
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியும், அவருடைய மகள் ஸிவாவும் என்ன செய்தாலும் இணையதளத்தில் வைரல்தான். சமீபத்தில் தோனி ஸிவாவுடனான ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், ஸ்வா தோனிக்கு கேரட் ஊட்டிவிடுகிறார். இந்த வீடியோவை பதிவிட்ட சில நொடிகளில் இந்த வீடியோ வைரலானது. இதனை நெட்டிசன்கள் "ஸிவா ரொம்ப க்யூட்" என்று கமெண்ட் செய்தனர்.
தோனி சமீபத்தில் மும்பையில் தனது மனைவி சாக்ஷியின் 30வது பிறந்தநாளைக் கொண்டாடினார். சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் "இது மிகவும் சிறப்பான நாள்" என்று குறிபிட்டுள்ளார். மேலும், இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட இந்திய ஆல்ரவுண்ட ஹர்திக் பாண்ட்யா தோனியுடனான படத்தைப் பகிர்ந்திருந்தார்.
ஸிவா எப்போதுமே சமூக வலைதளங்களில் லைம்லைட்டில் இருப்பவர். சாக்ஷி வெளியிட்டுள்ள பதிவில் ப்ளான்க் செய்வது போன்ற வீடியோவும் வைரலகியுள்ளது. ஸிவாவின் எந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானாலும் வைரலாவது வாடிக்கையாகியுள்ளது.
தோனிக்கு தற்போது மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளது.