனி: தகவல்!
நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் தோனி: தகவல்!
Advertisement