"என்னை மிஸ் செய்கிறீர்களா?" - பிசிசிஐயிடம் கேட்ட யுவேந்திர சஹால்!

Updated: 08 August 2019 14:47 IST

"சஹால் டிவி" டி20 தொடரில் இடம்பெறவில்லை. சஹாலுக்கும் குல்தீப் யாதவுக்கும் மூன்று டி20 போட்டிகளில் ஓய்வளிக்கப்பட்டது. இருவரும் ஒருநாள் போட்டிக்கு அணியில் இணையவுள்ளனர்.

Yuzvendra Chahal Posts Cheeky "Missing Me" Tweet After Rohit Sharma Interviews Rishabh Pant
ரோஹித் ஷர்மாக்கு 3வது டி20 போட்டி ஓய்வளிக்கப்பட்டது, அவர் பிசிசிஐ.டிவிக்காக பன்ட்டை இண்டர்வியூ எடுத்தார். © Twitter

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-0 என்று வென்றுள்ளது. இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ரிஷப் பன்ட் 42 பந்தில் 65 ரன்கள் குவித்தார். இதில், 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களும் அடங்கும். ரோஹித் ஷர்மாக்கு 3வது டி20 போட்டி ஓய்வளிக்கப்பட்டது, அவர் பிசிசிஐ.டிவிக்காக பன்ட்டை இண்டர்வியூ எடுத்தார். இந்த வீடிவோவுக்கு சஹால் ட்விட் செய்திருந்தார். இவர் இந்திய அணி வீரர்களை "சஹால் டிவி"க்கு இண்டர்வியூ செய்வது வழக்கம். 

பிசிசிஐயின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் "குயானா டைரிஸ்" என்று எழுதி, "@ImRo45 & @RishabhPant17. இரண்டு குறைந்த ரன்கள் மற்றும் போட்டி வெல்லும் அரைசதம். கடைசி டி20 போட்டியில் எப்படி சாத்திமானது என்று ஹிட்மேன் பன்ட்டிடம் கேட்கிறார்." என்று பதிவிட்டது.

பிசிசிஐ ட்விட்டர் பக்கத்தை குறிப்பிட்டு சஹால், "என்னை மிஸ் செய்கிறீர்களா @BCCI." என்று பதிவிட்டார்.

"சஹால் டிவி" டி20 தொடரில் இடம்பெறவில்லை. சஹாலுக்கும் குல்தீப் யாதவுக்கும் மூன்று டி20 போட்டிகளில் ஓய்வளிக்கப்பட்டது.

அடுத்து இந்தியா ஆடவிருக்கும் மூன்று ஒருநாள் போட்டிக்கு சஹால் இணைவார் என்று கூறப்படுகிறது. டி20 மூன்றாவது போட்டி நடந்த குயானாவில் உள்ள புரோவிடன்ஸ் மைதானத்தில் தான் முதல் ஒருநாள் போட்டி நடக்கவுள்ளது. டி20 தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

பிசிசிஐ டி.விக்காக ரோஹித் ஷர்மாவிடம் பேசிய பன்ட், "என்னுடைய இன்னிங்ஸை கண்டு மகிழ்ச்சியடைகிறேன். என்னால் அதிக ரன்கள் எடுக்க முடியவில்லை அதனால் நான் விரக்தியடந்தேன். ஆனாலும் நான் தொடர்ந்து போராடினேன், இன்று அதற்கான முடிவு கிடைத்துள்ளது". என்றார்.

"சில நேரம் அழுத்தம் இருக்கும். சில நேரம் விளையாட்டை ரசிப்பேன். ஒட்டுமொத்த அணியும், சீனியர் வீரர்களும் என் மீது அதிகபடியான நம்பிக்கை வைத்திருப்பது எனக்கு மிகப் பெரிய நம்பிக்கை அளிக்கிறது. ஒரிரு போட்டிகளில் தோற்றாலும் அணியினர் எப்போதும் உடனிருப்பது எனக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது. அணியினரின் ஆதரவு ஒரு பெரிய நம்பிக்கையாக உள்ளது," என்றார் பன்ட்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"உன்னைவிட 999 ரன்கள் அதிகம்" - சாஹலை கிண்டல் செய்த கே.எல்.ராகுல்
"உன்னைவிட 999 ரன்கள் அதிகம்" - சாஹலை கிண்டல் செய்த கே.எல்.ராகுல்
"என்னை விட 50 டெஸ்ட் போட்டிகள் அதிகம்" - கோலிக்கு வாழ்த்து சொன்ன சஹால்!
"என்னை விட 50 டெஸ்ட் போட்டிகள் அதிகம்" - கோலிக்கு வாழ்த்து சொன்ன சஹால்!
2வது ஒருநாள்: "என்ன ஒரு டெடிக்கேஷன்"... ரிஷப் பன்ட்டை பாராட்டிய சஹால்!
2வது ஒருநாள்: "என்ன ஒரு டெடிக்கேஷன்"... ரிஷப் பன்ட்டை பாராட்டிய சஹால்!
"என்னை மிஸ் செய்கிறீர்களா?" - பிசிசிஐயிடம் கேட்ட யுவேந்திர சஹால்!
"என்னை மிஸ் செய்கிறீர்களா?" - பிசிசிஐயிடம் கேட்ட யுவேந்திர சஹால்!
29வது பிறந்தநாளை கொண்டாடும் சஹாலுக்கு ட்விட்டரில் வாழ்த்து மழை!
29வது பிறந்தநாளை கொண்டாடும் சஹாலுக்கு ட்விட்டரில் வாழ்த்து மழை!
Advertisement