'' தோனி தவறாக முடிவெடுப்பார். ஆனால், அவரிடம் சொல்ல முடியாது'' சர்ச்சையை ஏற்படுத்தும் குல்தீப் கருத்து!!

Updated: 14 May 2019 19:37 IST

ஆட்டத்தின் போது தோனி அவ்வளவாக பேச மாட்டார் என்றார் குல்தீப் யாதவ்.

MS Dhoni "Goes Wrong Lot Of Times" With His Tips, Reveals Kuldeep Yadav
தோனி 2019ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலும் இடம் பெற்றுள்ளார்.  © AFP

குல்தீப் யாதவ், தோனி குறித்து அளித்துள்ள கருத்துகள் விவாத பொருளாகியுள்ளது. அவர் தோனி குறித்து கூறும்போது, "அவரது கருத்தில் அவர் உறுதியாக இருப்பார். சில நேரங்களில் அதுதவறாக இருந்தாலும் அவரிடம் அதனை எடுத்து சொல்ல முடியாது. ஆட்டத்தின் போது தோனி அவ்வளவாக பேச மாட்டார். ஓவர்களின் நடுவே திடீரென்று வந்து சில விஷயங்களை சொல்வார். அதனை கட்டாயம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பார்" என்றார். தோனி 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 உலகக் கோப்பையை வென்று தந்த வெற்றிகரமான கேப்டனாவார்.

சியட் கிரிக்கெட் தரவரிசை விருதுகளில் பேசிய குல்தீப் யாதவ் ''அவரது கருத்தில் அவர் உறுதியாக இருப்பார். சில நேரங்களில் அதுதவறாக இருந்தாலும் அவரிடம் அதனை எடுத்து சொல்ல முடியாது'' என்றார்.

2019 ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்று ரன்னர் அப் பட்டம் வென்றது. 

தோனி 2019 ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் 416 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 83.2, ஸ்ட்ரைக் ரேட் 134.62. அவர் அதிகபட்சமாக ஆர்சிபி அணியுடன் ஏப்ரல் 21ம் தேதி நடைபெற்ற போட்டியில் 48 பந்தில் 84 ரன்கள் குவித்தார்.

தோனி 2019ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலும் இடம் பெற்றுள்ளார். இது அவர் பங்கேற்கும் நான்காவது உலகக் கோப்பை தொடராகும்.

ஜூன் 5ம் தேதி தென்னாப்பிரிக்க அணியுடன் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் ஆடவுள்ளது இந்தியா.

Comments
ஹைலைட்ஸ்
  • குல்தீப் யாதவ் தோனி குறித்து அளித்துள்ள கருத்துகள் விவாத பொருளாகியுள்ளது
  • தவறாக இருந்தாலும் தோனியிடம் அதனை எடுத்து சொல்ல முடியாது: குல்தீப்
  • 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 உலகக் கோப்பை வென்று தந்தார் தோனி
தொடர்புடைய கட்டுரைகள்
"தோனிக்கு மாற்று வீரரை இந்தியா கண்டறிந்துள்ளது" - சோயிப் அக்தர்
"தோனிக்கு மாற்று வீரரை இந்தியா கண்டறிந்துள்ளது" - சோயிப் அக்தர்
எம்.எஸ்.தோனியின் பைக் சேகரிப்பு
எம்.எஸ்.தோனியின் பைக் சேகரிப்பு 'ஸ்னீக் பீக்' வீடியோவை பகிர்ந்த சாக்ஷி!
MS Dhoni-ஐ ஒப்பந்தப் பட்டியலில் இருந்து BCCI நீக்கியுள்ளது!!
MS Dhoni-ஐ ஒப்பந்தப் பட்டியலில் இருந்து BCCI நீக்கியுள்ளது!!
இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இன்னொரு சாதனை படைத்த கோலி!
இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இன்னொரு சாதனை படைத்த கோலி!
"தோனி ஒருநாள் போட்டிகளிலிருந்து விரைவில் ஓய்வு எடுக்கக்கூடும்" - ரவி சாஸ்திரி!
"தோனி ஒருநாள் போட்டிகளிலிருந்து விரைவில் ஓய்வு எடுக்கக்கூடும்" - ரவி சாஸ்திரி!
Advertisement