முதல் போட்டியில் அரைசதம்... தோனி படைத்த வித்தியாசமான சாதனை!

Updated: 04 March 2019 11:59 IST

412 முதல் தர ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள அவர் 13,000 ரன்களை கடந்தார். இந்த சாதனையை எட்டும் நான்காவது இந்தியர் இவர் ஆவார்.

MS Dhoni Joins Sachin Tendulkar, Sourav Ganguly, Rahul Dravid In Elite List
72 பந்தில் 59 ரன்களை குவித்த தோனி, ஒரு புதிய சாதனையையும் படைத்தார். © AFP

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. தோனி, அபாரமாக ஆடி அரைசதமடித்தார். அவரோடு கேதர் ஜாதவும் சிறப்பாக ஆடி 81 ரன்களை குவித்தார். அதுமட்டுமின்றி 72 பந்தில் 59 ரன்களை குவித்த தோனி, ஒரு புதிய சாதனையையும் படைத்தார். 412 முதல் தர ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள அவர் 13,000 ரன்களை கடந்தார். இந்த சாதனையை எட்டும் நான்காவது இந்தியர் இவர் ஆவார். சச்சின், கங்குலி, ட்ராவிட் மட்டுமே இவருக்கு  முன் இந்தச் சாதனையை செய்துள்ளனர்.

முன்னாள் இங்கிலாந்து வீரர் க்ரஹாம் கூச் 22,211 ரன்களுடன் முதல் தர ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரராக முதலிடத்தில் உள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தோனி, கேதர் ஜாதவ் இணை 5வது விக்கெட்டுக்கு 141 ரன்கள் குவித்தது. இது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மிகப்பெரிய 5வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பாகும். 

ஹைதராபாத்தில் 2வது பெரிய பார்ட்னர்ஷிப் இதுவாகும். இதற்கு முன்பு 2009ல் ஷான் மார்ஷ் மற்றும் ஷான் வாட்சன் 145 ரன்கள் குவித்தனர். 

தோனி, இந்த போட்டியில் 6 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் அடித்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக சிக்ஸர் அடித்தவர் என்ற சாதனையை தன் வசமாக்கினார். ரோஹித் மற்றும் தோனி இருவரும் 215 சிக்சர்கள் அடித்து முதலிடத்தில் உள்ளனர். 

தோனி, மொத்தம் 223 சிக்சர்கள் அடித்துள்ளார். அதில் 7 ஆசிய லெவனுக்காக அடிக்கப்பட்டது.

Comments
ஹைலைட்ஸ்
  • 412 முதல் தர ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள அவர் 13000 ரன்களை கடந்தார்
  • 13,000 ரன்கள் எடுத்து இந்தச் சாதனையை எட்டும் நான்காவது இந்தியர் தோனி
  • ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர் க்ரஹாம் கூச் (22211)
தொடர்புடைய கட்டுரைகள்
"கோலி சிறந்த கேப்டனாக ரோஹித் மற்றும் தோனி தான் காரணம்" - கவுதம் கம்பீர்!
"கோலி சிறந்த கேப்டனாக ரோஹித் மற்றும் தோனி தான் காரணம்" - கவுதம் கம்பீர்!
"அவரை வெளியேற்றுவதற்கு முன், தோனியே விலகினால் நல்லது" - சுனில் கவாஸ்கர்
"அவரை வெளியேற்றுவதற்கு முன், தோனியே விலகினால் நல்லது" - சுனில் கவாஸ்கர்
"தோனியின் ஓய்வு குறித்து தேர்வுக்குழு, கோலி முடிவெடுக்க வேண்டும்": கங்குலி!
"தோனியின் ஓய்வு குறித்து தேர்வுக்குழு, கோலி முடிவெடுக்க வேண்டும்": கங்குலி!
"பாடம் கற்றுக்கொண்டேன்" - தோனி ஓய்வு வதந்திக்கு பின் கோலி!
"பாடம் கற்றுக்கொண்டேன்" - தோனி ஓய்வு வதந்திக்கு பின் கோலி!
#12YearsOfCaptainDhoni - இந்திய ட்ரண்டாக மாறிய தோனி!
#12YearsOfCaptainDhoni - இந்திய ட்ரண்டாக மாறிய தோனி!
Advertisement