"இந்திய ஆடுகளங்கள் சலிப்பை ஏற்படுத்துகின்றன" - மைக்கேல் வாகன்

Updated: 11 October 2019 19:28 IST

முதல் மூன்று நான்கு நாட்களுக்கு பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருப்பதால் அவர்களுக்கு "சலிப்பு" ஏற்படுகிறது என்று விவரித்தார் மைக்கேல் வாகன்.

Michael Vaughan Slams Indian Test Pitches As Boring, Twitter Fumes
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் கோலி இரட்டை சதமடித்தார். © Twitter

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் கோலி இரட்டை சதமடித்தார். கோலிக்கு முன்பு, தொடக்க வீரர் மயங்க் அகர்வால் முந்தைய நாளில் தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தை அடித்தார். இந்த இரண்டு சதங்களும் ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் முகத்திலும் மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் இந்தியாவில் டெஸ்ட் போட்டி ஆடுகளங்களை அவதூறாகப் பேசினார், முதல் மூன்று நான்கு நாட்களுக்கு பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருப்பதால் அவர்களுக்கு "சலிப்பு" ஏற்படுகிறது என்று விவரித்தார். மைக்கேல் வாகனை கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சிக்கத் தொடங்கினர். உடனே ஆங்கில ரசிகர்களும் தங்கள் முன்னாள் கேப்டனுக்கு ஆதரவாக முன்வந்தனர். இது சமூக வலைதளத்தில் பரபரப்பான விவாதத்தைத் தூண்டியது.

"இந்தியாவில் டெஸ்ட் போட்டி கிரிக்கெட் ஆடுகளங்கள் சலிப்பை ஏற்படுத்துகின்றன ... முதல் 3/4 நாட்கள் போட்டி பேட்டிற்கு சாதகமாக உள்ளது ... பந்து வீச்சாளருக்கு கூடுதல் செயல்பாடு தேவை... இது இந்த நாள் குறித்த என் சிந்தனை ... #INDvSA , ”என்று வாகன் ட்விட் செய்துள்ளார்.

வாகனின் ட்விட்டுக்கு பதிலளித்த இந்திய ரசிகர்கள், ஆங்கில வானிலை குறித்து விமர்சித்ததோடு, உலகக் கோப்பை 2019 மற்றும் ஆஷஸ் 2019 முழுவதும் மழை இடையூறு அளித்ததை வாகனுக்கு நினைவுப்படுத்தினர்.

நடந்து வரும் போட்டியைப் பற்றி பேசுகையில், விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச ஸ்கோரை அடித்தார், இந்தியா முதல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவிக்க உதவியது.

இந்த இன்னிங்ஸுடன், விராட் கோலி புகழ்பெற்ற டான் பிராட்மேனின் கேப்டனாக 150க்கும் மேற்பட்ட ரன்களை பெற்ற சாதனையை முறியடித்தார்.

இந்திய கேப்டன் மற்றும் ஆஸ்திரேலிய டான் பிராட்மேன் இருவரும் 8 என்று சமநிலையில் இருந்ததனர். புனே டெஸ்ட்டுக்கு பிறகு, கோலி கேப்டனாக 150 ரன்களை 9வது முறையாக கடந்துள்ளார்.

2 வது நாளில் இந்திய பேட்ஸ்மேன்கள் இந்த ஆட்டத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி 600 ரன்கள் கடந்தனர். இந்தியா இந்த நாளில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது. கேஷவ் மகாராஜின் பந்துவீச்சில் அஜின்கியா ரஹானே 59 ரன்களுக்கு ஆட்டமிழந்தார், ரவீந்திர ஜடேஜா தொடரின் முதல் அரைசதத்தை அடித்து தனது சதத்தை வெறும் ஒன்பது ரன்களில் தவறவிட்டார். இந்தியா தனது முதல் இன்னிங்ஸை 601/5 என்ற நிலையில் அறிவித்தபோது இந்திய கேப்டன் 254 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"கோபி பிரயன்ட் இறப்பு செய்தியை கேட்டு முற்றிலும் நொறுங்கிப்போனேன்" - விராட் கோலி!
"கோபி பிரயன்ட் இறப்பு செய்தியை கேட்டு முற்றிலும் நொறுங்கிப்போனேன்" - விராட் கோலி!
2வது டி20 வெற்றிக்கு பிறகு விராட் கோலி குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்தார்!
2வது டி20 வெற்றிக்கு பிறகு விராட் கோலி குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்தார்!
New Zealand vs India 2nd T20: 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா
New Zealand vs India 2nd T20: 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா
"போட்டியை முடிக்கும் கலையை ரோஹித் மற்றும் கோலியிடம் கற்றுக்கொண்டேன்" - ஸ்ரேயாஸ்
"போட்டியை முடிக்கும் கலையை ரோஹித் மற்றும் கோலியிடம் கற்றுக்கொண்டேன்" - ஸ்ரேயாஸ்
முதல் டி20 போட்டியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா!
முதல் டி20 போட்டியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா!
Advertisement