ரோஹித், கோலி சாதனையை முறியடித்த மிதாலி ராஜ்!

Updated: 16 November 2018 15:28 IST

இந்திய வீரர்கள் ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் தோனி ஆகியோரைவிட அதிக ரன் குவித்த வீரராக மிதாலி முன்னிலையில் உள்ளார்

ICC Women
அயர்லாந்துடன் மிதாலி அடித்த அரைசதத்தின் மூலம் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது © Twitter

டி20 சர்வதேச போட்டிகளில் இந்தியா சார்பாக அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையை நேற்று இந்திய மகளிர் அணியின் முன்னணி வீரராக மிதாலி ராஜ் படைத்துள்ளார். முன்னதாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர் ரோஹித் ஷர்மா இந்திய சாதனையை நிகழ்த்தினார். அதனை தற்போது மிதாலி ராஜ் முறியடித்துள்ளார்.

இதன்படி பார்த்தால் இந்திய வீரர்கள் ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் தோனி ஆகியோரைவிட அதிக ரன் குவித்த வீரராக மிதாலி முன்னிலையில் உள்ளார்.

ஐசிசி இந்த சாதனையை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. மேலும் தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் மிதாலி அபாரமாக ஆடி ரன் குவித்து வருகிறார். அயர்லாந்துடன் மிதாலி அடித்த அரைசதத்தின் மூலம் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது.

நான்கு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 51 ரன்கள் குவித்தார் மிதாலி. ஒருநாள் போட்டிகளில் மகளிர் அணிகளுக்குள் அதிக ரன் குவித்த வீராங்கனையாகவும் மிதாலி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
விராட் கோலியை மிஞ்சி சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!
விராட் கோலியை மிஞ்சி சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!
"எனக்கு நன்றாக தமிழ் பேசத் தெரியும்" - விமர்சித்தவருக்கு பதிலளித்த மிதாலி ராஜ்!
"எனக்கு நன்றாக தமிழ் பேசத் தெரியும்" - விமர்சித்தவருக்கு பதிலளித்த மிதாலி ராஜ்!
சர்வதேச கிரிக்கெட்டில் 20 வருடங்கள் கடந்த முதல் பெண் வீரரானார் மிதாலி ராஜ்!
சர்வதேச கிரிக்கெட்டில் 20 வருடங்கள் கடந்த முதல் பெண் வீரரானார் மிதாலி ராஜ்!
"கிரிக்கெட் ஆட சச்சின்தான் காரணம்" - பெண்கள் அணி வீராங்கனை ஷஃபாலி
"கிரிக்கெட் ஆட சச்சின்தான் காரணம்" - பெண்கள் அணி வீராங்கனை ஷஃபாலி
சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் மிதாலி ராஜ்!
சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் மிதாலி ராஜ்!
Advertisement