#12YearsOfCaptainDhoni - இந்திய ட்ரண்டாக மாறிய தோனி!

Updated: 14 September 2019 16:26 IST

சமீபத்தில், தோனி மோசமான பேட்டிங்கிற்காக பெரிதும் விமர்சிக்கப்பட்டார்.

#12YearsOfCaptainDhoni Top Trend As Twitter Toasts Former India Skipper
2011 உலகக் கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்றார் தோனி. © AFP

எம்.எஸ். தோனி, அவரது தலைமுறையின் மிகவும் புதிரான கிரிக்கெட் வீரர். செப்டம்பர் 13, 2007 அன்று முதல் முறையாக இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்தினார். அன்று, தொடக்க டி20 போட்டியின் குரூப் டி ஆட்டத்தில் இந்தியா ஸ்காட்லாந்தை எதிர்கொண்டது. ஆனால் மழை காரணமாக அது கைவிடப்பட்டது. ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலி ஆகிய மூன்று மூத்த வீரர்கள் உலக டி 20 போட்டியின் முதல் பதிப்பிலிருந்து விலக முடிவு செய்ததை அடுத்து தோனி இந்தியாவின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டிக்கு முன்பு இந்தியா ஒரு டி20 சர்வதேச போட்டியை மட்டுமே விளையாடியது. ஆனால் தோனியின் அணி போட்டியின் முதல் வெற்றியாளர்களாக மாறியது. அவர் 6 இன்னிங்ஸில் ஆடி 154 ரன்கள் குவித்தார். ஆனால், அப்போது அவருடைய கேப்டன்ஸி தான் பேசப்பட்டது.

இன்று தோனியின் ரசிகர்கள் "12YearsOfCaptainDhoni" என்ற ஹாஷ்டேக்குடன் புகைப்படங்கள் மற்றும் பதிவுகளை பகிர்ந்ததால், இந்தியாவின் ட்ரண்டாக மாறியுள்ளது.

எம்.எஸ். தோனி கேப்டனாக இருந்த காலத்தில், 2011 உலகக் கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

சமீபத்தில், தோனி மோசமான பேட்டிங்கிற்காக பெரிதும் விமர்சிக்கப்பட்டார்.

தோனி ஓய்வு குறித்து தான் இந்தியன் கிரிக்கெட்டில் இப்போது பேசப்படும் தலைப்பாக உள்ளது. 

"தோனியின் ஓய்வு குறித்து எந்த புது தகவலும் இல்லை, அந்தச் செய்தி பொய்யானது," என்று எம் எஸ் கே பிரசாத் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் அணியை அறிவிக்கும் போது தெரிவித்தார்.

உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா வெளியேறிய பின்னர் தோனி கிரிக்கெட்டிலிருந்து 2 மாதங்கள் ஓய்வு அறிவித்து, ராணுவத்தில் பணியாற்றச் சென்றார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் அவர் இடம்பெறவில்லை. மேலும், தென்னாப்பிரிக்காவுடன் ஆடவிருக்கும் டி20 தொடரிலும் அவர் இடம்பெறவில்லை.

தோனி கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூரில் 2019 பிப்ரவரி மாதம் இந்தியாவுக்காக டி20 விளையாடினார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"தோனி என்ன விரும்புகிறார் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்" - சவுரவ் கங்குலி!
"தோனி என்ன விரும்புகிறார் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்" - சவுரவ் கங்குலி!
"கங்குலி, தோனியை விட விராட் கோலி தான் சிறந்தவர்" - கவுதம் கம்பீர்
"கங்குலி, தோனியை விட விராட் கோலி தான் சிறந்தவர்" - கவுதம் கம்பீர்
டெஸ்ட் கேப்டனாக சவுரவ் கங்குலியின் சாதனையை முந்தினார் விராட் கோலி!
டெஸ்ட் கேப்டனாக சவுரவ் கங்குலியின் சாதனையை முந்தினார் விராட் கோலி!
"கிரிக்கெட் வீரர்களில் தோனி எப்போதும் சிறந்தவர்" - ரவி சாஸ்திரி
"கிரிக்கெட் வீரர்களில் தோனி எப்போதும் சிறந்தவர்" - ரவி சாஸ்திரி
100 டி20 போட்டிகளில் இடம்பெற்ற முதல் இந்தியரானார் ஹர்மன்பிரீத் கவுர்!
100 டி20 போட்டிகளில் இடம்பெற்ற முதல் இந்தியரானார் ஹர்மன்பிரீத் கவுர்!
Advertisement