முதலிடத்தில் நம்ம தல தோனி...!!!

Updated: 03 March 2019 16:56 IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தோனியின் 59 மற்றும் கேதர் ஜாதவின் 81 ரன்கள் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா.

MS Dhoni Overtakes Rohit Sharma To Register Remarkable Record For India In ODIs
இதுவரை மொத்தமாக 223 சிக்ஸர்கள் அடித்துள்ளார் தோனி © AFP

இந்தியா கிரிக்கெட் அணியின் ‘தல' தோனி, மேலும் ஒரு சாதனையை தனக்குரியது ஆக்கியுள்ளார்.

நேற்றைய இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டியில் அரை சதம் விளாசியதுடன் தனக்கே உரிய பவுண்டரி மூலம் இந்தியாவை வெற்றி பெற செய்தார் தோனி.

72 பந்துகளில் 59 ரன்கள் குவித்த மகேந்திர சிங் தோனி, 6 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் விளாசினார். இதன் மூலம் இந்தியா அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்ற பெருமையை தோனி பெற்றார்.

இதுவரை இந்தியா அணிக்காக 216 சிக்ஸர்கள் அடித்துள்ளார் தோனி. அதுபோக, ஆசிய லெவன் அணிக்காக 7 சிக்ஸர்கள் அடித்துள்ளார் தோனி. மொத்தமாக ஒருநாள் போட்டிகளில் 223 சிக்ஸர்கள் அடித்துள்ளார் தோனி.

இந்தியாவிற்காக 216 சிக்ஸர்கள் உடன் முதலிடத்தில் தோனி இருக்க, 215 சிக்ஸர்கள் உடன் இரண்டாவது இடத்தில் ரோஹித் சர்மா உள்ளார். மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் முறையே சச்சின் (195), கங்குலி (189) மற்றும் யுவராஜ் சிங் (153) உள்ளனர்.

நேற்றைய ஆட்டத்தில் அரைசதம் அடித்தது மூலம் ஆஸ்திரேலியாவிர்கு எதிராக தொடர்ச்சியாக நான்காவது போட்டியில் அரைச்சதம் அடித்துள்ளார் தோனி.

237 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்தியா அணி, 99/4 என இக்கட்டான நிலையில் இருந்தது. அப்போது தோனியின் 59 மற்றும் கேதர் ஜாதவின் 81 ரன்கள் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா.

Comments
ஹைலைட்ஸ்
  • MS Dhoni leapfrogs Rohit to become India's highest six-hitter in ODIs
  • MS Dhoni has a total of 216 sixes for India in ODIs
  • Rohit Sharma is one behind with 215 sixes for India in ODIs
தொடர்புடைய கட்டுரைகள்
“ஒரு புலி இன்னொரு புலியை சந்தித்தால்...” - தோனி ரசிகரின் வைரல் கமெண்ட்!
“ஒரு புலி இன்னொரு புலியை சந்தித்தால்...” - தோனி ரசிகரின் வைரல் கமெண்ட்!
“இந்திய கேப்டன்களில் சிறந்தவர் தோனி” - சுரேஷ் ரெய்னா
“இந்திய கேப்டன்களில் சிறந்தவர் தோனி” - சுரேஷ் ரெய்னா
ஆர்.பி. சிங் மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோருக்கு பானி பூரி பரிமாறிய தோனி!
ஆர்.பி. சிங் மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோருக்கு பானி பூரி பரிமாறிய தோனி!
“மிக சிறந்த இந்திய கேப்டன் தோனி” - புகழ்ந்த ரோஹித் ஷர்மா!
“மிக சிறந்த இந்திய கேப்டன் தோனி” - புகழ்ந்த ரோஹித் ஷர்மா!
"ஃபாலோவர்ஸை அதிகரிக்க நீ இதை செய்கிறாய்" - சாக்‌ஷியை ட்ரோல் செய்த தோனி!
"ஃபாலோவர்ஸை அதிகரிக்க நீ இதை செய்கிறாய்" - சாக்‌ஷியை ட்ரோல் செய்த தோனி!
Advertisement