"மோர்கன் ஒரு லெஜெண்ட்" நெகிழ வைக்கும் ரஷித் கான் ட்விட்!

Updated: 23 July 2019 12:59 IST

ஆப்கானிஸ்தான் குடும்பம் ஒன்றுடன் கிரிக்கெட் ஆடி அசத்தினார் மோர்கன்.

Eoin Morgan "Plays A Game" With Afghan Family, Rashid Khan Calls Him Legend
மோர்கன் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் செயல்களில் ஈடுபட்டது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. © Twitter

உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் செயல்களில் ஈடுபட்டது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. ஆப்கானிஸ்தான் குடும்பம் ஒன்றுடன் கிரிக்கெட் ஆடி அசத்தினார் மோர்கன். அதனை சமீபத்தில் ஆப்கானிஸ்தானின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரஷித் கான் பாராட்டியுள்ளார். மோர்கன் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் உணவருந்தி விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது ஆப்கானிஸ்தான் குடும்பத்தினர் அவர்களோடு கிரிக்கெட் ஆடும்படி கேட்டுக் கொண்டதாகவும், அதனையேற்று ஆடியதாகவும் தெரிவித்தார். இதனால் அவர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்ததாகவும் கூறியிருந்தார். இதற்கு ட்விட்டரில் ஆப்கான் கேப்டன் ரஷித் கான் மோர்கன் ஒரு லெஜெண்ட் என்று குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்துக்காக உலகக் கோப்பையை வென்ற முதல் கேப்டன் மோர்கன். இறுதிப்போட்டி டை ஆகி சூப்பர் ஓவரும் டை ஆனதால் பவுண்டரி அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதில் பல சர்ச்சைகளும் இடம்பெற்றன. 

இதனை மோர்கனுமே சிறந்த முடிவாக கருதமுடியாது என்று கூறியுள்ளார். போட்டிக்கு பின் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனிடமும் பேசியதாக கூறினார்.

உலகக் கோப்பை வெற்றிக்கு பின் அயர்லாந்துடன் ஒரே ஒரு டெஸ்ட் ஓட்டியில் ஆடவுள்ளது இங்கிலாந்து.

இங்கிலாந்து இந்த முறை ஆஷஸ் தொடரை நடத்தவுள்ளது. ஆகஸ்ட் 1 துவங்கி செப்டம் 16 வரை இந்த தொடர் நடக்கவுள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"மோர்கன் ஒரு லெஜெண்ட்" நெகிழ வைக்கும் ரஷித் கான் ட்விட்!
"மோர்கன் ஒரு லெஜெண்ட்" நெகிழ வைக்கும் ரஷித் கான் ட்விட்!
"இதுபோன்ற முடிவு நியாயமானது அல்ல" - உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு மோர்கன்!
"இதுபோன்ற முடிவு நியாயமானது அல்ல" - உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு மோர்கன்!
"மோர்கன் விரும்பினால் பட்லரை கேப்டனாக்கலாம்" : ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் அறிவுரை
"மோர்கன் விரும்பினால் பட்லரை கேப்டனாக்கலாம்" : ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் அறிவுரை
கிரிக்கெட், டென்னிஸ் இறுதிப் போட்டி: பதட்டத்தை குறைக்க ஐசிசி மற்றும் விம்பிள்டன் செய்த ட்விட்டுகள்!
கிரிக்கெட், டென்னிஸ் இறுதிப் போட்டி: பதட்டத்தை குறைக்க ஐசிசி மற்றும் விம்பிள்டன் செய்த ட்விட்டுகள்!
இங்கிலாந்து - நியூசிலாந்து : 2019 உலகக் கோப்பையை வெல்லப்போவது யார்?
இங்கிலாந்து - நியூசிலாந்து : 2019 உலகக் கோப்பையை வெல்லப்போவது யார்?
Advertisement