Listen to the latest songs, only on JioSaavn.com
 

“இந்திய கேப்டன்களில் சிறந்தவர் தோனி” - சுரேஷ் ரெய்னா

Updated: 13 February 2020 15:48 IST

மார்ச் 29ம் தேதி தொடங்கவிருக்கும் ஐபிஎல் போட்டியில் தோனி இடம்பெறவுள்ளார்.

MS Dhoni "Changed Indian Team Like Anything," Says Suresh Raina
இந்தியன் பிரீமியர் லீக்கின் எதிர்வரும் பதிப்பில் எம்.எஸ்.தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் செயல்படுவார்கள். © AFP

இந்திய அணியின் மூத்த கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, இந்திய கொண்ட கேப்டன்களில் தோனி தான் சிறந்தவர் என்று கூறியுள்ளார். ஐபிஎல் அணியான சிஎஸ்கேவில் கேப்டனான தோனியின் அணியில் சுரேஷ் ரெய்னா விளையாடி வருகிறார். "இந்திய அணியை சிறப்பாக மாற்றிய சிறந்த கேப்டன் எங்களிடம் இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். இப்போது எங்கள் டிரஸ்ஸிங் ரூமில் அதே போன்ற வெளிச்சம் உள்ளது" என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் நடந்த 'தி சூப்பர் கிங்ஸ் நிகழ்ச்சியில்' ரெய்னா கூறினார். 38 வயதான தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால், குறுகிய வடிவத்தில் அவரின் எதிர்காலம் ஊகங்களுடன் உள்ளது.

இங்கிலாந்தில் நடந்த 2019 உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திடன் தோற்று வெளியேறியதில் இருந்து தோனி கிரிக்கெட்டில் இருந்து விலகியுள்ளார். மார்ச் 29ம் தேதி தொடங்கவிருக்கும் ஐபிஎல் போட்டியில் தோனி இடம்பெறவுள்ளார்.

தடை செய்யப்பட்டிருந்த மூன்று ஸ்டாண்டுகளை திறந்த பிறகு, மைதானத்தை நிரப்பும் படி ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளார் சுரேஷ் ரெய்னா.

“எல்லா இடங்களும் இப்போது திறக்கப்பட்டுள்ளன. இன்னும் பல ரசிகர்கள் மைதானத்துக்கு வந்து, உற்சாகத்தை ஏற்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்,” என்று சுரேஷ் ரெய்னா கூறினார்.

இந்திய அணியில் கடைசியாக 2018ம் ஆண்டு விளையாடிய சுரேஷ் ரெய்னா, சிஎஸ்கே அணியில் விளையாடுவது உற்சாகம் அளிப்பதாக தெரிவித்தார்.

“இந்த வருடம் அணியில் பல திறமையான வீரர்கள் இணைந்துள்ளார்கள். பியுஷ் சாவ்லா, ஹஸல்வுட், சாம் குர்ரான், தமிழ்நாட்டை சேர்ந்த சாய் கிஷோர் ஆகியோர் இணைந்துள்ளனர். அணியில் இந்த முறை சீனியர் மற்றும் ஜூனியர் கலவையாக இருக்கும்” என்றார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
கொரோனா வைரஸ் லாக்டவுனில் புல்வெளியில் நேரத்தைச் செலவிடும் தோனி!
கொரோனா வைரஸ் லாக்டவுனில் புல்வெளியில் நேரத்தைச் செலவிடும் தோனி!
“இப்போது பப்ஜி இல்லை, வேறு விளையாட்டுக்கு மாறிவிட்டார்” - தோனி குறித்து கூறிய தீபக் சஹார்!
“இப்போது பப்ஜி இல்லை, வேறு விளையாட்டுக்கு மாறிவிட்டார்” - தோனி குறித்து கூறிய தீபக் சஹார்!
2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் டெண்டுல்கர் தோனிக்கு அளித்த முக்கிய ஆலோசனை!
2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் டெண்டுல்கர் தோனிக்கு அளித்த முக்கிய ஆலோசனை!
போதும்... கெளம்பு, கெளம்பு...- கோலி - பீட்டர்சன் நேர்காணல்... நடுவில் புகுந்த அனுஷ்கா ஷர்மா!
'போதும்... கெளம்பு, கெளம்பு...'- கோலி - பீட்டர்சன் நேர்காணல்... நடுவில் புகுந்த அனுஷ்கா ஷர்மா!
தோனி, ஆர்சிபி, கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்றம் முதல் சரிவு வரை - ‘கிங்’ கோலியின் ஓபன் டாக்!
தோனி, ஆர்சிபி, கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்றம் முதல் சரிவு வரை - ‘கிங்’ கோலியின் ஓபன் டாக்!
Advertisement