"தோனி எங்கள் முடிவை ஆதரிக்கிறார்" - தேர்வுக்குழு தலைவர் பிரசாத்!

Updated: 25 October 2019 14:15 IST

ரிஷப் பன்ட் போன்ற இளைஞர்களை விக்கெட் கீப்பிங் செய்ய ஆதரிப்பதற்கான தேர்வுக் குழுவின் அணுகுமுறையையும் எம்.எஸ்.தோனி ஆதரிக்கிறார் என்று கூறினார் எம் எஸ் கே பிரசாத்.

MS Dhoni Endorses Backing Of Youngsters, Says MSK Prasad
தோனி கடைசியாக 2019 உலகக் கோப்பையில் இடம்பெற்றார். © AFP

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வியாழக்கிழமை அறிவித்த பங்களாதேஷுக்கு எதிரான இந்தியாவின் உள்நாட்டுத் தொடருக்கான 15 பேர் கொண்ட டி20 அணியில் எம்.எஸ். தோனி சேர்க்கப்படவில்லை. நவம்பர் 3 முதல் இந்தியா பங்களாதேஷுக்கு எதிராக மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. அணியை அறிவித்த பின்னர், எம்.எஸ்.கே.பிரசாத், ஊடகங்களுக்கு உரையாற்றியபோது, ​​ரிஷப் பன்ட் போன்ற இளைஞர்களை விக்கெட் கீப்பிங் செய்ய ஆதரிப்பதற்கான தேர்வுக் குழுவின் அணுகுமுறையையும் எம்.எஸ்.தோனி ஆதரிக்கிறார் என்று கூறினார்.

"உலகக் கோப்பைக்குப் பிறகு நாங்கள் இளைய வீரர்களை இணைக்க பார்க்கிறோம், எனவே எங்கள் சிந்தனை செயல்முறையை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். நாங்கள் நிச்சயமாக தோனியுடன் பேசியுள்ளோம். மேலும் இளைஞர்களை ஆதரிப்பது பற்றிய எங்கள் பார்வையையும் அவர் ஆதரிக்கிறார்" என்று எம்.எஸ்.கே.பிரசாத் கூறினார்.

உலகக் கோப்பைக்குப் பிறகு, தேர்வுக் குழு ரிஷப் பன்ட் மீது கவனம் செலுத்துவதாகவும், அவர் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கிறார் என்றும் தேர்வுக் குழு தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

"நாங்கள் முன்னேறி வருகிறோம், நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம். உலகக் கோப்பைக்குப் பிறகு நாங்கள் தெளிவாக இருந்தோம். நாங்கள் பன்ட்டை ஆதரிக்கத் தொடங்கினோம், அவர்  சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று விரும்பினோம். அவருக்கு சிறந்த போட்டிகள் இல்லாமல் இருக்கலாம், ஆனால் நாங்கள் தெளிவாக இருக்கிறோம், நாங்கள் அவர் மீது மட்டுமே முழு கவனம் செலுத்தவுள்ளோம், " என்று எம்.எஸ்.கே.பிரசாத்  கூறினார்.

மூன்றாவது டெஸ்டில் இந்தியா தென்னாப்பிரிக்காவை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்ததை அடுத்து எம்.எஸ் தோனி ராஞ்சியில் உள்ள இந்திய டிரஸ்ஸிங் ரூமுக்கு வந்திருந்தார்.

ராஞ்சி டெஸ்டில் அறிமுகமான ஷாபாஸ் நதீமுடன் தோனி பேசுவது போன்று புகைப்படம் வெளியானது.

உலகக் கோப்பைக்கு பிறகு தோனி, இரண்டு மாதங்கள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று ரணுவத்தில் பணியாற்ற சென்றார்.

முன்னாள் இந்திய கேப்டன் இதுவரை மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தை தவறவிட்டார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உள்நாட்டு தொடர், இப்போது பங்களாதேஷுக்கு எதிரான வரவிருக்கும் தொடரை இழக்கவுள்ளார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
பழைய இந்தி பாடலைப் பாடிய எம்.எஸ்.தோனி! Viral Video
பழைய இந்தி பாடலைப் பாடிய எம்.எஸ்.தோனி! Viral Video
"மறக்க முடியாத பயணம்" - சாக்‌ஷி தோனிக்கு நன்றி தெரிவித்த பாடகி ஜாஸ்ஸி கில்
"மறக்க முடியாத பயணம்" - சாக்‌ஷி தோனிக்கு நன்றி தெரிவித்த பாடகி ஜாஸ்ஸி கில்
"டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து தோனியிடம் கேளுங்கள்" - சவுரவ் கங்குலி
"டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து தோனியிடம் கேளுங்கள்" - சவுரவ் கங்குலி
"ஜனவரி வரை என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம்" - எதிர்காலம் குறித்து தோனி!
"ஜனவரி வரை என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம்" - எதிர்காலம் குறித்து தோனி!
"தோனியும், கோலியும் என்னை மதிக்கிறார்கள்" - எம்.எஸ்.கே.பிரசாத்
"தோனியும், கோலியும் என்னை மதிக்கிறார்கள்" - எம்.எஸ்.கே.பிரசாத்
Advertisement