தல தோனிக்காக காத்திருக்கும் இன்னொரு "ஐ யம் வெயிட்டிங்" சாதனை!

Updated: 07 March 2019 11:41 IST

மூன்றாவது போட்டி தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடப்பதால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

MS Dhoni Inches Closer To Major Landmark In International Cricket
தோனிக்கு வயது ஆகிவிட்டதே தவிர அவர் சாதனைகள் படைப்பது மட்டும் குறையவே இல்லை. © AFP

தோனிக்கு வயது ஆகிவிட்டதே தவிர அவர் சாதனைகள் படைப்பது மட்டும் குறையவே இல்லை. சர்வதேச கிரிக்கெட்டில் மேலும் ஒரு சாதனையை தோனி எதிர்நோக்கியுள்ளார். ராஞ்சியில் நாளை நடக்கும் ஆஸ்திரேலியாவுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 33 ரன்களை எடுத்தால் சர்வதேச போட்டிகளில் 17,000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை பெறுவார். தற்போது 16,967 ரன்களுடன் ஆடி வருகிறார் தோனி.

இந்த ரன்களை தோனி 528 போட்டிகளில் 16 சதங்கள் மற்றும் 106 அரைசதங்களுடன் 45 சராசரியுடன் எட்டியுள்ளார்.

தோனி டெஸ்ட் போட்டிகளில் 4876 ரன்களயும், ஒருநாள் போட்டிகளில் 10474 ரன்களையும், டி20 போட்டிகளில் 1617 ரன்களையும் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஓய்வை அறிவித்துள்ளார் தோனி.

தோனிக்கு முன்பு இந்த சாதனையை சச்சின் டெண்டுல்கர் 34357, ட்ராவிட் 24208,கோலி 19453, கங்குலி 18575, சேவாக் 17253 ஆகியோர் இந்த சாதனையை செய்துள்ளனர்.

தற்போது நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் முதல் போட்டியில் 59 ரன்களையும், இரண்டாவது போட்டியில் டக் அவுட் ஆகியும் வெளியேறினார் தோனி. மூன்றாவது போட்டி தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடப்பதால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 2-0 என்று முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது போட்டி ராஞ்சியில் நாளை நடக்கிறது.

அடுத்த இரண்டு போட்டிகள் முறையே மொகாலி மற்றும் டெல்லியில் நடக்கவுள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • சர்வதேச கிரிக்கெட்டில் மேலும் ஒரு சாதனையை தோனி எதிர்நோக்கியுள்ளார்
  • ராஞ்சியை சொந்த ஊராக கொண்ட தோனி 45 சராசரியுடன் உள்ளார்
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் முதல் போட்டியில் 59 ரன் எடுத்தார் தோனி
தொடர்புடைய கட்டுரைகள்
2007 ஐசிசி டி20 உலகக் கோப்பை: தோனி தலைமையிலான இந்திய அணி வென்ற நாள் இன்று!
2007 ஐசிசி டி20 உலகக் கோப்பை: தோனி தலைமையிலான இந்திய அணி வென்ற நாள் இன்று!
"கோலி சிறந்த கேப்டனாக ரோஹித் மற்றும் தோனி தான் காரணம்" - கவுதம் கம்பீர்!
"கோலி சிறந்த கேப்டனாக ரோஹித் மற்றும் தோனி தான் காரணம்" - கவுதம் கம்பீர்!
"அவரை வெளியேற்றுவதற்கு முன், தோனியே விலகினால் நல்லது" - சுனில் கவாஸ்கர்
"அவரை வெளியேற்றுவதற்கு முன், தோனியே விலகினால் நல்லது" - சுனில் கவாஸ்கர்
"தோனியின் ஓய்வு குறித்து தேர்வுக்குழு, கோலி முடிவெடுக்க வேண்டும்": கங்குலி!
"தோனியின் ஓய்வு குறித்து தேர்வுக்குழு, கோலி முடிவெடுக்க வேண்டும்": கங்குலி!
"பாடம் கற்றுக்கொண்டேன்" - தோனி ஓய்வு வதந்திக்கு பின் கோலி!
"பாடம் கற்றுக்கொண்டேன்" - தோனி ஓய்வு வதந்திக்கு பின் கோலி!
Advertisement