"எனக்கு நன்றாக தமிழ் பேசத் தெரியும்" - விமர்சித்தவருக்கு பதிலளித்த மிதாலி ராஜ்!

Updated: 17 October 2019 11:07 IST

மிதாலி விரைவாக அந்த ட்ரோலுக்கு முடிவுகட்ட, தமிழ் தனது தாய்மொழி என்றும், அவர் இந்தியராக இருப்பதில் பெருமைபடுகிறார் என்றும் தமிழில் ஒரு ட்விட்டுடன் பதிலளித்தார்.

Mithali Raj Shuts Down Troll Who Questioned Her Language Preference
மிதாலி ராஜ் மூன்று இன்னிங்ஸ்களில் 44 சராசரியுடன் 88 ரன்கள் எடுத்தார். © Twitter

மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆண்டுகள் நிறைவு செய்த முதல் பெண் வீரர் என்ற பெருமையையும் பெற்ற மிதாலி ராஜ் ஒரு தனித்துவமான சாதனையை நிகழ்த்தினார். 50 ஓவர் கொண்ட போட்டியில் தென்னாப்பிரிக்காவை இந்தியா வென்ற பிறகு, சச்சின் டெண்டுல்கர் இந்திய அணியை வெற்றி பெற செய்ததற்கும், மிதாலி ராஜின் சாதனையை ஒப்புக்கொண்டு ட்விட்டரில் பாராட்டினார். சச்சின் டெண்டுல்கரின் ட்விட்டுக்கு மிதாலி ராஜ் பதிலளித்தார். அவரை ஒரு சாம்பியன் என்று அழைத்தார்."நான் என் வாழ்நாள் முழுவதும் கவனித்த ஒரு நபரால் என் சாதனை ஒப்புக் கொள்ளப்படுவது மகிழ்ச்சியாக இருக்கிறது .. நன்றி சாம்பியன்," என்று ட்விட்டுக்கு பதிலளித்தார் மிதாலி ராஜ். இருப்பினும் ஒருவர் மிதாலி ராஜின் மொழி குறித்து விமர்சித்தார். அதில், "அவருக்கு தமிழ் தெரியாது. அவர் ஆங்கிலம், தெலுங்கு, இந்தி மொழியில் பேசுவார்" என்று கூறினார்.

மிதாலி விரைவாக அந்த ட்ரோலுக்கு முடிவுகட்ட, தமிழ் தனது தாய்மொழி என்றும், அவர் இந்தியராக இருப்பதில் பெருமைபடுகிறார் என்றும் தமிழில் ஒரு ட்விட்டுடன் பதிலளித்தார்.

"எல்லாவற்றுக்கும் மேலாக நான் மிகவும் பெருமை வாய்ந்த இந்தியர்! என் அன்பான சுகு, என்னுடைய ஒவ்வொரு இடுகையிலும் நீங்கள் தொடர்ந்து விமர்சிக்கிறீர்கள், நான் எப்படி, என்ன செய்ய வேண்டும் என்பதற்கான அன்றாட ஆலோசனை என்னைத் தொடர்ந்து பயணிக்க செய்கிறது," என்று பதிலளித்தார்.

இந்தத் தொடரில், மிதாலி ராஜ் மூன்று இன்னிங்ஸ்களில் 44 சராசரியுடன் 88 ரன்கள் எடுத்து ஒருநாள் தொடரில் இந்தியா ஆதிக்கம் செலுத்த உதவியது.

மிதாலி ராஜ் கடந்த மாதம் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். மேலும், 2021 இல் நடைபெறவிருக்கும் அடுத்த 50 ஓவர் உலகக் கோப்பையில் கவனம் செலுத்த விரும்புவதாகக் கூறினார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
வெளியானது ஷபாஷ் மிது படத்தின் ஃபர்ஸ்ட் லுக்... நன்றி தெரிவித்த மிதாலி ராஜ்!
வெளியானது 'ஷபாஷ் மிது' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்... நன்றி தெரிவித்த மிதாலி ராஜ்!
விராட் கோலியை மிஞ்சி சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!
விராட் கோலியை மிஞ்சி சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!
"எனக்கு நன்றாக தமிழ் பேசத் தெரியும்" - விமர்சித்தவருக்கு பதிலளித்த மிதாலி ராஜ்!
"எனக்கு நன்றாக தமிழ் பேசத் தெரியும்" - விமர்சித்தவருக்கு பதிலளித்த மிதாலி ராஜ்!
சர்வதேச கிரிக்கெட்டில் 20 வருடங்கள் கடந்த முதல் பெண் வீரரானார் மிதாலி ராஜ்!
சர்வதேச கிரிக்கெட்டில் 20 வருடங்கள் கடந்த முதல் பெண் வீரரானார் மிதாலி ராஜ்!
"கிரிக்கெட் ஆட சச்சின்தான் காரணம்" - பெண்கள் அணி வீராங்கனை ஷஃபாலி
"கிரிக்கெட் ஆட சச்சின்தான் காரணம்" - பெண்கள் அணி வீராங்கனை ஷஃபாலி
Advertisement