இந்தியாவுக்கு வாய்பில்லை... பாகிஸ்தானுக்கு ரெடி: ஆஸியின் முன்னணி பந்துவீச்சாளர்!

Updated: 13 February 2019 15:01 IST

காயம் காரணமாக இந்திய தொடர் முழுமைக்கும் ஸ்டார்க் இடம்பெற வாய்ப்பில்லை.

Mitchell Starc Says He Might Be Available For Pakistan Series After Missing Out On India Tour
இந்திய தொடரில் இடம் பெற முடியாத ஸ்டார்க், பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் இடம்பெறுவார் என்று கூறப்படுகிறது. © Cricket Australia

காயம் காரணமாக இந்திய தொடரிலிருந்து விலகியுள்ளார் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க். இலங்கையுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இந்திய தொடரில் இடம் பெற முடியாத ஸ்டார்க், பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் இடம்பெறுவார் என்று கூறப்படுகிறது. இந்திய தொடர் முழுமைக்கும் ஸ்டார்க் இடம்பெற வாய்ப்பில்லை. ஆனால் மார்ச்சில் துவங்கும் பாகிஸ்தான் தொடரில் இடம்பெறக்கூடும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியன் கிரிக்கெட் விருதுகள் விழா மெல்பெர்னில் நடைபெற்றது. அதில் பேசிய ஸ்டார்க்கும் மார்ச் 15ல் யூஏஇயில் துவங்கும் பாகிஸ்தான் தொடருக்கு திரும்புவது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.

இந்திய தொடரிலிருந்து உலகக் கோப்பைக்கு தயாராவது துவங்கிவிடும் என்றார் ஸ்டார்க்.

இலங்கை தொடரில் ஸ்டார்க் 2 டெஸ்ட்களில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குறிப்பாக இரண்டாவது டெஸ்ட்டில் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 10/100 என்ற கணக்கில் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

இந்திய தொடரிலும் அடிலெய்ட் மற்றும் பெர்த்தில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

145 ஒருநாள் போட்டி விக்கெட்டுகளையும் மற்றும் 31 டி20 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ள ஸ்டார்க் தான் ஆஸ்திரேலியாவின் முக்கியமான உலகக் கோப்பை பந்து வீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
ஹைலைட்ஸ்
  • காயம் காரணமாக இந்தியாவுடனான போட்டியில் ஸ்டார்க் இடம்பெறவில்லை
  • இலங்கையுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது
  • இந்திய தொடரிலும் அடிலெய்ட், பெர்த்தில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்
தொடர்புடைய கட்டுரைகள்
"எங்களுக்கு இல்லை... இங்கிலாந்துக்குதான் அழுத்தம்" - லயனின் அரையிறுதி ஆருடம்
"எங்களுக்கு இல்லை... இங்கிலாந்துக்குதான் அழுத்தம்" - லயனின் அரையிறுதி ஆருடம்
‘பந்துனா இப்படி போடணும்!’- ஸ்டார்க்கின் ‘ஸ்டன்னிங் யார்க்கர்’; வாவ் சொல்லும் ட்விட்டர் #Video
‘பந்துனா இப்படி போடணும்!’- ஸ்டார்க்கின் ‘ஸ்டன்னிங் யார்க்கர்’; வாவ் சொல்லும் ட்விட்டர் #Video
உலகக் கோப்பை 2019: 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்றது இந்தியா
உலகக் கோப்பை 2019: 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்றது இந்தியா
இந்தியாவுக்கு வாய்பில்லை... பாகிஸ்தானுக்கு ரெடி: ஆஸியின் முன்னணி பந்துவீச்சாளர்!
இந்தியாவுக்கு வாய்பில்லை... பாகிஸ்தானுக்கு ரெடி: ஆஸியின் முன்னணி பந்துவீச்சாளர்!
இந்திய தொடர்: ஆஸ்திரேலிய அணியில் ஸ்டார்க், ஹேசல்வுட் சந்தேகம்!
இந்திய தொடர்: ஆஸ்திரேலிய அணியில் ஸ்டார்க், ஹேசல்வுட் சந்தேகம்!
Advertisement