இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் மிட்செல் மார்ஷ் இடம்பெறவில்லை!

Updated: 10 January 2019 12:44 IST

"முதல் போட்டியில் மட்டும் மார்ஷ் ஆடமாட்டார்" என்று பயிற்சியாளர் லாங்கர் கூறியுள்ளார்.

India vs Australia: Mitchell Marsh Hospitalised, Ruled Out Of 1st ODI Against India
மிட்செல் மார்ஷ்க்கு பதிலாக ஆஸ்திரேலிய பிக்பேஷில் பெர்த் ஸ்காட்சர்ஸ் அணிக்காக ஆடிவரும் ஆஷ்டன் டர்னர் சேர்க்கப்பட்டுள்ளார். © Twitter

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி, ஜனவரி 12ம் தேதி துவங்கி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது.  இந்தத் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் இடம் பெற்றிருந்த மிட்செல் மார்ஷ் வயிற்று வலி காரணமாக திடீரென அணியிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய பிக்பேஷில் பெர்த் ஸ்காட்சர்ஸ் அணிக்காக ஆடிவரும் ஆஷ்டன் டர்னர் சேர்க்கப்பட்டுள்ளார். "முதல் போட்டியில் மட்டும் மார்ஷ் ஆடமாட்டார். அவரது சிகிச்சை அறிக்கைக்கு பின், தொடரில் இணைவது குறித்து முடிவெடுக்கப்படும்" என்று பயிற்சியாளர் லாங்கர் கூறியுள்ளார்.

டர்னர், பிக்பேஷ் லீக்கின் மூன்று ஆட்டங்களில் முறையே 43,47,60 ரன்களை குவித்துள்ளார். இதில் இரண்டு போட்டிகளில் ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பயிற்சியாளர் லாங்கர் இந்த புதிய வீரர் குறித்து பேசுகையில் ''எனக்கு நன்கு நியாபகம் இருக்கிறது. மைக்கேல் ஹசியை அணியில் சேர்க்கும் போது அணியில் விக்கெட்டுகளுக்கு நடுவே வேகமாக ஓடும் ஒரு வீரர்தான் தேவை என்று யோசித்தார்கள். ஆஷ்டன் டர்னர் எனக்கு ஹசியை நினைவு படுத்துகிறார்" என்றார். 

மாற்றியமைக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணி:

பின்ச்(கேப்டன்), கவாஜா, ஷான் மார்ஷ், ஹேண்ட்ஸ் கோம்ப், மேக்ஸ்வெல், ஆஷ்டன் டர்னர், அலெக்ஸ் கேரே, ரிச்சர்ட்ஸன், ஸ்டான்லேக், மெஹன்ட்ராஹ்ப், பீட்டர் சிடில், நாதன் லயன், ஆடம் ஸம்பா.

இந்திய அணி:

கோலி, ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல், தவான், ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், தோனி, ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், சாஹல், ஜடேஜா, புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, ஷமி, சிராஜ்

Comments
Advertisement