சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் மிதாலி ராஜ்!

Updated: 03 September 2019 15:49 IST

மூத்த கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் சர்வதேச டி20 போட்டிகளில் தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார்.

மூத்த கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் சர்வதேச டி20 போட்டிகளில் தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார். 36 வயதான மிதாலி ராஜ், 2012, 2014 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் பெண்கள் WT20 இன் மூன்று பதிப்புகள் உட்பட 32 டி20 போட்டிகளில் இந்தியாவை வழிநடத்தியுள்ளார். "2006ம் ஆண்டு முதல் டி20 சர்வதேச போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய பின்னர், 2021 ஒருநாள் உலகக் கோப்பைக்கு என்னைத் தயார்படுத்துவதில் எனது ஆற்றலை மையப்படுத்த டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற விரும்புகிறேன். இந்தியாவுக்காக உலகக் கோப்பை வெல்ல வேண்டும் என்பது என்னுடைய கனவாக உள்ளது. அதில் என்னுடைய முழு ஆற்றலையும் செலுத்த வேண்டும், " என்று மிதாலி ராஜ் பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார். "தொடர்ச்சியாக எனக்கு ஆதரவு கொடுத்த பிசிசிஐக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும் தென்னாப்பிரிக்க பெண்கள் அணிக்கு எதிராக ஆடவுள்ள டி20 அணிக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்," என்றார் மிதாலி ராஜ்.

2006 ஆம் ஆண்டில் டெர்பியில் இந்தியா விளையாடிய முதல் டி 20 போட்டியில் மிதாலி ராஜ் கேப்டனாக இருந்தார். அப்போது இங்கிலாந்தை வென்றதிலிருந்து, மிதாலி ராஜ் 88 போட்டிகளில் ஆடியுள்ளார். இதில் அவர்,  2364 ரன்கள் எடுத்தார், டி 20 போட்டிகளில் ஒரு இந்திய பெண் எடுத்த அதிக ரன்கள் இது.

சர்வதேச டி20 போட்டிகளில் 2000 ரன்கள் குவித்த முதல் இந்திய பெண் மிதாலி ராஜ்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய பெண்கள் அணி ஆடவுள்ளது. இந்தப் போட்டி செப்டம்பர் 24ம் தேதி தொடங்கவுள்ளது. பின்னர், பிப்ரவரி-மார்ச் 2020, டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது.

36 வயதான இவர், 50 ஓவர்கள் கொண்ட 2021 உலகக் கோப்பைக்கு கேப்டனாக உள்ளார். அதனால், ஆடும் லெவனில் தானாக தேர்வு செய்யப்பட்டார்.

தேர்வுக் குழுவினர் செப்டம்பர் 5ம் தேதி மும்பையில் சந்தித்து, முதல் மூன்று டி20 போட்டிகளுக்கு அணியை தேர்வு செய்யவுள்ளனர். இந்தத் தொடர் சூரத்தில் நடக்கவுள்ளது. இதனை தொடர்ந்து, பரோடாவில் ஒருநாள் போட்டிகள் நடக்கவுள்ளன. 

ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக ஆடும் இந்திய அணி, டி20 போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதற்கு முன்பாக 6 போட்டிகளை இந்திய அணி தோற்றுள்ளது. ஆனால், இவை அனைத்தையும் சரி செய்ய அணியினரிடம் நீண்ட கால நேரமில்லை.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கு பிறகு இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் செல்லவுள்ளது. அதன்பிறகு டி20 உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கவுள்ளன. டி 20 கிரிக்கெட்டில் அணி எதிர்கொள்ளும் பிரச்னைகளை மிதாலி ராஜ் ஒப்புக் கொண்டார்.

"ஒரு அணியாக டி20 போட்டிகளில் சரி செய்ய வேண்டியது நிறையவுள்ளது. ஆனால், அணியில் இளைஞர்கள் வருவதால், டி20 லீக்கில் அதிக கவனம் செலுத்தி, நாட்டில் உள்ள மற்ற அணிகளுடன் ஆடினால், அனுபவம் கிடைத்து விரைவில் பக்குவம் அடைவார்கள்," என்றார் மிதாலி ராஜ்.

Comments
ஹைலைட்ஸ்
  • டி20 போட்டிகளில் தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார் மிதாலி ராஜ்
  • 32 டி20 போட்டிகளில் இந்தியாவை வழிநடத்தியுள்ளார்
  • முதல் டி20 சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்கு கேப்டனாக இருந்தார்
தொடர்புடைய கட்டுரைகள்
"எனக்கு நன்றாக தமிழ் பேசத் தெரியும்" - விமர்சித்தவருக்கு பதிலளித்த மிதாலி ராஜ்!
"எனக்கு நன்றாக தமிழ் பேசத் தெரியும்" - விமர்சித்தவருக்கு பதிலளித்த மிதாலி ராஜ்!
சர்வதேச கிரிக்கெட்டில் 20 வருடங்கள் கடந்த முதல் பெண் வீரரானார் மிதாலி ராஜ்!
சர்வதேச கிரிக்கெட்டில் 20 வருடங்கள் கடந்த முதல் பெண் வீரரானார் மிதாலி ராஜ்!
"கிரிக்கெட் ஆட சச்சின்தான் காரணம்" - பெண்கள் அணி வீராங்கனை ஷஃபாலி
"கிரிக்கெட் ஆட சச்சின்தான் காரணம்" - பெண்கள் அணி வீராங்கனை ஷஃபாலி
சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் மிதாலி ராஜ்!
சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் மிதாலி ராஜ்!
பெண்கள் டி20 சேலஞ்சுக்கு மிதாலி,மந்தனா, கவுர் கேப்டன்!
பெண்கள் டி20 சேலஞ்சுக்கு மிதாலி,மந்தனா, கவுர் கேப்டன்!
Advertisement