Listen to the latest songs, only on JioSaavn.com
 

"அவர் என்னை உடற்பயிற்சி சோதனையைப் போல் ஓட செய்தார்" - தோனி குறித்து கோலி!

Updated: 12 September 2019 16:19 IST

2007 ஐசிசி டி20 உலகக் கோப்பையை தோனி வழிநடத்தில் இந்தியாவை வெற்றி பெற செய்தார். 2016ம் ஆண்டு கேப்டனாக இருந்த தோனி, இரண்டாவது டி20 உலகக் கோப்பையில் வெற்றி பெற போராடினார்.

MS Dhoni "Made Me Run Like In Fitness Test": Virat Kohli Recalls "Special Night"
மார்ச் 27, 2016 அன்று, இந்தியா தனது கடைசி நிலை ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து. © AFP

2007 ஐசிசி டி20 உலகக் கோப்பையை தோனி வழிநடத்தில் இந்தியாவை வெற்றி பெற செய்தார். 2016ம் ஆண்டு கேப்டனாக இருந்த தோனி, இரண்டாவது டி20 உலகக் கோப்பையில் வெற்றி பெற போராடினார். ஆனால், இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகளிடம் இந்தியா தோற்றது. இப்போதைய கேப்டன் விராட் கோலி தொடரில் நடந்த, "சிறப்பான இரவு" குறித்து நினைவு கூர்ந்தார்."உடற்பயிற்சி சோதனையைப் போல் இயக்கினார்" என்று தோனிக்கு நன்றி தெரிவித்தார். "என்னால் மறக்க முடியாத ஒரு விளையாட்டு. சிறப்பு இரவு. இவர் என்னை ஒரு உடற்பயிற்சி சோதனையைப் போல ஓடச் செய்தார்" என்று விராட் கோலி ட்விட் செய்தார்.

மார்ச் 27, 2016 அன்று, இந்தியா தனது கடைசி நிலை ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

கோலி 82 ரன்கள் குவித்தார், அதில் இக்கட்டான சூழலில் தோனியுடன் இணைந்து அவர் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

38 வயதான தோனி கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூரில் 2019 பிப்ரவரி மாதம் இந்தியாவுக்காக டி 20 ஐ விளையாடினார்.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3 டி20 போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது. தேர்வுக் குழுவினர் 15 பேர் கொண்ட அணியை ஆகஸ்ட் 29ம் தேதி அறிவித்தது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டிகளை வென்ற பிறகு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரை விராட் கோலி வழிநடத்தவுள்ளார்.

ராணுவத்தில் சேவை செய்ய தோனி இரண்டு மாதங்கள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் அவர், தென்னாப்பிரிக்கா தொடரில் இடம்பெறவில்லை.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி தர்மசாலாவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவுள்ளது.

கோலியின் இந்த ட்விட் மற்றும் தோனி இரவு 7 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கவுள்ளார் என்ற செய்தியும் தோனியின் ஓய்வு குறித்து இருக்குமா என்று ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
“இப்போது பப்ஜி இல்லை, வேறு விளையாட்டுக்கு மாறிவிட்டார்” - தோனி குறித்து கூறிய தீபக் சஹார்!
“இப்போது பப்ஜி இல்லை, வேறு விளையாட்டுக்கு மாறிவிட்டார்” - தோனி குறித்து கூறிய தீபக் சஹார்!
2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் டெண்டுல்கர் தோனிக்கு அளித்த முக்கிய ஆலோசனை!
2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் டெண்டுல்கர் தோனிக்கு அளித்த முக்கிய ஆலோசனை!
போதும்... கெளம்பு, கெளம்பு...- கோலி - பீட்டர்சன் நேர்காணல்... நடுவில் புகுந்த அனுஷ்கா ஷர்மா!
'போதும்... கெளம்பு, கெளம்பு...'- கோலி - பீட்டர்சன் நேர்காணல்... நடுவில் புகுந்த அனுஷ்கா ஷர்மா!
தோனி, ஆர்சிபி, கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்றம் முதல் சரிவு வரை - ‘கிங்’ கோலியின் ஓபன் டாக்!
தோனி, ஆர்சிபி, கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்றம் முதல் சரிவு வரை - ‘கிங்’ கோலியின் ஓபன் டாக்!
2011 உலகக் கோப்பை நினைவுகளைப் பகிர்ந்த யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா!
2011 உலகக் கோப்பை நினைவுகளைப் பகிர்ந்த யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா!
Advertisement