அக்ரம், மிஸ்பா மீது அதிருப்தியை வெளிப்படுத்திய மிக்கி ஆர்தர்!

Updated: 30 September 2019 00:34 IST

பாகிஸ்தான் அணியின் முன்னாள் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் முன்னாள் கேப்டன்கள் வாசிம் அக்ரம், மிஸ்பா குறித்த கருத்துகளை சென்ற மாதம் முதல் தெரிவித்திருந்தார்.

Mickey Arthur Says Remarks About Wasim Akram, Misbah-Ul-Haq Were "Dignified"
அணி நிர்வாகம் ஆர்த்தரை தொடரலாமா என்ற விவாதத்துக்கு மிஸ்பாவை பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழு தலைவராக நியமித்து முற்றுப்புள்ளி வைத்தது. © AFP

பாகிஸ்தான் அணியின் முன்னாள் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் முன்னாள் கேப்டன்கள் வாசிம் அக்ரம், மிஸ்பா குறித்த கருத்துகளை சென்ற மாதம் முதல் தெரிவித்திருந்தார். அது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. உலகக் கோப்பையில் மோசமான ஆட்டத்தை பாகிஸ்தான் பதிவு செய்ததால் அணியை மேம்படுத்த வாசிம் மற்றும் மிஸ்பாவை பாகிஸ்தான் வாரியம் நியமித்தது.

அணி நிர்வாகம் ஆர்தரை தொடரலாமா என்ற விவாதத்துக்கு மிஸ்பாவை பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழு தலைவராக நியமித்து முற்றுப்புள்ளி வைத்தது.

நான் நம்பியவர்கள் அதற்கு தகுதியான நபர்களாக இல்லை என்று ஆர்த்தர் தனது அதிருப்தியை பெளிப்படுத்தியிருந்தர்.

மிஸ்பாவும் அந்த கமிட்டியில் இருந்தார். ஆனால் அவர் எந்த கருத்தையும் முன்வைக்கவில்லை என்றார்.

நான் இங்கு மிஸ்பா குறித்தும் கருத்து தெரிவிக்கவில்லை. அவர் நன்கு பணியாற்றுவார். பாகிஸ்தான் வாரியம் அவரை சரியாகதான் நியமித்துள்ளது. இந்த பணியை ஒவ்வொரு நொடியும் நான் விரும்பி செய்ததால் அது எனக்கு வருத்தமளிக்கிறது என்றார்.

மூன்று வருடங்கள் தனக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்ததாகவும், அப்போது பாகிஸ்தானை மிகவும் நேசித்ததாகவும் கூறினார்.

வாசிம் மற்றும் மிஸ்பா உலகக் கோப்பை அழுத்தத்திலிருந்து அணியை மீட்பார்கள் என்றார் ஆர்தர்.

இது குறித்து பேசிய வாசிம் "நான் பாகிஸ்தானுக்காக ஆடியுள்ளேன். அதனை தலைமை பயிற்சியாளராக இருபது பெரிய பெருமை" என்றர்.

ஆர்தர் விமர்சனங்களுக்கு பதிலளித்த மிஸ்பா, அது அவருடைய கருத்து, இன்னும் எனக்கு ஆர்தர் நல்ல நம்பர்தான் என்றார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
அக்ரம், மிஸ்பா மீது அதிருப்தியை வெளிப்படுத்திய மிக்கி ஆர்தர்!
அக்ரம், மிஸ்பா மீது அதிருப்தியை வெளிப்படுத்திய மிக்கி ஆர்தர்!
பாகிஸ்தான் அணியின் கேப்டன், பயிற்சியாளர் மாற்றமா?
பாகிஸ்தான் அணியின் கேப்டன், பயிற்சியாளர் மாற்றமா?
Advertisement