"தோனியின் எதிர்காலம் குறித்து பிசிசிஐ அவரிடம் தெரிவிக்க வேண்டும்" - வீரேந்தர் சேவாக்

Updated: 19 July 2019 11:49 IST

முன்னாள் தொடக்க வீரர் வீரேந்தர் சேவாக், முன்னாள் கேப்டன் எப்போது ஓய்வு பெறுவார் என்பதை அவரே அறிவிக்கட்டும் என்றார்.

Virender Sehwag Feels MS Dhoni Should Be Informed About His Future By Selectors
குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டிகளில் தோனி தொடர்வாரா என்ற கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன. © AFP

உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணி வெளியேறிய பிறகு குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டிகளில் தோனி தொடர்வாரா என்ற கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன. தோனியின் ஓய்வு குறித்து வதந்திகள் எழுந்தவ வண்ணம் உள்ள நிலையில், முன்னாள் தொடக்க வீரர் வீரேந்தர் சேவாக், முன்னாள் கேப்டன் எப்போது ஓய்வு பெறுவார் என்பதை அவரே அறிவிக்கட்டும் என்றார். மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அணியை இன்று அறிவிக்கயுள்ளனர். தேர்வாளர்கள் தோனியின் எதிர்காலத்தை குறித்து அவரிடம் சொல்ல வேண்டியுள்ளது. "ஓய்வை அறிவிக்கும் விஷயத்தை தோனியிடமே முற்றிலுமாக விட்டுவிட வேண்டும்" என்று செய்தி தொலைக்காட்சிக்கு சேவாக் தெரிவித்தார்.

"தேர்வாளர்கள் தோனியிடம் சென்று இதற்கு மேல் அவர் விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் தொடர முடியாது என்பதை தெரிவிக்க வேண்டும்" என்றார்.

உலகக் கோப்பையில் தோனியின் செயல்பாடும் முற்றிலுமாக விமர்சிக்கப்பட்டது. 2011 உலகக் கோப்பை சேம்பியன் கேப்டன் அதன் பிறகு விராட் கோலி தலைமையில் ஆடி வந்தார்.

தோனி, உலகக் கோப்பையில் எல்லாப் போட்டிகளிலும் இடம்பெற்றார், இதில இரண்டு அரைசதங்கள் அடித்தார். இந்தத் தொடரில் அவரின் அதிகபடியான ரன்கள் 56.

உலகக் கோப்பையின் அரையிறுதி போட்டியில் தோனி 7வது இடத்தில் ஆட வந்தது பல விமர்சனங்களை கொண்டுவந்தது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இதை "தவறான உத்தி" என்றும் கூறினர்.

இருந்தாலும் தோனி, அரையிறுதிப் போட்டியில் அரைசதம் அடித்தார். ஜடேஜாவுடன் இணைந்து 100 ரன்கள் பார்னர்ஷிப்பும் அமைத்தார்.

தோனி இதுவரை 350 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார். இதில் 50.57 சராசரியுடன் 10,773 ரன்கள் குவித்துள்ளார். இவர் அதிகபடியாக 183 ரன்கள் எடுத்துள்ளார்.

Comments
ஹைலைட்ஸ்
  • ஓய்வு குறித்து தோனி தான் முடிவு செய்ய வேண்டும்: சேவாக்
  • குறைந்த ஓவர் போட்டியில் தோனி தொடர்வாரா என்ற கேள்விகள் எழுத் தொடங்கின
  • உலகக் கோப்பையில் தோனியின் செயல்பாடு பெரிதும் விமர்சிக்கப்பட்டது
தொடர்புடைய கட்டுரைகள்
“ஒரு புலி இன்னொரு புலியை சந்தித்தால்...” - தோனி ரசிகரின் வைரல் கமெண்ட்!
“ஒரு புலி இன்னொரு புலியை சந்தித்தால்...” - தோனி ரசிகரின் வைரல் கமெண்ட்!
“இந்திய கேப்டன்களில் சிறந்தவர் தோனி” - சுரேஷ் ரெய்னா
“இந்திய கேப்டன்களில் சிறந்தவர் தோனி” - சுரேஷ் ரெய்னா
ஆர்.பி. சிங் மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோருக்கு பானி பூரி பரிமாறிய தோனி!
ஆர்.பி. சிங் மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோருக்கு பானி பூரி பரிமாறிய தோனி!
“மிக சிறந்த இந்திய கேப்டன் தோனி” - புகழ்ந்த ரோஹித் ஷர்மா!
“மிக சிறந்த இந்திய கேப்டன் தோனி” - புகழ்ந்த ரோஹித் ஷர்மா!
"ஃபாலோவர்ஸை அதிகரிக்க நீ இதை செய்கிறாய்" - சாக்‌ஷியை ட்ரோல் செய்த தோனி!
"ஃபாலோவர்ஸை அதிகரிக்க நீ இதை செய்கிறாய்" - சாக்‌ஷியை ட்ரோல் செய்த தோனி!
Advertisement