‘அவர்களுக்கு என்ன பேசுகிறோம் என்றே தெரியாது!’- தோனி விமர்சகர்களை வறுத்தெடுத்த வார்ன்

Updated: 13 March 2019 13:48 IST

தோனியைப் பற்றி ஒருவர் விமர்சனம் செய்கிறார் என்றால், அவருக்குத் தான் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் பிதற்றுகிறார் என்றுதான் சொல்வேன்- வார்ன்

MS Dhoni Critics Slammed By Shane Warne
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மகேந்திரசிங் தோனியின் ஃபார்ம் குறித்தும், அணியில் அவரது இடம் குறித்தும் கேள்வியெழுப்பப்பட்டு வருகிறது © AFP

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மகேந்திரசிங் தோனியின் ஃபார்ம் குறித்தும், அணியில் அவரது இடம் குறித்தும் கேள்வியெழுப்பப்பட்டு வரும் நிலையில், ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன், தோனியின் விமர்சகர்களை வறுத்தெடுத்துள்ளார். 

தோனி பற்றி வார்ன் பேசுகையில், ‘ஒரு போட்டியில் நிலைமை மிகவும் மோசமாக சென்று கொண்டிருக்கையில், மிகவும் அனுபவம் வாய்ந்த தோனி போல் ஒருவர் அணியில் இருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை தோனி மிகச் சிறந்த விளையாட்டு வீரர். அவர் அணியில் இருந்தேயாக வேண்டும்' என்றார். 

அவர் மேலும், ‘தோனியைப் பற்றி ஒருவர் விமர்சனம் செய்கிறார் என்றால், அவருக்குத் தான் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் பிதற்றுகிறார் என்றுதான் சொல்வேன்' என்று கடுகடுத்துள்ளார். 

தொடர்ந்து அவர், வரும் உலகக் கோப்பையில் எந்த அணி கோப்பையைத் தட்டிச் செல்லும் என்பது குறித்து, ‘இங்கிலாந்து மற்றும் இந்தியாதான் ஆரம்பகட்டத்தில் ஃபேவரைட்டாக இருக்கும். ஆனால், ஆஸ்திரேலியா மெல்ல தன்னம்பிக்கையைப் பெற்று வருகிறது. அவர்களும் டஃப் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்' என்று கூறினார். 

(ஏஎன்ஐ உள்ளீடுகளுடன் எழுதப்பட்டது)

Comments
ஹைலைட்ஸ்
  • தோனி அணியில் இருந்தேயாக வேண்டும், வார்ன்
  • தோனியை விமர்சிப்பவர்களை வறுத்தெடுத்துள்ளார் வார்ன்
  • இந்தியாவுக்கு தோனி அவசியம், வார்ன் திட்டவட்டம்
தொடர்புடைய கட்டுரைகள்
"தோனியின் ஓய்வு குறித்து தேர்வுக்குழு, கோலி முடிவெடுக்க வேண்டும்": கங்குலி!
"தோனியின் ஓய்வு குறித்து தேர்வுக்குழு, கோலி முடிவெடுக்க வேண்டும்": கங்குலி!
"பாடம் கற்றுக்கொண்டேன்" - தோனி ஓய்வு வதந்திக்கு பின் கோலி!
"பாடம் கற்றுக்கொண்டேன்" - தோனி ஓய்வு வதந்திக்கு பின் கோலி!
#12YearsOfCaptainDhoni - இந்திய ட்ரண்டாக மாறிய தோனி!
#12YearsOfCaptainDhoni - இந்திய ட்ரண்டாக மாறிய தோனி!
தோனியின் ஓய்வு வதந்தி:
தோனியின் ஓய்வு வதந்தி: 'Game of Thrones' வசனம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த சிஎஸ்கே!
"இதை வதந்தி என்பார்கள்" - தோனி ஓய்வு செய்தி குறித்து சாக்‌ஷி!
"இதை வதந்தி என்பார்கள்" - தோனி ஓய்வு செய்தி குறித்து சாக்‌ஷி!
Advertisement