மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் தோனிக்கு இடமில்லை?

Updated: 17 July 2019 19:05 IST

கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத வீரராக திகழ்கிறார் தோனி. ஆனால், அவர் போட்டியிக் குறைவாக ரன் ரேட்டில் உள்ளார் என்ற பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.

MS Dhoni Doubtful For West Indies Tour, Will Participate In "Transitioning Phase" For Team India: Reports
தோனி இந்த உலகக் கோப்பைக்கு பிறகு ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. © AFP

கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத வீரராக திகழ்கிறார் தோனி. ஆனால், அவர் போட்டியிக் குறைவாக ரன் ரேட்டில் உள்ளார் என்ற பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. சமீபத்திய அறிக்கைபடி, தோனி இந்த உலகக் கோப்பைக்கு பிறகு ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஏனெனில், இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியுடம் ஆடவிருக்கும் தொடரில் தோனி இடம்பெற மாட்டார் என்று தெரிகிறது. "மேற்கிந்திய தீவுகள் தொடரில் தோனி பங்கேற்க மாட்டார். இந்தியாவுக்குள்ளும், வெளிநாடுகளுக்கு இனி தோனி விக்கெட் கீப்பர் என்ற முறையில் முதல் தேர்வாக இருக்க மாட்டார். ரிஷப் பன்ட் தான் இனி விக்கெட் கீப்பிங் செய்வார். அவர் முழுமையாக செயல்படும் வரை அவருக்கு பயிற்சி வழங்கப்படும். இந்த முறை அவருக்கு தோனி வழிநடத்துவார். அவர் ஆடும் லெவனில் இல்லாமல், 15 பேர் அணியில் இருப்பார். இந்த அணியை வழிநடத்த ஒருவர் தேவையாக உள்ளனர்" என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு வந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை 2019-ல் அனைவருக்கும் விருப்பமான அணியாக இந்தியா இருந்தது. இந்தியா 8 போட்டிகளில் 7 போட்டிகள் வென்றது. ஒரு போட்டி மழை காரணமாக தடைப்ப்பட்டது.

இங்கிலாந்துடன் ஒரு போட்டியை தோற்றது இந்தியா. இருந்தாலும், 9 போட்டிகள் ஆடி, புள்ளிப்பட்டியலில் 15 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருந்தது.

இந்தத் தொடரில் தோனி எட்டு போட்டிகளில் ஆடி 273 ரன்கள் மட்டுமே குவித்தார். ஆனால், அரையிறுதி போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 50 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இந்திய அணி வரும் ஜூலை 19 அறிவிக்கப்படவுள்ளது. இந்தப் போட்டி குறுகிய ஓவர்கள் கொண்ட தொடர் வரும் ஆகஸ்ட் 3ம் தேதி தொடங்குகிறது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"பதட்டமடையாமல் திறமைகளை நம்ப வேண்டும் என்று தோனி கற்றுகொடுத்தார்" - பிராவோ
"பதட்டமடையாமல் திறமைகளை நம்ப வேண்டும் என்று தோனி கற்றுகொடுத்தார்" - பிராவோ
ராஞ்சியில் வாக்களித்த தோனி... புகைப்படம் பகிரும் ரசிகர்கள்!
ராஞ்சியில் வாக்களித்த தோனி... புகைப்படம் பகிரும் ரசிகர்கள்!
"இந்திய அணியில் தோனி தன்னை திணித்துகொள்ள மாட்டார்" - ரவி சாஸ்திரி!
"இந்திய அணியில் தோனி தன்னை திணித்துகொள்ள மாட்டார்" - ரவி சாஸ்திரி!
ராணுவ வீரர்கள் பற்றி டிவி தொடரை தயாரிக்கவுள்ளார் தோனி!
ராணுவ வீரர்கள் பற்றி டிவி தொடரை தயாரிக்கவுள்ளார் தோனி!
பழைய இந்தி பாடலைப் பாடிய எம்.எஸ்.தோனி! Viral Video
பழைய இந்தி பாடலைப் பாடிய எம்.எஸ்.தோனி! Viral Video
Advertisement