இந்திய தொடர்: ஆஸ்திரேலிய அணியில் ஸ்டார்க், ஹேசல்வுட் சந்தேகம்!

Updated: 07 February 2019 13:48 IST

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தசைப்பிடிப்பு காரணமாக அணியில் இடம்பெறுவது சந்தேகம் என்று கூறப்பட்டுள்ளது.

Mitchell Starc, Josh Hazlewood Doubtful For Australia
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான டி20 போட்டி பெங்களுருவில் பிப்ரவரி 24ம் தேதி முதல் துவங்குகிறது. © AFP

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆட இன்னும் சில வாரகாலமே உள்ள நிலையில், அந்த அணியின் முன்னணி வீரர்களின் காயம் அந்த அணிக்கு பின்னடைவாக உள்ளது. பெங்களுருவில் பிப்ரவரி 24ம் தேதி முதல் டி20 போட்டி துவங்குகிறது. ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தசைப்பிடிப்பு காரணமாக அணியில் இடம்பெறுவது சந்தேகம் என்று கூறப்பட்டுள்ளது. அது மற்றுமின்றி 2 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளிலும் ஆடுவது சந்தேகமே என்றும் கூறப்பட்டுள்ளது.

ஸ்டார்க்கின் இழப்பு ஆஸ்திரேலியா உலகக் கோப்பைக்கு தயாராவதை பாதிக்கும். அதுமட்டுமின்றி மற்றொரு வேகப்பந்துவீச்சாளரான ஹேசல்வுட்டும் முதுகு வலியால் அவதிப்படுவதால் அவரும் தொடரில் இடம்பெறுவது சந்தேகமே என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் ஸ்டீவ் ஸ்மித் உலகக் கோப்பைக்கு முன்பு ஐபிஎல் போட்டிகளின் போது தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழங்கையில் நடந்த அறுவை சிகிச்சையிலிருந்து குணமாக 6 வாரங்கள் ஆகும் என்று கூறப்பட்டிருந்தது. அதோடு அவர் மீதான சர்வதேச தடை நீங்குவதற்கும் சரியாக இருக்கும் எனப்படுகிறது.

அவரது மேனேஜர் கூறும் போது '' ஸ்மித் ஐபிஎல்லில் ஆடுவார். அதன் பின் உலகக் கோப்பை, ஆஷஸ் என தனது கிரிக்கெட் வாழ்க்கையை எப்போதும் போல தொடருவார்" என்றார்.

ஸ்மித் மற்றும் வார்னர் மீதான தடை மார்ச் 29ம் தேதியோடு முடிகிறது. இதற்கிடையே ஆஸ்திரேலியா 6 இருநாடுகளுக்கிடையேயான தொடரை தோற்றுள்ளது. கடைசியாக ஆஸ்திரேலியா 2016ல் வெளிநாட்டு தொடரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Comments
ஹைலைட்ஸ்
  • ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் வரும் பிப்ரவரி 24ம் தேதி துவங்குகிறது
  • மிட்செல் ச்டார்க் தசைப்பிடிப்பு காரணமாக ஓய்வில் உள்ளார்
  • ஹேசல்வுட்டும் முதுகு வலியால் அவதிப்பட்டு வருகிறார்
தொடர்புடைய கட்டுரைகள்
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
"எங்களுக்கு இல்லை... இங்கிலாந்துக்குதான் அழுத்தம்" - லயனின் அரையிறுதி ஆருடம்
"எங்களுக்கு இல்லை... இங்கிலாந்துக்குதான் அழுத்தம்" - லயனின் அரையிறுதி ஆருடம்
‘பந்துனா இப்படி போடணும்!’- ஸ்டார்க்கின் ‘ஸ்டன்னிங் யார்க்கர்’; வாவ் சொல்லும் ட்விட்டர் #Video
‘பந்துனா இப்படி போடணும்!’- ஸ்டார்க்கின் ‘ஸ்டன்னிங் யார்க்கர்’; வாவ் சொல்லும் ட்விட்டர் #Video
உலகக் கோப்பை 2019: 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்றது இந்தியா
உலகக் கோப்பை 2019: 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்றது இந்தியா
இந்தியாவுக்கு வாய்பில்லை... பாகிஸ்தானுக்கு ரெடி: ஆஸியின் முன்னணி பந்துவீச்சாளர்!
இந்தியாவுக்கு வாய்பில்லை... பாகிஸ்தானுக்கு ரெடி: ஆஸியின் முன்னணி பந்துவீச்சாளர்!
Advertisement