மிஸ்பா கோச், வாக்கர் பந்துவீச்சு கோச் - பாகிஸ்தான் வாரியம் அதிரடி

Updated: 04 September 2019 17:00 IST

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் பாகிஸ்தான் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Misbah-ul-Haq New Pakistan Head Coach And Chief Selector, Waqar Younis Named Bowling Coach
மிஸ்பா மற்றும் வாக்கர் இருவரும் மூன்று ஆண்டுகளுக்கு பயிற்சியாளர்களாக இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. © AFP

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் பாகிஸ்தான் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் மிஸ்பாவுக்கு தேர்வுக்குழு சேர்மன் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அணித்தேர்வின் முடிவையும் அவர் எடுக்கலாம். அடுத்ததாக வாக்கர் யூனிசை பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மிஸ்பா மற்றும் வாக்கர் இருவரும் மூன்று ஆண்டுகளுக்கு பயிற்சியாளர்களாக இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. தேர்வுக்குழு சேர்மனாக இருப்பதாக ஆறு முதல் தர கிரிக்கெட் வாரியங்களுக்கு தலைமை தாங்குவார் என்று கூறப்பட்டுள்ளது.

பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பதில் ஐந்து பேர் கொண்ட குழுவின் ஒருமித்த கருத்தாக மிஸ்பா இருந்தார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

2017 சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற மிஸ்பா கூறுகையில் '' மீண்டும் பாகிஸ்தான் அணியோடு இணைந்து செயல்படுவதும் மகிழ்ச்சியும், கூடுதல்; பொறுப்பையும் தருகிறது என்றார். அனைத்து தருணங்களிலும் கிரிக்கெட் எனும் காற்றை சுவாசிக்க முடிகிறது.

என் மீதான எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கும், எனக்கு இது சவாலானதாகவும், பாகிஸ்தான் அணியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுவதாகவும் அமையும் என்றார்.

இவர்களின் முதல் பணி இலங்கைக்கு எதிரான 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலிருந்து துவங்குகிறது. இந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தான் மோசமான தோல்வி மூலம் நாக் அவுட் சுற்ரில் வெளியேறியது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் தொடர் பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியாவுடன் துவங்குகிறது. இது பிஸ்பனில் நவம்பர் 21ம் தேதி துவங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் அடிலெய்டில் நவம்பர் 29ம் தேதி துவங்குகிறது.

மிஸ்பா மற்றும் வாக்கர் இருவரும் 2014 மே துவங்கி 2016 ஏப்ரல் வரை பாகிஸ்தானின் தலைமஇ பயிற்சியாளர்களாயக இருந்தனர்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
அக்ரம், மிஸ்பா மீது அதிருப்தியை வெளிப்படுத்திய மிக்கி ஆர்தர்!
அக்ரம், மிஸ்பா மீது அதிருப்தியை வெளிப்படுத்திய மிக்கி ஆர்தர்!
பத்திரிகையாளருக்கு மிஸ்பா உல் ஹக் அளித்த வித்தியாசமான பதில்!
பத்திரிகையாளருக்கு மிஸ்பா உல் ஹக் அளித்த வித்தியாசமான பதில்!
பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ் செய்த ட்விட்... கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்!
பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ் செய்த ட்விட்... கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்!
"வீரர்களுக்கு இனி பிரியாணி இல்லை" - பாகிஸ்தான் பயிற்சியாளரின் டயட் ப்ளான்!
"வீரர்களுக்கு இனி பிரியாணி இல்லை" - பாகிஸ்தான் பயிற்சியாளரின் டயட் ப்ளான்!
மிஸ்பா கோச், வாக்கர் பந்துவீச்சு கோச் - பாகிஸ்தான் வாரியம் அதிரடி
மிஸ்பா கோச், வாக்கர் பந்துவீச்சு கோச் - பாகிஸ்தான் வாரியம் அதிரடி
Advertisement