இணையத்தில் வைரலாகும் டென்னிஸ் ஆடும் தோனியின் படம்!

Updated: 28 November 2018 11:05 IST

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய டி20 அணியில் தோனி இடம்பெறவில்லை.

MS Dhoni Swaps The Cricket Bat With The Tennis Racquet; See Pictures
டி20 போட்டிகளில் ரிஷ்ப் பண்ட்டுக்கு விக்கெட் கீப்பிங் பணியை வழங்கி விட்டு, ஒருநாள் போட்டியில் தோனியை தொடர வைக்கும் திட்டத்தை பிசிசிஐ வைத்திருப்பதாக கூறப்படுகிறது. © Instagram

இந்திய முன்னாள் கேப்டன் தோனி, தற்போது இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இடம்பெறவில்லை. அதனால் தனது சொந்த ஊரான ராஞ்சியில் உள்ள கிரிக்கெட் மைதானத்துக்கு சென்ற அவர், அங்குள்ளவர்களுடன் சேர்ந்து டென்னிஸ் ஆடியுள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய டி20 அணியில் தோனி இடம்பெறவில்லை.  இந்தியா ஆஸ்திரேலியாவில் 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடிவருகிறது.

சமீபத்தில் நடந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியிலும் தோனி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடரை ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. ஆஸ்திரேலியாவிலும் டி20 தொடரை 1-1 என்ற நிலையில் சமன் செய்தது.

9lhhdm2

Photo Credit: PTI

இதனால் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது என்று பலரும் சொன்ன விமர்சனங்களுக்கு இந்திய கேப்டன் விராட் கோலி பதிலளித்துள்ளார். "தோனி எப்போதும் போல் அணியில் உள்ள இளம் வீரர்களை வழிநடத்துகிறார். அவர் இன்னும் அணியில் தான் இருக்கிறார். "இதை தேர்வுக்குழுவினரே விளக்கிவிட்டனர். நான் தனியாக விளக்க வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன்" என்றும் கூறியுள்ளார்.

டி20 போட்டிகளில் ரிஷ்ப் பண்ட்டுக்கு விக்கெட் கீப்பிங் பணியை வழங்கி விட்டு, ஒருநாள் போட்டியில் தோனியை தொடர வைக்கும் திட்டத்தை பிசிசிஐ வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
MS Dhoni-ஐ ஒப்பந்தப் பட்டியலில் இருந்து BCCI நீக்கியுள்ளது!!
MS Dhoni-ஐ ஒப்பந்தப் பட்டியலில் இருந்து BCCI நீக்கியுள்ளது!!
இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இன்னொரு சாதனை படைத்த கோலி!
இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இன்னொரு சாதனை படைத்த கோலி!
"தோனி ஒருநாள் போட்டிகளிலிருந்து விரைவில் ஓய்வு எடுக்கக்கூடும்" - ரவி சாஸ்திரி!
"தோனி ஒருநாள் போட்டிகளிலிருந்து விரைவில் ஓய்வு எடுக்கக்கூடும்" - ரவி சாஸ்திரி!
India vs Sri Lanka: புதிய வருடத்தில் இன்னொரு புதிய சாதனை படைத்த விராட் கோலி!
India vs Sri Lanka: புதிய வருடத்தில் இன்னொரு புதிய சாதனை படைத்த விராட் கோலி!
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வுபெற்ற நாள் இன்று!
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வுபெற்ற நாள் இன்று!
Advertisement