MS Dhoni-ஐ ஒப்பந்தப் பட்டியலில் இருந்து BCCI நீக்கியுள்ளது!!

Updated: 16 January 2020 14:41 IST

மொத்தமாக 27 கிரிக்கெட் வீரர்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுளார்கள்.

MS Dhoni Dropped From BCCIs List Of Centrally Contracted Players
4 பிரிவுகளாக சீனியர் கிரிக்கெட் வீரர்கள் பிரிக்கப்பட்டள்ளார்கள். © AFP

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ, நாட்டின் சீனியர் ஆடவர் வீரர்களின் ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. 4 பிரிவுகளாக சீனியர் கிரிக்கெட் வீரர்கள் பிரிக்கப்பட்டள்ளார்கள். இந்த ஒப்பந்தப் பட்டியல் அக்டோபர் 2019 முதல் செப்டம்பர் 2020 ஆம் ஆண்டு வரையில் அமலில் இருக்கும். 4 பிரிவுகளாக கிரிக்கெட் வீரர்கள் பிரிக்கப்பட்டுள்ளார்கள். மொத்தமாக 27 கிரிக்கெட் வீரர்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுளார்கள். A+ பிரிவு வீரர்களுக்கு 7 கோடி ரூபாய் சம்பளமும், A பிரிவு வீரர்களுக்கு 5 கோடி ரூபாய் சம்பளமும், B பிரிவு வீரர்களுக்கு 3 கோடி ரூபாய் சம்பளமும், C பிரிவு வீரர்களுக்கு 1 கோடி ரூபாய் சம்பளமும் கொடுக்கப்படும். இந்தப் பட்டியலில்தான் மகேந்திர சிங் தோனியின் பெயர் இடம் பெறவில்லை. 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, ரோகித் ஷர்மா மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் A+ பிரவில் இடம் பிடித்துள்ளார்கள்.

பிசிசிஐ வெளியிட்டுள்ள பட்டியல்படி, கீழே குறிப்பிட்டுள்ள வீரர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது:

பிரிவு A: ரவிசந்தரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, புவ்னேஷ்வர் குமார், செத்தேஷ்வர் புஜாரா, அஜிங்கியா ரகானே, கேஎல் ராகுல், ஷிகர் தவான், முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, குல்தீப் யாதவ் மற்றும் ரிஷப் பன்ட் 

பிரிவு B: ரிடிமன் சகா, உமேஷ் யாதவ், சாஹல், ஹர்திக் பாண்டியா, மாயங்க் அகர்வால்

பிரிவு C: கேதார் ஜாதவ், நவ்தீப் சயினி, தீபக் சகார், மணிஷ் பாண்டே, ஹனுமா விகாரி, ஷ்ராதுல் தாக்கூர், ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர்

Comments
ஹைலைட்ஸ்
  • பிசிசிஐ, பட்டியலிலிருந்து தோனி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்
  • இன்று ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டிருக்கிறது பிசிசிஐ
  • நிறைய புதிய பெயர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளன
தொடர்புடைய கட்டுரைகள்
“ஒரு புலி இன்னொரு புலியை சந்தித்தால்...” - தோனி ரசிகரின் வைரல் கமெண்ட்!
“ஒரு புலி இன்னொரு புலியை சந்தித்தால்...” - தோனி ரசிகரின் வைரல் கமெண்ட்!
“இந்திய கேப்டன்களில் சிறந்தவர் தோனி” - சுரேஷ் ரெய்னா
“இந்திய கேப்டன்களில் சிறந்தவர் தோனி” - சுரேஷ் ரெய்னா
ஆர்.பி. சிங் மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோருக்கு பானி பூரி பரிமாறிய தோனி!
ஆர்.பி. சிங் மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோருக்கு பானி பூரி பரிமாறிய தோனி!
“மிக சிறந்த இந்திய கேப்டன் தோனி” - புகழ்ந்த ரோஹித் ஷர்மா!
“மிக சிறந்த இந்திய கேப்டன் தோனி” - புகழ்ந்த ரோஹித் ஷர்மா!
"ஃபாலோவர்ஸை அதிகரிக்க நீ இதை செய்கிறாய்" - சாக்‌ஷியை ட்ரோல் செய்த தோனி!
"ஃபாலோவர்ஸை அதிகரிக்க நீ இதை செய்கிறாய்" - சாக்‌ஷியை ட்ரோல் செய்த தோனி!
Advertisement