
தோனி இப்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வெடுக்கும் முடிவில் இல்லை. அவரின் எதிர்காலாம் குறித்தான யூகங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கும் சூழலில் அவரின் நண்பரும், பிசினஸ் பார்ட்னருமான அருண் பாண்டே இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இந்தியா உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று, உலகக் கோப்பையிலிருந்து வெளியேறிய பிறகு தோனியின் ஓய்வு குறித்தான பேச்சுகள் எழத் தொடங்கின. "கிரிக்கெட்டிலிருந்து உடனே ஓய்வு பெறும் திட்டங்கள் எதுவும் அவருக்கு இல்லை. அவரைப் போன்ற சிறந்த வீரரின் ஓய்வு குறித்து யூகங்களை பார்க்கும் போது வருத்தமளிக்கிறது" என்றார் பாண்டே.
ஞாயிற்றுக்கிழமை மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்துக்கு இந்திய அணி தேர்வு செய்யப்படவுள்ளது. ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி தொடங்கவுள்ள சுற்றுப்பயணத்துக்கு அணியை அறிவித்த பிறகு தோனியின் எதிர்கால திட்டங்கள் குறித்து தெளிவு கிடைக்கும்.
பிசிசிஐ அதிகாரிகள் இரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற கேப்டனிடம் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாண்டே, தோனியுடன் பல வருடங்கள் பழக்கத்தில் உள்ளார். மேலும், தோனியின் ரிதி ஸ்போர்ட்ஸ் எனும் கம்பெனியை நிர்வகித்து வருகிறார்.
அடுத்த உலகக் கோப்பைக்கான அணியை தேர்வு செய்ய முடிவெடுக்கும் தேர்வாளர்கள், 38 வயதான தோனியை நேரடியாக தேர்வு செய்வார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தோனியின் ஓய்வு குறித்து நாளுக்கு நாள் யூகங்கள் அதிகரித்த வண்ணமே உள்ளன. ஆனால், அவரின் தீவிர ரசிகர்கள் அவரை கிரிக்கெட்டில் தொடர வேண்டும் என்று கேட்டுகொள்கின்றனர்.
ஐசிசி போட்டிகளான உலகக் கோப்பை, உலகக் கோப்பை டி20 மற்றும் சேம்பியன்ஸ் ட்ராஃபி என அனைத்தையும் இந்தியாவுக்கு சொந்தமாக்கியவர்.
உலகக் கோப்பையில் தோனியின் செயல்பாடும் முற்றிலுமாக விமர்சிக்கப்பட்டது. 2011 உலகக் கோப்பை சேம்பியன் கேப்டன் அதன் பிறகு விராட் கோலி தலைமையில் ஆடி வந்தார்.
தோனி, உலகக் கோப்பையில் எல்லாப் போட்டிகளிலும் இடம்பெற்றார் இதில் இரண்டு அரைசதங்கள் அடித்தார். இந்தத் தொடரில் அவரின் அதிகபடியான ரன்கள் 56. இருந்தாலும் தோனி, அரையிறுதிப் போட்டியில் அரைசதம் அடித்தார். ஜடேஜாவுடன் இணைந்து 100 ரன்கள் பார்னர்ஷிப்பும் அமைத்தார்.
தோனி இதுவரை 350 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார். இதில் 50.57 சராசரியுடன் 10,773 ரன்கள் குவித்துள்ளார். இவர் அதிகபடியாக 183 ரன்கள் எடுத்துள்ளார். 90 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 4876 ரன்களை 38.09 சராசரியுடன் குவித்துள்ளார்.